இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
Spread the love

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

தினமும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிகுதா,அப்படின்னா இதோ இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க .
மிக இலகுவான தரமான ,மிக சுவையான சமையல் .

பிள்ளைங்க முதல் வயதானவர்கள் வரை ,மிகவும் விரும்பி உண்ணும் உணவு .

அப்புறம் என்ன குஷி தாங்க .

இட்லி தோசைக்கு பதிலாக சுவையான டிபன் செய்முறை ஒன்று

மிக்சிங் போல் ஒன்றில் ஒரு கப் கோதுமை மாவு ,அரை கரண்டி உப்பு ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து மாவு எடுங்க .இப்போ மாவு ரெடியாடிச்சு

செய்முறை இரண்டு

இப்போ அவிய வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, நன்றாக கட்டி இல்லாம மசிய வைத்து எடுங்க .
கூடவே ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து கொள்ளுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

அப்புறம் மூன்று பச்சை மிளகாய் ,கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,கருவேப்பிலை கொஞ்சம் ,அரை கரண்டி இஞ்சி பூண்டு ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி சாட்மசாலா சேர்த்து கலக்கி விடுங்க .

அதன் பின்னர் காரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து, மசாலா தொக்கு செய்து கொள்ளுங்க .இப்போ இதுவும் ரெடியாடிச்சு .

செய்முறை மூன்று

சப்பாத்தி மாவை சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளுங்க .இப்பபோ சப்பாத்தி மாவுக்கு நடுவில செய்து வைத்த சாட்பிங் மசாலாவை ரோல் போல சுற்றி எடுங்க .

இப்போ கத்தி வைத்து இரண்டு இஞ்சி அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .

துண்டுகளாக வெட்டியதை அப்படியே தட்டை போல தட்டி எடுங்க .இப்போ இவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்க .

இப்போ செம்மையான டிபன் சுட சுட ரெடியாகிடிச்சு .

இட்டலி தோசைக்கு பதிலாக, சைடீஸ் இல்லாம சாப்பிடலாம் .
குழந்தைகள் எல்லாருமே நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .

இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே.

Leave a Reply