அவர்களுக்கு பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி

Spread the love

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சமீரா தனது இரண்டாவது மகனுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக புகைப்படம் வெளியிட்டார். கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான ‘முல்லையாநாகிரிக்கு’ டிரெக்கிங் சென்ற புகைப்படம் தான் அது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் சமீரா இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டார். விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒருசேர குவிந்தது.

சமீரா ரெட்டியின் பதிவு

இந்நிலையில் சமீரா தனது பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “என்னுடைய கடந்த காலத்தில் இருந்து ஒரு குண்டை தூக்கிப்போடுகிறேன். மீம் மேக்கர்ஸ் உங்களுக்காகத் தான். நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும். கடந்த காலங்களில் நான் மிகவும் சிரமப்பட்டேன். அப்போது எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. இரண்டு குழந்தைகள் கொண்ட என்னை நேசிக்கும் எனது கணவர் இருந்தும், இப்போதும் கூட என் உடலைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்ற கவலை மற்றும் போராட்டத்தின் பல தருணங்கள் எனக்கு உள்ளன” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். உடல் பருமன் குறித்து விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீரா, பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply