எல்லாம் நீயே
உன்னழகை எனக்கு மட்டும்
உயிரே நீ தரவேண்டும்
என் விரலை தந்து விட்டேன்
எடுத்து நீ வருட வேண்டும்
செந்தமிழும் உன்னை வந்து
செவ்வந்தியே கொஞ்ச வேண்டும்
செவ்விதழ்கள் இரண்டை மட்டும்
சேர்த்தெனக்கு தரவேண்டும்
ஆள் இல்லா உலகத்திலே
அடியே குடி புகுவோமா .?
அங்கு மட்டும் இல்லறத்தை
அப்படியே ருசிப்போமோ …?
நீயும் நானும் தனிமையில
நிமிடங்களை தொலைக்க வேண்டும்
கற்பனையில் கண்டவற்றை
காட்சிகளாய் தீட்ட வேண்டும்
உன் மடியை எனக்கு மட்டும்
உறங்க நீ தரவேண்டும்
உலகத்தில் நீ மட்டும்
உயிரோடு இருக்க வேண்டும் …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -26-10-2020