Search Results for: மலரட்டும்
அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்.
அண்ணன் வாரான் அண்ணன் சீமான் வாரான்
அண்ணன் வாரான் அண்ணன் சீமான் வாரான் எனும் பாடல் வன்னி மைந்தன் அவர்களின் வரியில் வன்னி மைந்தன் உடைய Ai இசை குழு ஊடாக இந்த பாடல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது .
Ai பயன்படுத்தி வெளியிடப்படும் பாடல்களில் இதுவும் நன்றாக காணப்படுகிறது .
சிறந்த இசையில் அற்புதமான வரிகளில் எழுச்சி பெறக்கூடிய வகையில் இந்த பாடல்கள் எழுதப்பட்டுள்ளது .
நாள்தோறும் ஒரு பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன .16 பாடல்களை வெளியில் செய்ய உள்ளதாக வன்னி மைந்தன் மைந்தன் தெரிவிக்கின்றார்.
இழந்து போன விடுதலை தோளிலே சுமந்து கொண்டு வீர நடை போடுகிற அண்ணன் செந்தமிழன்
இழந்து போன விடுதலை தோளிலே சுமந்து கொண்டு வீர நடை போடுகிற அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் இந்த பாடல்களை நாங்கள் அளிக்கின்றோம்.
அவர்களது கடினமான உழைப்பு விட்டுக் கொடுக்காத தன்மான உணர்வு என்பனவற்றை மனதில் கொண்டு இந்த பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன .
விடுதலை போராட்டம் எம் தேசம் எழுந்த மலரட்டும். நாம் தமிழர் கட்சிகளுக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
என்றும் நாங்கள் உங்களோடு இருப்போம் நன்றி சீமான் அண்ணா மற்றும் நாம் தமிழர் படை தளபதிகள் ஆதரவு உறவுகள் ,கட்சி உறுப்பினர்கள் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா |பாவேந்தன்|இளங்கோ செல்லப்பா | TAMILA NEE UNPATHUENAN SORAA SORA.Tamil, if you eat, Rice, Rice.
பாடலாசிரியர் கேசவன் லண்டன்
தமிழா நீ உண்பதென்னா சோரா சோரா என்கின்ற பாடலை பாடலாசிரியர் கேசவன் அவர்கள் லண்டனை இருந்து எழுதி இருக்கின்றார் .
மதுர குரலன் இன்னிசை குரலால் பாவேந்தன் அவர்கள் பாடியுள்ளார் .
இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் இசையினை உயிர் ஆயுதமாக கொடுத்திருக்கிறார் தேனீசை செல்லப்பாவின் ஒரே புதல்வன் இளங்கோ செல்லப்பா.
தாயக மண்ணின் விடுதலை சுமந்து வருகிற இந்தப் பாடல்கள். உரமான உயிர் கொடுத்து சரியான காவியமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பாடல் உருவாக்கத்தில் அயராது அரும்பாடுபட்டு உழைத்து இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து மெருகூடிய பாவேந்தன் அவர்களுக்கும் ,
இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம்
வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்ட லண்டனையைச் சேர்ந்த கேசவன் அவர்கள் எழுதிய இரண்டாவது பாடல் இதுவாகும் .
அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
தொடரட்டும் உங்கள் பணி மலரட்டும் தமிழீழம் விடியட்டும் தமிழர் தேசம் நன்றி வணக்கம் வன்னிமைந்தன்.
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

கிரு மாணவர்களுக்கு வழங்கிய உதவி
மாணவர்களுக்கு உதவி வழங்கிய கிரு
மாணவர்களுக்கு உதவி வழங்கிய கிரு ,இந்த பேருதவி திட்டம் தொடர்பான ஆவண காணொளி வெளியாகியுள்ளது .
வாழ்வாதாரத்தில் ,பின்தங்கி கல்வி கற்க முடியாது திணறி கொண்டிருந்த ,மாணவ சிறுமிகள் இருவருக்கு ,கிரு தனது தொண்டு பணியின் ஊடாக இரு மாணவ செல்வங்களின் உதவியை நிறைவு செய்து கொடுத்துள்ளார் .
கல்வி கற்றுக்கொள்ள முடியாது திணறி கொண்டிருந்த ,மாணவ செல்வங்கள் தொடர்பான விடயத்தை, புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியிலே கிரு எடுத்து சென்ற நிலையில் ,ஜெர்மனியில் ,வசித்து வரும் மனித நேயம் கொண்ட ,ஈழத்தின் மக்கள் சமூக சேவகர் ஒருவர் வழங்கியுள்ளார் .
இவரது உதவியில் .இந்த மாணவ செல்வங்களில் கற்றல் விடயம் தீர்க்க பட்டுள்ளது .
கல்வி கற்க மாணவர்களுக்கு உதவிய யேர்மன் தமிழன்
அடிப்படை கல்வியை கற்று கொள்ள முடியாத நிலையில் தவித்த பொழுது ,கல்வி கற்பதற்கான ,கொப்பிகள் ,தோள் பை ,பென்சில் ,பேனை,கலர் பென்சில் ,மற்றும் கொம்பாஸ் ,அடிமட்டம் ,சப்பாத்து போன்றவை வழங்க பட்டுள்ளது .
இந்த கால்வி சாலை கற்றல் உபகரணம் வாழங்கிட ,தான் கடினப்பட்டு உழைத்த பணத்தை ,மனித நேய பணியிற்காக ஜேர்மன் மனிதாபிமான ஈழ தமிழன் வழங்கியுள்ளார் .
அவரது கருணை ஊடாக இந்த இரு சிறு மொட்டுக்களை ,ஊக்குவித்து செழிக்க அடி தளம் இட்டு கொடுத்துள்ளார் .அந்த மா மனிதருக்கு தமிழர்கள் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர் .
அந்த உதவியினை சமூக உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு ஊடாக வழங்கி தேவையை நிறைவு செய்துள்ளார் .
இந்த பணியில் ஈடுபட்ட உங்கள் யாவருக்கும் ,எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .தொடரட்டும் உங்கள் பணி .மலரட்டும் எம் தேசம் .வாழ்த்துக்கள் .
Witness the heartwarming moment as we surprise a deserving student with essential school supplies! Many children lack the basic tools they need to succeed in school. In this video, we helped a child that needed school equipments to study
See the impact a little kindness can make on a child’s education. Every contribution counts!
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
எந்நாளும் விளக்கேற்றி அழுதிடுவோம்
எம் வாழ்வின் பெருமையென உணர்ந்திடுவோம்
மாவீரர் திருநாளை
தலை வணங்கி நினைத்திடுவோம்
மான மறவர்க்கு தினமும் மலர் தூவிப் போற்றிடுவோம்
தரணியெல்லாம் அவர் புகழை
தமுக்கு எடுத்து அறைந்திடுவோம்!
ஈழத்தின் விடியலுக்காய் யாகத் தீயில்
மாவீர முதல் வித்தாய்
ஆகுதியானார்
சங்கரண்ணா
உண்ணாமல் நோன்பிருந்து
உயிரீய்ந்தார் திலீபன் அண்ணா
எம்மின விடுதலைக்காய்
பெண் மாவீர விடுதலை முதற் தாயாய் தன்னுயிரை உவந்தளித்தாள்
ஈழத்துக் கொற்றவையாம் மாலதி அக்கா!
கருவேங்கை விடுதலை முதல் மாமுனிவனாக
சரித்திரம் படைத்தார்
மில்லர் அண்ணா
ஈழத்து மறத்திகளும் வீரத்தில் சளைத்தவர்கள்
அல்ல என்று
முதற் பெண் கடற் கரும்புலியாய்
கடலினிலே காவியம் படைத்தாள் அங்கயற்கண்ணி அக்கா
வானில் கூட வெடித்து உலகை வாய் திறக்க வைத்தார்கள்
ரூபனும் சித்திரனும்!
எம் நாடு எம் நிலம்
என்னுணவு என்னுணர்வு
எம்மொழியே எம்மறிவு
யாரவன் நீ எமைக் கேட்க
எம் வலிமை உணராமல்
எகத்தாளமுடன் வந்து
எள்ளி நகையாடி
எமையடிமையாக்க வந்த
எதிரிகளை
வீறுடனே வீழ்த்தியழித்து
அச்சம் தவிர்த்து அடங்க மறுத்து
வருங்காலம் உணர்வு பெற வழி வகுத்து
ஈழத்தின் இறையாண்மை
காத்தோர்கள்!
தானுயர வாழாமல்
தம் சுற்றம் வாழ்வினிக்க
தமிழ் உயர தமிழன் புகழ் வான் சிறக்க
தொல் குடித் தமிழினம் தான் பெருமை கொள்ள
உண்மையுடன் வாழ்க்கை வாழ்ந்து
ஒப்பற்ற தலைவன் வழியில் நடந்து
தரணியிலே புதுப் பரணி
படைத்தவர்கள்!
கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
நாளெல்லாம் இவர்கள் புகழை
கொட்டட்டும் செண்டை மேளம்
முழங்கட்டும் பம்பை மேளம்
நித்தம் எம் எழுத்தாணியும் மாவீரர் புகழ் பாடியே சிறக்கட்டும்
ஊனு
-நிலா தமிழ் –
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
கற்றைக் கருங்குழலும் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும்
கொண்டிருந்தும்
அற்றை ஈழத்தாய் அருந்துயர்
நீக்கவென்று
மற்றைக் கிசையாமல் மறவர் ஆனவர்கள் !
எற்றைக் கெம் நிலை ஏற்றம் உறும் என
அற்றைக் கேங்கி நின்ற எம் மக்களைக் காக்க
ஒற்றைத் தலைவனாய் நின்ற
எம் தலை வனின்
நற்றைப் பெருமை முழுமையும்
உணர்ந்து தோள் கொடுத்தவர்கள்!
ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
வல்லடிமை புரிந்த சிங்களத்தின்
மல்லடிமைச் சேற்றில் புதையாமல்
இல்லறத்தைத் தான் ஒதுக்கி
இளம் பருவச் சீரொதுக்கி
வல்ல மற நெஞ்சை வளையாத இரும்பாக்கி
ஒல்லைப் பெரும் போர் புரிந்து
எல்லை காத்து நின்றவர்கள் !
வெம் பகைவர் காலில் தலை தெறித்தோட
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப்படுத்தி
காலை முதற் கொண்டு கவின் மாலைப் பொழுது வரை
காவலரணில் சற்றும் விழி
சோர்தல் இல்லாது
வியன் றமிழ் ஈழத்தைக் காவல் செய்தவர்கள்!
கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
ஊனுருக உயிருருக உள்ளொளி பெருக அவர்கள் நினைவைக் கருக்கொண்டு
அவர்கள் கனவை நிறைவேற்றுவோம்!
-நிலாதமிழ்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
காமாசை விடுதலை போராளிகளை முற்றாக அவர்களது தாய்மண்ணில் இருந்து அழிக்கும்
வரை ஓயோம் என இனவெறி பிடித்த நெதன்யாகு முழங்கியுள்ளார்
இஸ்ரேல் இராணுவத்தை அடித்து துவைத்து நூடில்ஸ் போட்ட பின்னரும் அடங்க மறுக்கும் இனவாதி நெதன்யாகுவின் கடும் போக்கு தானம் மீளவும் , இஸ்ரேல் அழிவை சநதிக்க போகிறது என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணம்
48 நாட்களில் 110 க்கு மேற்பட்ட டாங்கிகளை இழந்த பரிதாபம் ,வல்லரசு என வாலாட்டிய இஸ்ரேல் சுருண்டு போன பரிதாபம் .
ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
அழுகையின் ஆழத்தில் தூக்கம் இன்றி துடிக்கும் நெதன்யாகு ,இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ,ஒன்று பட்டு வாழ ,தீர்வு வழங்க வேண்டும் .
இலங்கை ,கொலைகாரன் கோட்டபாயவை போல ,மகிந்தாவை போல ஆடிய ஆணவ அடடம் இப்பொழுது .அடங்கி போனது
கோவணம் கழன்று விழ நெதன்யாகுவை மக்கள் விரட்டியடிக்க தயாராகின்றன
மமதையும் தான் என்ற ஆணவமும் ,அடக்குமுறைக்கும் ஹமாஸ் ,ஹிஸ்புல்லா ,கூதி படைகள் வழங்கிய அடி செம அடி தான் போங்க
ஊடகங்களை அடக்கி கொக்கரித்த இனவெறியர்களுக்கு நெத்தியடி வளப்பிகியுள்ளது அரபுலகம் .
