Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பறி போன மனசு

பறி போன மனசு

தங்க தேகம் கொண்டவளே – விழி
தடவி உன்னை பார்க்குதடி …..
அங்கம் காட்டும் உன் அழகோ
ஆளை தினம் மயக்குதடி ……

கஞ்ச தனம் கொண்டவளே – நீ
கட்டும் உடை என்ன விலை ….?
பல்லை காட்டும் வாய்போல
பஞ்சு தேகம் காட்டிறியே……

மஞ்ச ,மஞ்சள் புழு போல
மடியும் உந்தன் மடி தசைகள் …..
கிள்ளி விட துடிக்குதடி
கிளியே கொத்தி விடவாடி …..

தங்க பூ தடாகத்தில்
தாழாம நீந்திடவா ….?
வைகையறை பொக்கிசமே
வாடாமா திருடிடவா …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -19/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா
    Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

    உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

    உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

    உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா வாழ்க்கையே போராட்டமா வாழ்வே சோகமா .

    துயர் சுமந்த பாடலை வன்னியின் மைந்தன் எழுதியுள்ளார் .

    உங்கள் வீரம் இதுவென்றால் எங்க வீரம் எப்படி ,மனசு வலிக்குதே நினைவு தடு மாறுதே மிக துயரோடு இந்த துயர் சுமந்த பாடலை வன்னியின் மைந்தன் எழுதியுள்ளார் .

    மனதை வருடும் இதமான சோக கீதம் |UNGA VEERAM ITHU THAAN PONDAADIYA PILLIYA ELLAM INGA VANCHAM THAANA

    பாடல் பெயர் உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா
    பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
    இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்

    பாடியவர் AI கிரியேட் மியூசிக்


    பாடியவர் AI கிரியேட் மியூசிக்
    வெளியீடு எதிரி இணைய தளம்
    காப்புரிமை வன்னி மைந்தன்
    ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

    click here video

    உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586
    Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

    உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

    உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

    உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586 ,உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் என்ன சொல்லி ஆற்றவோ என் மனச தேற்றவோ காதல மனம் வைத்து காதலை சொல்ல முடியா தவிக்குது மனசு .

    உன்ன பாக்க துடிக்குது இதயம்

    உன்ன பாக்க துடிக்குது இதயம் முடியா நிலையில மனம் வாடுது .என்ன நான் செய்யவோ இதை எப்படி நான்

    சொல்லவோ என கணீர் பாடலை வன்னி மைந்தன் எழுதியுள்ளார் ,காதல் சோக கீதம் | Unna paakka Ninaikiren |586|

    sad ,sadsong ,sadtamilsong,

    பாடல் பெயர் உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன்
    பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
    இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


    பாடியவர் AI கிரியேட் மியூசிக்
    வெளியீடு எதிரி இணைய தளம்
    காப்புரிமை வன்னி மைந்தன்
    ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

    என்னவனே 2
    Posted in கவிதைகள்

    என்னவனே 2

    என்னவனே 2

    மீண்டும் உனக்காக ..
    மீட்டிட வா
    இல்லையோ
    மண்ணிட ஆவது வருவாயா..?

    என் நாட்குறிப்பொன்றில்..
    இருந்து உன்னால்
    கசக்கப்பட்ட காகிதத்தில்
    இருந்து..

    உனக்காகவே
    நின்மதி ..
    சந்தோசம் ..
    எல்லாத்தையும் இழந்தேன்
    எல்லாரையும் இழந்தேன் ..
    எதுகும் எனக்கு பெரிதாய் இல்லை
    ஆனால்
    உன்னை இழந்தது மட்டும்
    எனக்கு பேரிழப்பாய் தெரிகிறது ..

    எதற்க்காக ..
    எதனால்..
    உனக்கும் …எனக்கும்
    இத்தனை இடைவெளிகள்..
    இந்த இடைவெளியை
    நான்
    எதைக்கொண்டு நிரப்பிடுவேன்..

    வார்த்தைகளை
    அள்ளி கொட்டிய பின்னும்
    அத்தனையும் மறந்து
    எப்படி நான் உன்னிடம் பேச..?
    இருந்தும் பேசுகிறேன்
    வலிகளை மறந்து..

    நீ நடந்த தடங்கள் அத்தனையும்
    என் கண் முன் இருக்க
    எப்படி இது என்று
    நான் இருக்க ..
    அது ஒன்னும் இல்லை

    உன் வார்த்தைகளால்
    என் நெஞ்சை
    குத்தி கிழித்து
    என் குருதியில்
    நனைந்த
    உன் கால்
    தடங்கள் மட்டும்
    எனக்கு மிச்சமாய்..

    விடை தெரியாமல்
    தவிக்கிறேன்..
    விட்டுச் சென்றவன்
    மேல் இத்தனை
    காதலா என்று..!

    சத்தம் இட்டு அழவேண்டும்
    போல் இருக்கு..
    ஆனால் என்னை
    கட்டி அணைத்து
    ஆறுதல் சொல்ல
    நீ இல்லையே என்ற
    வலி மட்டும்..

    உன்னை நேசித்த
    எனக்கு நீ கொடுத்த
    மிகப்பெரிய பரிசு
    உன் நினைவுகள் மட்டுமே..

    வேண்டாம் என தூக்கி
    எறிந்தவனே
    உன் குரலை
    ஒரு முறையாவது
    கேக்க வேணும்
    என்று என் மனசு துடிக்கிறது
    ஒரு நிமிடம்
    என்னை திட்டுவதற்காவது
    பேசி விட மாட்டாயா..?

    மீண்டும் வருவாயா
    என்னிடம்..?

    தொடரும் …22-05-20225 vanni mainthan tiktok poem

    என்னவனே
    Posted in கவிதைகள்

    என்னவனே

    என்னவனே.!!
    உனக்காக நானும்
    எனக்காக நீயும்
    மடல் எழுதியது இல்லை
    ஆனால் இன்று ..?

    உனக்காக என் மனக்குமுறளை ..
    அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை
    இதுந்தும் இதோ…

    என்னை நீ இதுவரை புரியாத
    காரணம் நான் அறியேன்..
    நீ இனி அறிய
    எத்தனிக்கும் போது
    உன்னருகிள் நான்
    இருக்கப்போவதில்லை ..

    உனக்காக நான் சிரித்ததும்
    உண்டு ..
    உனக்காக நான் அழுததும்
    உண்டு ..
    ஏன்
    உனக்காக நான் என்னை
    தந்ததும் உண்டு ..
    ஆனால் எனக்காக
    நீ …
    இன்னொருத்தனோடு சேர்ந்து மட்டும் பார்த்தாய்
    அன்றே இரண்டான
    என் இதயம்
    இன்னமும் ரண களமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

    நீ என்னை இப்படி தான் நேசிப்பாய் என்று
    தெரிந்து இருந்தால் ..
    நம் காதலை
    அன்றே கருவில்
    கருக்கலைப்பு செய்திருப்பேன் .

    உன்னை தேடும் என்
    மனசுக்கு எதை நான் சொல்லி புரிய வைப்பேன்
    நீ என்மேல் கொண்டது
    காதல் அல்ல..
    வெறும் ஆசை மட்டும் தான் என..
    காத்து இருக்கிறேன் ..
    உனக்காக அல்ல
    காலம் உனக்கு
    என்னை யார் என்று
    உணர்த்தும் வரை ..
    நீ தொலைத்த நான் ..
    உன்னவள்
    லண்டன் !

    வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு

    வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு

    வன்னி மைந்தன் மலசலகூடம்கையளிப்பு,வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக புதிய மலசல கூடம் கட்டி கையளிக்கப்பட்டுள்ள காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

    கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு வண்ணம் என்னும் தளர்த்தினால் இந்த முதலாவது பலசில கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட மக்கள் ஓல குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர் மாட்டுக் கொட்டகை போல இருக்கும் இந்த குடிசையில் வாழுகின்ற பெண்ணுக்கு இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

    வீடியோ

    பயனாளிக்கு மனசுல கூட கை வலிக்கும் பொழுது அங்கு கூடிய பெருந்தலைவர் மக்கள் தமக்கும் வழங்குமாறு வேண்டுதலை விடுத்தனர்.

    தளத்தில் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த உதவித் திட்டத்தை குழப்புகின்ற நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளன.

    காணொளிக் காட்சியை பார்வையிடவும் மக்களுடைய துயரம் அழுகை காட்சிகளும் அதில் உள்ளன.

    வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக வழங்க படும் இந்த உதவித்திட்டம் தேவனியானவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் 00 447536707793

    வீடியோ

    தனியாகப் போறவளே
    Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

    தனியாகப் போறவளே

    தனியாகப் போறவளே

    தண்டவாளப் பாதையிலே
    தனியாகப் போறவளே!
    மண்டகுழம்பித் தவிக்கிறன்
    மனமுருகிப் பாராயோ?

