ஏழை வியாபாரியை வீதியில் அவமதித்த பணக்கார திமிர் பிடித்த பெண்
தனது கார் மீது தள்ளுவண்டி இடித்ததால் ஆவேசம் அடைந்த பெண்மணி அதில் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை சாலையில் வீசியது போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கார் மீது தள்ளுவண்டி இடித்ததால் ஆத்திரம் – பழங்களை சாலையில் வீசிய பெண்மணி
பழங்களை சாலையில் வீசிய பெண்மணி
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள அயோத்தியா நகரில் தனியார் பல்கலைக்கழக
பேராசிரியை ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பழம் விற்றுக் கொண்டிருந்த தள்ளுவண்டி கார் மீது இடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பேராசிரியை காரை ஓரமாக நிறுத்தினார். விடுவிடுவென
காரில் இருந்து இறங்கிய அவர் தள்ளுவண்டிக்காரரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், வண்டியில் இருந்த பப்பாளி பழங்களை அள்ளி ஆவேசமாக சாலையில் வீசினார்.
பழக்கடை வைத்திருந்தவர் கெஞ்சிக் கேட்டும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. சிறிது
நேரம் கழித்து அந்தப் பெண்மணி அங்கிருந்து சென்றுவிட்டார்.
அக்கம்பக்கத்தில் இருந்த அபார்ட்மெண்ட்வாசிகளில் சிலர் இதை வீடியோவாக எடுத்து
வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்











