அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo

Spread the love

அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo

இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்

,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது

இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .


இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை

மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்

.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,


மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .


மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற

போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .


இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …

இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன

தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply