சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்

Spread the love

சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்

கண்டுபொட பகுதியில், மாந்திரிக சிகிச்சை அளிப்பதாகக் கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர், உயிரிந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் உடலில், அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் அதனால் அதை வெளியேற்றுவதற்கு,

பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, அப்பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவர், சிறுமியை பூசைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்கு ஒருவகை எண்ணை பூசி, தோஷம் நீக்குவதாக தெரிவித்து, தடி ஒன்றால் அவரை மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறிய இந்தப் பெண் தாக்கியுள்ளார். இதனால்

பாதிக்கப்பட்ட சிறுமி, மயக்கமடைந்தமையால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனாலும் சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பியகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மாந்திரிகம் செய்துவரும் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Home » Welcome to ethiri .com » சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்

Leave a Reply