சாதிக்கலாம் துணிந்துவா

சாதிக்கலாம் துணிந்துவா
Spread the love

சாதிக்கலாம் துணிந்துவா

அழுகை நிறுத்தி எழுந்து வா
அகிலம் படிக்க பறந்து வா
எதுவும் முடியும் துணிந்து வா
ஏவுகணையாய் வெடிக்க வா

கொஞ்சம் சிந்தை துலக்கி வா
கொடிய துயரை உடைத்து வா
அடக்குமுறையை கிழித்து வா
ஆளுமையை நிறுத்த வா

பிடித்த தெல்லாம் படிக்க வா
பிரியமதில் செலுத்த வா
அறத்தை நாட்டி எழுத வா
அறிவாயுதம் எடுத்து வா

இழிவு கடந்து எழுந்து வா
இமையம் தொடலாம் நடந்து வா
பறக்கும் தட்டாய் சுழன்று வா
பகையா அவர் எதிர்த்து வா

பங்கு சந்தை பழகு
பணம் தரும் உலகு
சாதனை இங்கு படை – உலக
சாதனையை இங்கே உடை ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 13-03-2024