இவன் போல நீ எழு

Spread the love

இவன் போல நீ எழு

எதிரிக்கு அடங்கா எழுவான்- இவன்
எண்திசை காட்டும் உதயோன்
அடிமைக்கு அடங்கா கிழக்கு- இவன்
அறத்திலே வெடிக்கின்ற துவக்கு

எதிரிக்கும் எழுகின்ற வியப்பு- இவன்
எரிகின்ற எங்கள் நெருப்பு
வீரத்தில் பாய்கின்ற புலி – இவன்
விடுதலை முழங்கிடும் ஒலி

தளிர்த்திடும் முளைகளின் ஒளி- இவன்
தடத்திலே சிக்காத எலி
வீரத்தில் முளையிடும் முளை – இவன்
வீரம் பேசிடும் நாளை

வீழ்சியில் எழுந்த ஏவுகணை – இவன்
வீரம் பேசிடும் போர்முனை
வீழாது உழுதிடும் ஏர்முனை- இவன்
விடுதலை பேசிட நீமுனை ….

வன்னி மைந்தன்
ஆக்கம் 18-12-2021

    Leave a Reply