சிரிப்பவர் சிரிக்கலாம் ..!

Spread the love

சிரிப்பவர் சிரிக்கலாம் ..!

தங்கு தடையின்றி
தடை வந்து வீழ்ந்தாலும் ..
சொந்த வீடின்றி
செகிசின்றி அலைந்தாலும் …

எடுத்த முயற்சியை
எடுத்தெறிந்து போகேன் …
அடுத்தவர் கண்ணில்
அகப்பட்டும் அழியேன் … (சிரிப்பவர்)

இழிந்தின்று உரைக்கின்ற
இழிவான நாக்கெல்லாம் …
மகிழ்ந்தன்று உரைக்கின்ற
மகிழ்வான காலம் வரும் …

எடுத்தின்று பேசும்
எள்ளி நகையாடும் ….
முடிந்தவரை இன்று
முக்கி நன்றே பேசும் ….

அடுத்தவர் பேச்சுக்கு
ஆப்படிக்கும் காலம்
தாப்பாடு போட்டு
தாழ்வாரம் தட்டும் …..

ஒப்புக்கு அழுதவரே
ஓடி அலைகின்ற …
காலமது தேடி வரும்
கனத்து வாய் சிரிக்கும் ….

ஏகாந்த பெருவெளியும்
எழுந்து நடக்கும் ….
ஒடிந்தாடும் இலைகளும்
ஓடி வணங்கும் …

ஆகுமா இதுவென்று
அலட்டி திரிந்தவர்
ஆகும் இதுவென்று
அன்று உரைக்கும் ….

முடிவு தெரிந்து முன்னேறு
முடியும் உன்னால் முன்னேறு …
பாரை உந்தன் வசமாக்கு
பங்கு சந்தை முதலாக்கு…!

Leave a Reply