உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

Spread the love
எடை கூடுவதற்கான காரணங்கள்

அதிக எடை, பருத்த உடல் எடை என்பது இன்றைய கால கட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது

. இந்த அதிக எடையுடன் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என கைகோர்த்து வருகின்றது. சுமார் 34 சதவீதம்

பெரியோர்களும், 19 சதவீதம் குழந்தைகளும் கூடுதல் எடையுடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்கள் உடல் எடை கூடுவது என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல.

பலர் அவர்களின் முன்னோர்களை விட அதிக எடையுடன் இருக்கின்றனர். அதனை குறைக்கவும் கஷ்டப்படுகின்றனர்.

ஆனால் உணவு, பயிற்சி இவை மட்டும் இன்றி வேறு சில காரணங்களும் எடை கூடுதலுக்கு காரணமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

 • சூழ்நிலையும் உடல் எடை எடை கூடுதலுக்கு காரணமாக அமைகின்றது. நமது உணவு, நீர், காற்று, கட்டிடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என
 • பலவற்றில் ரசாயன கலவைகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இவை அனைத்தும் மனித உடலின் செயல்திறனை மாற்றி நாளமில்லா சுரப்பிகளை
 • தாக்குவதன் மூலம் உடல் எடை கூடுதல் ஏற்படுகின்றது.
 • பிளாஸ்டிக், அலுமினியம் இவற்றில் உள்ள
 • நச்சுப்பொருட்கள் உடலில் சேர்ந்து விடுகின்றன.
 • நீரில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள்.
 • நாம் பயன்படுத்தும் தரம் குறைவான சுகாதார பொருட்கள் இவை ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
 • பல ரசாயனங்களை நாம் சுவாசிக்கின்றோம். இவை எல்லாம் 100 வருடங்களுக்கு முன்பு இருந்ததில்லை. இவை நாகரீக உலகின் மாற்றங்கள்.
 • நம் பல பூச்சி கொல்லி மருந்துகள்.
 • பல மருந்துகளை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

மேற்கூறிய காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது. ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன.

குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அழிகின்றன. உடலில் வீக்கம் ஏற்படுகின்றது.

 • ஓயாத மனஉளைச்சலில் வாழ்கின்றோம். இப்படிக்கூடும் பல்வேறு காரணங்களாலும் உடலில் எடை கூடுதல் ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.உடல் எடை

இதற்கான தீர்வு தான் என்ன?

 • இயற்கையோடு ஒன்றி இருப்போம்.
  தேவையான அளவு 8 மணி நேர தூக்கம் அவசியம்.
 • அளவான உப்பினை உபயோகிப்போம்.
 • வெள்ளை சர்க்கரை, அதிக இனிப்புகள் இவற்றினைத் தவிர்ப்போம்.
 • சோடா வேண்டாம்.

இப்படி சில வழிமுறைகளையும் சரியான

உணவு உடற்பயிற்சி இரண்டினையும் கடைப்பிடிக்கும் போது

கூடுதல் எடை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சிறந்த உடல் நலத்திற்கான சில டிப்ஸ்கள் :

 • உடற்பயிற்சி, உணவு முறை, முறையான தூக்கம்
 • இவை உடல் நலத்தின் மூன்று தூண்கள் ஆகும்.
 • வறுத்த, பொறித்த உணவுகளையும், தெருக்களில் சுகாதாரமற்று விற்கும் உணவுகளையும் தவிர்ப்போம்.
 • காலையில் தேனும், எலுமிச்சை சாறும் மிக நல்லது.
  என ஆயுர்வேதம் வலியுறுத்துகின்றது.
 • வாரத்தில் ஓரிரு வேளையாவது உண்ணாவிரதம் இருக்கலாம்.
 • தினம் காலை உணவினை தவிர்க்கவே கூடாது.
 • கிரீன் டீ நல்ல பயன் அளிக்கும்.
 • மெதுவாக உண்ண பழகுங்கள். ஒவ்வொரு கவள உணவினையும் 32 முறை நன்கு மெல்லுங்கள் என்று கூறப்படுகின்றது. முடியுமா?
மனித உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
 • தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக உணவினை முடித்துவிடுங்கள்.
 • பழங்களை தனியாகவும், காய்கறிகளைத் தனியாகவும் உண்ணுங்கள். ஆனால் பழங்கள், காய்கறிகளை நன்கு சேர்த்துக்கொள்ளுங்கள்.
 • நார் சத்து உணவே அவசியம்.
 • வானவில் நிறங்கள் அனைத்தும் உங்கள் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.
 • விருந்துக்கு செல்வதற்கு முன்னால் வீட்டில் உண்டுவிட்டு செல்லுங்கள்.
 • நெல்லி சாறு மற்றும் தேனை காலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 • நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
 • ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடங்கள்.
 • 2 மணிக்கொரு முறை 2 நிமிடங்கள் கை, கால் முதுகினை நீட்டி மடக்கி சிறு பயிற்சி செய்யுங்கள்.
 • முடிந்த பொழுதெல்லாம் கண்ணை மூடி திறங்கள். இது தானாகவே நிகழும் என்றாலும் கவனம் கொண்டு சில முறை செய்யுங்கள்.
 • சிரிப்பு பயிற்சியினை காலையில் செய்யுங்கள்.

சி மார்பக புற்று நோய்: மார்பக புற்று நோயினைப் பற்றிய விழிப்புணர்வினை மருத்துவ உலகம் பெண்களிடையே நன்கு ஏற்படுத்தி உள்ளது.

மார்பகத்தில் கட்டி, உருண்டை போன்ற ஒரு உறுத்தல் இவைகளை சுய பரிசோதனை மூலமும், மருத்துவ பரிசோதனை மூலமும் கண்டறிந்து சிகிச்சை பெற

வேண்டும் என்ற உண்மைகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

இதில் மேலும் சில கூடுதல் செய்திகளை அறிந்து கொள்வோம்.மார்பகத்தில் சிறுகுழிவு, தோல் பின் வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சரும பாதிப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இவை மார்பக சரும பாதிப்பிற்கும் பல காரணங்கள் உண்டு. மார்பக உள்ளாடை மிக இருக்கமாக இருந்தாலும் சரும

பாதிப்பு ஏற்படும். மார்பகத்தில் திடீரென சிகப்பு, வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பொதுவாக மார்பகத்தில் இருந்து திரவம் வடிந்தால் கவனம் தேவை. இது கர்ப்ப காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கவலைக்கு உரியது அல்ல.

பெண் மார்பத்தில் கறுப்பு புள்ளி, திட்டுகள் இருந்தால் சரும நிபுணரை அணுக வேண்டும்.

சிகப்பு திட்டுகள் இருந்தாலும் அதே போல் சரும நிபுணர் ஆலோசனையை உடனடியாக பெற வேண்டும்.மார்பக காம்பிலும்,

அதனை சுற்றிய பகுதியிலும் எந்த வித மாறுதல்கள் ஏற்பட்டாலும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.


மேலும்மார்பக சருமத்தில் மாறுதல்

வீக்கம், வலி உடல் எடை

மார்பக உருவில் மாற்றம்
இப்படி எந்த மாறுதல்களுக்கும் உடனடியாக மருத்துவ உதவி பெற்றால் எளிதில் தீர்வு பெறலாம்.

ருத்துவம் மிக நல்ல முன்னேற்றத்தினை பெற்றுள்ளது. அதனின் முழுபயனை அனைவரும் பெற வேண்டும்.

Leave a Reply