மக்கள் ஹமாஸை கொண்டாட இது தான காரணம் ,வரலாற்றில் முதன் முதலாக சுதந்திரம் பெற்ற பின்னர் இஸ்ரேல் சந்தித்த பேரிழப்பு
பலத்த அவமானம் .தன்வினை தன்னை சுடும் என்பது இதான் போலும் .
ஹமாஸ் விடுதலை போர் வென்று நிற்கிறது ,.போராளிகளை மக்கள் மனங்கள் சுமக்கின்றன ,மலரட்டும் பலஸ்தீன சுதந்திர தேசம் .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே
ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே
சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.
48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய
நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது. குறிப்பாக சிங்களப் பேரினவாத அரசினால்
மெற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சி ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) எழுச்சிக்கோசங்களோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறக்க எழுச்சிகரமான மக்கள் வெள்ளத்தோடு மேலும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பித்து 6 ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் 1280 Km பயணித்து முக்கிய பல அரசியல் மையங்களின் ஊடாக ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின்
நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என 23ம் தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் தம் விடுதலைப்பயணத்தில் தாம் கண்ட அரசியல் முன்னேற்றத்தினையும் அனுபவங்களினையும் மக்களோடு பகிர்ந்து கொண்டனர். சிறிலங்காப்
பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினவழிப்பின் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட
வேண்டும். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் தங்கள்
சாட்சியங்களை வாய்மூலமோ எழுத்துமூலமோ நிரூபிப்பதன் ஊடாக கால தாமதமின்றி சிங்களப் பேரினவாத அரசினை சர்வதேச சமூகம் தண்டிக்க முடியும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளுக்கான அறைகூவலும் மனித நேய செயற்பாட்டாளர்களால் விடப்பட்டது.
தொடர்ந்தும் நடைபெற்ற நிகழ்வில் எழுச்சிகரமான கவிதைகளும் , தமிழ் , டச்சு,பிரஞ்சு, மற்றும் ஆங்கில மொழியிலுமாக இளையோர்களால் எழுச்சி உரை நிகழ்த்தப்பட்டது. பன்னாட்டு வாழிட உறவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிரொலியினை அழுத்தம் திருத்தமாக இடித்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று (20/09/2021) தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 6வது நினைவு நாளின் 34 ம் ஆண்டில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் விடுதலைப் பசி தீராத எம் திலீபன் அண்ணாவின் கனவும் அற்பணிப்பின் நோக்கமும் ஈடேற வேண்டும் என்றால் தமிழ்
மக்கள் அனைவரும் தம் வாழிட நாடுகளில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு
நாம் வாழும் நாடுகள் செவிமடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். காலம் தந்த அரிய வாய்பினை தவறவிட்டு வரலாற்றுப் பெரும் துயருக்கு சொந்தமாகாது இனிதே எம் தமிழீழ மண்ணை மீட்டெடுப்போம் வாரீர் என முழக்கங்கள் எழுப்பியவாறே நம்புங்கள் தமிழீழம் பாடலோடு இன்றைய அறவழிப்போராட்டம் நிறைவு பெற்றது.
எம் அன்பான தமிழீழ உறவுகளே நாம் அனைவரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் வடுக்களை சுமந்து கொண்டே வாழ்கின்றோம். அவ்விழப்புக்களை சாட்சியங்களாக சமர்பித்தலின் மூலம் நிச்சயம் சர்வதேச மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் தமிழீழ சுதந்திர தேசத்தினை நாம் விரைவாக மீட்டெடுக்க முடியும். எனவே உங்கள் வாழிட நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறாதீர்கள்.
“காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் , நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறாது”
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.






