பெண் உட்பட மூவர் கொலை| இலங்கை செய்திகள்

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Spread the love

பெண் உட்பட மூவர் கொலை| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (26) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் தனது வீட்டில் இருந்தபோது, ​​அவரது தாயாரின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்து இறந்தவரையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

ரத்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் பெண்ணின் தாய் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் உட்பட மூவர் கொலை| இலங்கை செய்திகள்

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லந்தோட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது, ​​அங்கு வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.

இதேவேளை, திவுலபிட்டிய மரதகஹமுல சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மரதகஹமுல சந்திக்கு அருகில், வீதியில் பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி, கார் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன், காரில் இருந்த நபர் ஒருவரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (26) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதான வித்தினாபஹா என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.