தூக்கம் பறித்த கொடியவன் ….!
காலையில ஓடிவந்து
கண்திறக்கும் கதிரவனே ..
கண்ணான கனவை
காண்பறித்த கொடியவனே
மஞ்சம் விட்டு எழவே
மஞ்சள் வெயில் எறிந்தவனே ..
கெஞ்சினேன் நானே
கொஞ்சம் உறங்கிட தானே ….
வாரத்தில இரண்டு நாளு
வாங்கி வந்த விடுமுறையை …
வீணடித்து போனவனே
வேலைக்கு நான் போறேனே ….
அஞ்சாத சூரியனே
அக்கினி தேவனே ….
நஞ்சாகி ஏன் போனாய்
நான் அழுதேன் பேயாய் ……!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08/03/2019