இவளுடன் வாழ விடு ..!

இவளுடன் வாழ விடு ..!

காத்திருந்தேன் நேற்று வரை
காணவில்லை நீ மயிலே
கண் விழித்து நானெழுந்தேன்
கண்ணெதிரே நீ குயிலே

முந்தினத்து கற்பனைகள்
முத்த மழை பொலிந்து விட
வெட்கத்தில நீ தவித்தாய்
வேர்வையில உடல் குளித்தாய்

பக்கத்தில நீ இருக்க
பகலிரவு தெரியவில்லை
சொர்க்க மதாய் நீ விளங்க
சோகமதை காணவில்லை

இறக்கும் வரை உன்னுடனே
இதயமே இருக்க வேண்டும்
இத்தனை நாள் வேண்டுதலை
இறைவா நீ தர வேண்டும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply