இது தான் காதலா ..? …!

Spread the love

இது தான் காதலா ..? …!

உள்ளாடை அவிழ்க்கையில
உன்னை நீ மறந்தவளே …
வெள்ளாடை போன பின்னே
வெருண்டு நீ அழுததென்ன…?

கண்ணாடி உடை மாட்டி
கலர் காட்டி சென்றவளே
பின்னாடி ஒன்றோடி
பிரியம் வைத்ததென்ன …?

தள்ளாடி மனம் மயங்கி
தங்கமே வீழ்ந்தாய் …
தங்க தேர் அழகே
தவறொன்றை ஏன் புரிந்தாய் …?

முந்திக்க முன்னே அவன்
முழு நிலை புரியவில்லை …
சிந்திக்க மறந்தவளே
சிசு தாங்கி அழுததென்ன …?

உயிர் தந்து உடல் வளர
ஊதி பெருத்த வண்டி ….
ஊர் காண மறுத்து நீ
ஊர் ஒழிந்த நிலை என்ன …?

சின்ன இடி இடித்து
சிறு நிலா,விளையாட
மெல்லிய இடி அதிர்வில்
மெலிந்ததா உன் மகிழ்வு …?

தாயாகி உடல் சுமந்து
தரணியிலே நின்றவளே ….
பேயாகி நீ ஏனோ
பெற்று பிள்ளாய் எறிந்தாய் …?

நாயாகி உனை இன்று
நக்கி ஊர் திரிய…..
பேச்சின்றி உறைந்தவளே – உன்
பேரின்பம் இன்றெங்கே …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -08/01/2018
இலங்கையில் 19 வயது இளம் பெண் பிள்ளை ஒன்றை பெற்று காட்டில் வீசி சென்ற செய்தி கேட்டு
வாடியபோது …!

Home » Welcome to ethiri .com » இது தான் காதலா ..? …!

Leave a Reply