அலரி மாளிகையில் நவராத்திரி விழா
அலரி மாளிகையில் நவராத்திரி விழா
ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப்
பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (2020.10.20) தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Nawarathri TT PMO Tamil News 019கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும்
முன்னெடுப்பதாக தெரிவித்த பிரதமர் இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து
நலன்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.Nawarathri TT PMO Tamil News 018
தொடர்ந்து இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் வழங்கப்படும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கான புலமைப்பரிசில்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.Nawarathri TT PMO Tamil News 016
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
‘நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பயணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்றோம்.
சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்கநெறியான சமூகம் ஒன்றினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஆன்மீகத்
துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்கான மத அனுட்டானங்களைச் சரிவரப்
பின்பற்றுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். இந்நாட்டில் இப்பொழுது, மக்களுக்குத் தமது மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது தாய் நாடான இலங்கை உட்பட, உலகில் எங்கெங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நவராத்திரி விரதம்
மற்றும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இந்துக்கள் அனைவரும் தாயாகப் போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு
இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும்
மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.
ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாள் மிகவும் விசேடமான தினமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும்
வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் திருநாளாகவும் பத்தாவது நாள் ‘விஜயதசமி’ திருநாள் அமைகின்றது.
இது அர்த்தமுள்ள நல்லதொரு பூஜை வழிபாடு, ‘கொலு’ வைப்பது இந்த வழிபாட்டில் சிறப்பான ஒரு விடயம். இந்த உலக உயிர்கள் எல்லாமே எல்லோர்க்கும் மேலான சக்தியாலேதான்
இயங்குகின்றன என்ற உண்மையை எங்களுக்குக்குச் சொல்லுகிறது. ஆலயங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள், வீடுகள்
என எல்லாத் துறைகளிலும் ‘கொலு’ வைத்து வழிபடும் இந்த நிகழ்வால் நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் இனிதே மலரட்டும் என பிரார்த்திப்போம்.
இன்று நம் தேசத்தில் மூன்றாவது அலையாக எழுவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை கொவிட் – 19. இது மக்களிடையே ஒரு பய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய பயங்கள் ஆன்மீக பலத்தினாலேதான் வெல்லப்பட வேண்டும். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முடிந்தளவு முயற்சித்து வருகின்றோம்.
இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சமய விழுமியங்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளோம்.
இதுவரை இருந்த இந்து அமைச்சர்கள் நவராத்திரி விழாவை தங்களது வீடுகளிலிருந்து கொண்டாடினர். அந்த இந்து
அமைச்சர்கள் போன்று நானும் நவராத்திரியை இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அனுஷ்டிக்கவுள்ளேன்.
இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும்
வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ‘உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள்’ என தமிழ் மொழியில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க
அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன்
இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்
நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு விதித்துள்ள தடைகளை உடைக்கும்
வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதோடு, அலங்கரிக்கப்பட்டிருந்த
நினைவேந்தல் இடத்தில் இருந்த திலீபனின் திருவுருப்படம் மற்றும் பதாதைகளை இரவோடு இரவாக தனது காவல்துறையினைக் கொண்டு அகற்றியுள்ளது.
தியாகி திலீபனை நினைவுமூகூருதல் என்பது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நினைவுகூரும் செயல் என இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா அரச கட்டமைப்பின் இத்தகையை தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென்பதனையே மேற்படிச் சம்பவங்கள் மீண்டும்
வெளிக்காட்டி நிற்பததாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாகி தீலீபனின் முழக்கம், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு
பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளது.
பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரப்பு செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பானது, அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழத்
தேசியத்தினை நீக்கம் செய்ய முனைவதோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து நிரந்தர அடிமைகளாக
வைத்திருக்கும் செயலிலே ஈடுபட்டு வருகின்றது. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ அல்லது அதன் கட்டமைப்புக்கள் ஊடாகவோ தமிழர் தேசம் இதனை எதிர்த்துப் போராடிவிட முடியாது.
மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறிலங்காவின் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும் என்ற நிலையினையே
விடுதலைப்பசியோடு தியாகி தீலிபனின் இருந்த இன்றைய முதன்நாள் நினைவுகள் உணர்த்தி நிற்கின்றது என நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.



















