அர்ஜுன் பட வாய்ப்புகளை மறுத்த இலியானா
பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் நடிகை இலியானா. இளம் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து வந்த இவர் ஒருகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு தேடி வந்ததால் தெலுங்கு சினிமா வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டில் செட்டிலானார்.
கடந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட இந்தியில் எட்டு படங்களில் மட்டுமே நடித்தார். இலியானாவால் அங்கே பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த வருடம் அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்தவருக்கு தற்போது மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு வந்துள்ளது.
இலியானா
இதனால் அதிர்ச்சியான இலியானா, தனது நிலைமை இன்னும் அந்த அளவுக்கு கீழே போகவில்லை என்று கூறி, தேடி வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம். மேலும் கதாநாயகியாக வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாகவும் இருக்கிறாராம்.