இது போல் வாழ்ந்தால் கடவுள் ஆவாய்

Spread the love

இது போல் வாழ்ந்தால் கடவுள் ஆவாய்

அஞ்சி தமிழன் அகதியாகும்
அவல நிலை கலைவாய்….
கெஞ்சி பகைவர் காலில் விழும்
செழி நிலை ஆட்சி தாராய்….

முந்தி உலகு முன்னே பேசும்
முழு நிலை செழிப்பை தாராய் – உனை
விஞ்சி ஆளும் நிலையில்லா நிலையை
வீசி வீசி தருவாய் …

ஞ்சமில்லா வாழும் வாழ்வை
பரம்பரை பரம்பரை தாராய் – நெஞ்சம்
கொஞ்சி உன்னை குலவும் நிலையை
கொட்டி கொட்டி தாராய் …

கன்றும் ,மாடும் களமும் புலமும்
கை தொழும் மன்னவன் ஆவாய் ….
சான்று தட்டி சாதனை பேசும்
சரித்திரமாகி மடிவாய் ….

இது போலாகி என்றும் நிறைந்தால்
இதயத்தில் கடவுள் ஆவாய் …..
அது போலாகி ஆட்சி புரிந்தே
அழகாய் நீயும் மறைவாய் …!

  • வன்னிமைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -31/01/2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply