உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
இதனை SHARE பண்ணுங்க

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு காப்போம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையிலுள்ள வயோதியக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.நவேந்திரராஜா, திருகோணமலை மகளிர் உதவி அறக்கட்டளைத் தலைவி (திருமதி) நாகேந்திரன் ஆஷா உள்ளிட்ட காப்போம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருகோணமலையிலுள்ள வறிய வயோதிபமான 60 குடும்பங்களுக்கு தலா 2500.00
ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை இன்றைய நிகழ்வின் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

அபு அலா –


இதனை SHARE பண்ணுங்க