ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்

ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்
இதனை SHARE பண்ணுங்க

ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பௌசர் ஒன்று இன்று (24) அதிகாலை 3.30

மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமேந்து தொழிற்சாலையில் எரிபொருளை இறக்கி விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பௌசர் சாரதிக்கு ஏற்பட்ட

நித்திரைக் கலக்கத்தினால் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு பத்துளுஓயா நீர்த் தேக்கத்தினுள் வீழ்ந்து சாரதி காயமடைந்து

ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்

சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் இருந்து சாரதியை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாலத்தினுள் விழுந்துள்ள எரிபொருள் பௌசர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரம் வரை சென்று புகையிரத பாலத்தை அண்டிய பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

விபத்துக்குள்ளான பௌசரை மீட்கும் பணியையும் மேலதிக விசாரனையும் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க