உன்னால் துடிக்கும் இதயம்

உன்னால் துடிக்கும் இதயம்

உன்னால் துடிக்கும் இதயம்

எழுதாத காகிதத்தில்
எழுதி வைத்த நினைவுகளை
எடுத்து படிக்கையில
ஏங்கி மனம் துடிக்குதே

புதைத்து வைத்த ஆசைகளை
புரட்டி எடுத்து பார்க்கையில
கண்ணீர் மட்டும் பரிசாச்சே
கல்லாகி மனம் போச்சே

தோகை மயில் ஆடையில-உன்
தொங்கும் கூந்தல் தெரியுமடி
பாடி குயில் போகையில – உன்
பாட்டு ஒலிக்குமடி

எனெக்கெனவே நீ ஆக்கி
எடுத்து வந்த உணவுகளோ
இன்று நினைத்தாலும் ருசிக்குதடி
இன்றும் மனம் தேடுதடி

கை பேசி இல்லா காலத்தில – உன்
கை வரைந்த கடிதங்களை
தூசி தட்டி படித்தே
தூரிகையால் வரைகிறேன்

தொலையாமல் நெஞ்சுக்குள்
தொல்லை தருகிறாய்
தொடர்பு இன்றி பிரிந்தாலும் – தினமுனை
தொட்டு தொட்டே பேசுகிறேன் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-04-2023