லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் வெட்டி கொலை

இதனை SHARE பண்ணுங்க

லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் வெட்டி கொலை

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று (27) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நேற்று மாலை 6.00 மணியளவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு குறித்த சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகநபர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply