வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு
பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.
இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக
மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு
மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை
வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்
உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.