எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு
Spread the love

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் இதுவும் ஒன்று .


இந்த மாலை நேர உணவை எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையாக செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

இந்த சூப்பர் டிபன் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
எப்படி செய்வது ..? செய்முறை ஒன்று .

மிக்சி எடுத்து அதில கடலை ,ஏலக்காய் போட்டு ,பொடி பண்ணி எடுத்திடுங்க .
அப்புறம் பொடியை சட்டியில் மாத்தி ,அதில் தேங்காய் துருவல் சேர்த்து ,கூடவே நாட்டு சக்கரை சேர்த்து கலக்கிடுங்க .இப்போ உள்ளுடன் ரெடியாடிச்சு .

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு போட்டு அடுப்பில் வைத்து வறுத்திடுங்க .


அரிசி மாவு வாசம் வரும் வரைக்கும் வறுத்திடுங்க .
அப்புறம் அடுப்பில இருந்து இறக்கிடுங்க .

இதுகூட மூன்று வாழைப்பழம் சிறிதாகக் வெட்டி எடுத்திடுங்க .அதை மிக்சியில் போட்டு தண்ணி ஊற்றி அரைத்து எடுங்க .

அதுக்கு அப்புறம் மாவிலை இதனை ஊற்றி பிசைந்து எடுங்க .


சப்பாத்தி மாவு போன்ற பதம் வரும் வரைக்கும் பிசைந்து எடுங்க .
இப்போ மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து பிசைத்திடுங்க ,இது கலரை மாற்றி கொடுக்கும் அதுக்கு தான் .

அப்புறம் இந்த சப்பாத்தி மாவை உருண்டை உருண்டியாகி பிடித்து மோதகம் போல தட்டையாக தட்டி எடுத்து ,அதுக்குள்ளே இந்த உள்ளுடன வைத்து மூடி விடுங்க .அப்படியே எல்லாத்தையும் செய்திடுங்க .

அதுக்கு அப்புறம் அடுப்பில இட்லீ பாத்திரத்தில் போட்டு 8 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க வேலை டிபன் ரெடியாடிச்சு .

இது கலர் வடிவிலே செஞ்ச சூடான செமையான , சத்தான டிபன் .அம்புட்டு தாங்க .நீங்களும் இன்றே செய்து பாருங்க மக்களே .