புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

Spread the love

பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

சிகரெட்டுகளை விட அதிக கேடு விளைவிக்கும், எளிய பீடி மீது அரசு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

சமீபத்தில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்ததையும், பின்னர் தமிழக அரசு இதை தடை

செய்ததையும் பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் முக்கிய பிரச்சினையான, பரவலாக இருக்கும் பீடி பிடிக்கும் பழக்கம்

மற்றும் புகையிலை போடும் பழக்கங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றி கவலை தெரிவிக்கின்றனர்.

புகையிலை புகைப்பதினால் புற்றுநோய் உண்டாகிறது என்பது 1950-களில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியான

புகை பழக்கத்தினால் நுரையீரல், சிறுநீர் குழாயின் கீழ் பகுதி, சிறுநீரக பகுதிகள், சிறுநீர்ப்பை, காற்று செல்லும்

செரிமான பாதையின் மேல் பகுதி, தொண்டைக் குழி, குரல் வளை, உணவுக் குழாய் மற்றும் கணையம் ஆகிய

உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நாசிக் குழி, மூக்கு எழும்பின்

உட்பகுதி, மூக்கு துவாரம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கும்

சான்றுகள் உள்ளன. காளப்புற்று நோய் மற்றும் எழும்பு மஜ்ஜைகளில் ரத்தப் புற்றுநோயும் இதனால்

உண்டாகின்றது என்று மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரகம், “பீடி பழக்கமும், பொது சுகாதாரமும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

பீடி புகையில் அதிக அளவில் தார், நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைட், அமோனியா, ஹைட்ரஜன் சையனைட், இதர எரிதன்மை கொண்ட பீனால்கள் மற்றும் புற்றுநோய்

உண்டாக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன்கள், பென்சான்த்ராசீன், பென்சோபைரீன் மற்றும் கதிரியக்கத் தன்மை கொண்ட யுரேனியம் ஆகியவை உள்ளன.

பீடியை அடிக்கடி பற்ற வைக்க வேண்டியிருக்கும். பீடி சுற்றப் பயன்படுத்தப்படும் இலையின் ஊடுருவு திறன் குறைவாக இருப்பதாலும், முறையான வடிகட்டி

இல்லாததாலும், சிகரெட் புகையைவிட பீடி புகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள் வெளியாகின்றன. சிகரெட்டை விட பீடியை இரண்டு

அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஊத வேண்டியுள்ளதால், நிக்கோட்டின், தார் மற்றும் கார்பன் மோனாக்சைட் ஆகியவை அதிக அளவில் உள்ளிழுக்கப்படுகின்றன.

நிரந்தரமான மூச்சுக்குழாய் அழற்சி நோய் மற்றும் இதயநோய்களை உருவாக்கும் ஆற்றல் பீடிகளுக்கு உண்டு.

“இ-சிகரெட்டுகளை மட்டுமல்லாமல் அனைத்து வகையான புகையிலை பொருட்களையும் தடை செய்ய மாநில அரசை கோருகிறோம். கிராமப்புறங்களில் பீடிப்பழக்கம் மிக

அதிகமாக, குறைந்த வருமான கொண்ட மக்களிடம் உள்ளது. சிகரெட் பிடிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட பீடி பிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக

உள்ளதால், பீடி தடை செய்யப்பட வேண்டும். ஜி.ஏ.டி.எஸ் 2 (உலக வயது வந்தவர்கள் புகையிலை கணக்கெடுப்பு 2016-17) அறிக்கையின்படி, தமிழகத்தில் பீடி புகைப்பவர்களின்

விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. இது ஜி.ஏ.டி.எஸ் 1 (2009-10) அறிக்கையின் 5.3 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு புகையிலை

கட்டுபாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் கூறுகிறார்.

Leave a Reply