இன்று போல் என்றும் வாழ்ந்திடு

இன்று போல் என்றும் வாழ்ந்திடு
Spread the love

இன்று போல் என்றும் வாழ்ந்திடு

ஆசானாய் எனக்குள்ளே உறைந்தவன்
ஆழ நெஞ்சுக்குள் குடி கொண்டவன்
தொண்டுக்கு முதலாகி நிற்பவன்
தொழும் படி பணிகளை செய்பவன்

வெற்றிக்கு துணையாகி நின்றவன்
வேங்கைக்கு வேராகி முளைத்தவன்
அன்பிலே குறையாது நடப்பவன்
அன்றாடம் தொடர்பிலே இருப்பவன்

வர்க்கத்தை தெரிந்தே வகுப்பவன்
வழிமாறா பணிகளை சுமப்பவன்
சொர்க்கத்தில் இருப்பதாய் நினைக்கிறன் – இவன்
சொந்தத்தில் ஒருவனாய் இருப்பவன்

ஈழத்தின் பெயர் சூடி நடப்பவன்
ஈகத்தின் தன்மானம் கொண்டவன்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
இவ்வையாம் ஆண்டே வென்றிடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-08-2023