பூட்ட பட்ட மலசல கூடம் -மக்கள் அவதி

Spread the love

இலங்கையில் –பூட்ட பட்ட மலசலகூடம் பயணிகள் அவதி.

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன பிரதேசத்தில் கொத்மலை பிரதேச சபையின் அனுசரைனையில் புதிதாக அமைக்கப்பட்ட மலசல கூடம் பூட்டபட்ட நிலையில் உள்ளது .

மலசலகூட தொகுதி பூட்ட ப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இந்த மலைசலகூடத்தின் சில பாகங்கள் தற்போது உடைந்த நிலையிலும்

காணப்படுவதுடன் மக்களின் பணத்தில் அமைக்கபட்டு கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குறியது.

குறிப்பாக இந்த மலசலகூட தொகுதி இந்த இடத்தில் அமைக்கப்பட்டது வரவேற்கதக்க ஒரு நல்ல விடயமாகும்.

இந்த பாதையின் ஊடாக நாளாந்தம் ஆயிரகணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதேசத்திற்கு செல்கின்றனர் .

இவர்களுக்கு என ஒரு பொதுவான மலசலகூடம் இல்லை. இவ்வாறான நிலையில் இந்த மலசலகூடங்கள் அமைக்கப்பட்டமை வரவேற்கதக்க ஒன்றாகும் .

இருந்தும் மக்கள் பாவிக்க கூடிய வகையில் நிர்வகிக்காமை வேதனைக்குறியது. இந்த மலசலகூட தொகுதியில்.

ஆண்கள் பாவிக்க கூடிய 02 மலசலகூடமும் பெண்கள் பாவிக்க கூடிய 02 மலசலகூடமும் பராமரிப்பவருக்கு இருப்பிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை உடனடியாக திறந்து மக்கள் பாவனைக்காக வழங்க வேண்டியது பொருப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.

இந்த விடயம் தொடர்பில் கொத்மலை பிரதேச சபை தலைவர் சுசந்த ஜயசுந்தர அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது.

இந்த மலைசல கூடத்திற்கு தேவையான நீரை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றி உள்ளது.

தற்போது அதனை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வருகின்ற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த மலைசல கூடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என்று கூறினார்

பூட்ட பட்ட மலசலகூடம் எப்போது திறக்க பாடும் என மக்கள் காத்துள்ளனர்

பூட்ட பட்ட மலசலகூடம்  - மக்கள்  அவதி
பூட்ட பட்ட மலசலகூடம்  - மக்கள்  அவதி
பூட்ட பட்ட மலசலகூடம்  - மக்கள்  அவதி

Leave a Reply