இப்போ ஏன் அழுகிறாய் ..?

Spread the love

இப்போ ஏன் அழுகிறாய் ..?

அப்பன் பேர் தெரியா
அநாதை என்றவனே
ஓப்பாரி வைக்குதடா- ஊர்
ஓடி ஓளிவதென்ன

தப்பேதும் இல்லாமல்
தாராளம் ஒதுக்கியவா
பிச்சை எடுக்கிறாயே– நாட்டை
பிச்சை ஆக்கினாயே

ஆள்தல் புரியாது
ஆள வந்தவேன
கேடு பார்த்தாயா
கேவலம் கெட்டாயே

ஓடி ஓளிந்திடத்தான்
ஓடி வந்தாயோ
நாட்டை விற்றிடத்தான்
நாடு வந்தாயோ

சந்தி சிரிக்குதடா
சகலகலா வல்லமையே
பொந்து இருக்கென்று
போய் நுழைய கூடாது

வம்பு இதுவென்றே
வாழ்தல் கூடாது
பந்தி இருக்கென்று
பல் இழிக்க கூடாது

அந்தி மலரும்
அது மறத்தல் கூடாது
தொண்டு செய்தபின்
சொல் திரிதல் கூடாது

பல் துளக்கா விடின்
பகலும் விடியாது
சிந்தை துளக்காவிடின்
சிகரம் எட்டாது

பார்த்தாயா நீ இன்று
படை திரளும் கோலத்தை
அதர்மத்தின் கோலனே
அழிந்திடடா நீ இன்று …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-04-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply