ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

Spread the love
ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி அமீர். தமிழில் பேரன்பு படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருநங்கையான இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் அவர் தனது முகநூலில் நேரடியாக கண்ணீருடன் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலன் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அவருடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் அவர் என்னை, ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கண்ணீர்விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தன்னுடைய சேமிப்பில் இருந்து இரண்டு ஆண்டு களில் சுமார் 4 லட்சம் வரை அவர் பறித்துகொண்ட தாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி அமீர்

தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, பெற்றோரும் உடன் இல்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை சொல்லவில்லை.

Leave a Reply