டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி

டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி
Spread the love

டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி

வீட்டில் டீகடை வெங்காய வடை மொறு மொறுனு செய்வது எப்படி ,என்கின்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில் உள்ளது .

வெங்காய வடை செய்வது எப்படி என்பது, இதோ வெங்காய வடை சமையல் குறிப்பு மூலம் பார்க்கலாம் வாங்க .

இதோ வெங்காய வடை சமையல் குறிப்பு ஒன்று

வெங்காய வடை செய்வதற்கு ,பெரிய வெங்காயம் மூன்று பொடியாக வெட்டி கொள்ளுங்க.வெட்டிய வெங்காயத்தின் மேலே ,ஒரு மேசை கரண்டி அளவு உப்பு சேர்த்திருங்க .

அதன் பின்னர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,மஞ்சள் பொடி ,பொடியாக நறுக்கிய மூன்று பச்சைமிளகாய் ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைதிருங்க

பின்னர் 10 நிமிடம் நனறாக அப்படியே ஊற வைத்திடுங்க .அதன் பின்னர் அரை கரண்டி பெருங்காயம் சேர்த்திடுங்க ,
அதன் பின்னர் ஒரு மேசை காரனடி மைதா மாவு ,ஒரு கரண்டி அரசி மா சேர்த்து நன்றாக வெங்காயத்தை பிசைந்து விடுங்க .

வெங்காய வடை சுடுவது எப்படி செய்முறை இரண்டு

இப்பபோ வெங்காய வடை சுடுவதற்கு ரெடியாக செய்தாச்சு .இப்போ வெங்காய வடையை எண்ணையில் போட்டு சுட்டு எடுக்கணும் .

அதற்கு அடுப்பில காடாய வைத்து ,தேவையான எண்ணெய் விட்டிருங்க .எண்ணெய் நன்றாக சூடாகினதும் .வெங்காயத்தை வடை போல தட்டையாக உருட்டி எண்ணையில போட்டு சுடுங்க .

எண்ணையில் போட்ட பின்னர், வடையை மூன்று நிமிட பெரிய விட்டு, அப்புறம் பிரட்டி எடுத்து நன்றாக சுட்டு எடுங்க .

இப்பபோ வெங்காய வடை செய்முறை காட்சியோட நீங்கள்பார்த்திருக்கலாம் .இதுபோலவே வெங்காய வடையை நன்றாக செஞ்சு சாப்பிடுங்க மக்களே.

வெங்காய வடை வீடியோ கீழே உள்ளது ,அதனையும் தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளுங்க.

இது தாங்க வெங்காய வடை ,மிகவும் இலகுவான ஒன்று .அப்புறம் என்ன செஞ்சு அசத்துங்க .

Leave a Reply