    கொளுத்தும் வெயிலில்
    கோபமாய் நடப்பவளே!
    கெழுத்து மீனைப்போல
    குறும்பார்வை குத்துதடி

    பளையில் பிறந்தவளோ
    பதுளையில் வளந்தவளோ
    கலையில் சிறந்தவளோ
    மழையில் நனைந்தவளோ

    யுனி முடிச்சவளோ
    யூனியனில் படிச்சவளோ
    பனி பிடிச்சவனாய்
    பரிதவித்து அலையிறனே

    ஆற்ற மகளெண்டு
    அறிந்த நாள்முதலாய்
    மீற்றர் வண்டிபோல் மனசு
    மேட்டர் ஆனதடி

    அம்மாடி உன் அழகில்
    பூஞ்சாடி தோற்குதடி
    சிம்கார்ட்டு சிறுத்ததுபோல்
    என்கார்ட்டு குறுகுதடி

    கண்ணால கண்டதனால்
    கனவெல்லாம் நீதான்டி
    சுன்னாகம் வந்தபின்னும்
    உன்னால தவிக்கிறன்டி

    ஓமெண்டு நீ உரைத்தால்
    ஓடியோடி நான் உழைப்பேன்
    நோவெண்டு நீ மறுத்தால்
    நொதேனில போய்க்கிடப்பேன்

    வல்வை மண்ணெடுத்து
    வடிவான பொட்டுவைப்பேன்
    நல்லைக் கந்தனுக்கு
    நமஸ்காரம் செய்துகொள்வேன்

    வாகைப் பூப்பறித்து
    தோகையே சூட்டிடுவேன்
    தாகம் உனக்கெடுத்தால்
    தண்ணிரூற்று காட்டிடுவேன்

    மாவடிக்கு வாடிபெண்ணே
    காவடிபோல் தூக்கிடுவேன்
    தாவடியில் வீடுகட்டி
    தாலிகட்டிக் கூட்டிப்போறன்

    சும்மா நான் கத்தேல்ல
    வேல இன்றி சுத்தல்ல என்ர
    அம்மாமேல சத்தியம், உன்ர
    அப்பா வாறார் பத்திரம்.

    • பிறேமா(எழில்)-
    உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு

    உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு

    கொஞ்ச நாளாய் உன்னை தேடி
    கொஞ்சுதடி மனசு – உன்
    கொண்டையில ஆடும் பூவா
    குதிக்குதடி வயசு

    கண்ணுக்குள்ள நீ இருக்க
    காட்சிகளாய் கொட்டுதடி
    என்னை கொல்லும் உன் நினைப்பை
    எடுத்து போக வந்திடடி

    ஆடியில ஆடும் காற்றாய்
    ஆடிடலாம் வந்திடடி
    ஆகாய வெண்ணிலவே
    அடைக்கலம் தந்திடடி

    உன்னை சுமக்கும் என் நெஞ்சை
    உயிரே சுமக்க வந்திடடி – நான்
    உயிராய் இருப்பேன்
    உயிரே ஏற்றிடடி .

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 04-02-2024

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்
    Posted in உலக செய்திகள்

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்

    இந்தத் தகவல் உண்மைதானா”
    என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது.


    தந்தையை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்காக
    கல்வி உதவி தேவைப்பட்டது.


    தற்செயலாக இதை பார்த்தார் ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன்.
    பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த செய்தியை சொன்னார்.

    பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்


    அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். “நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?””உண்மைதான் சார்.

    நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி,
    அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்.”


    பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார். கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான்.


    அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க.

    இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார்.

    ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

    அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம்.
    அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
    அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார்.


    இது 2020 இல் நடந்தது. இப்போது அந்தப் பெண் ஸ்ரீ சாந்தனா
    இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார்.


    இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
    அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.


    அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

    பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள்.


    மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.


    இந்தத் தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.


    அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்:
    “இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

    அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.”
    அந்த மனசு தான் கடவுள்.
    படித்ததில் பிடித்தது.

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!

    கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!

    பக்கத்தில நீ இருந்தும்
    பாய் விரிக்க நேரமில்லை
    பகலிரவு வேலையால
    பார்க்க மனம் கூடவில்லை

    உனக்கொரு முத்தமதை
    உதட்டினில எழுதிவிட
    ஆள் மனசு துடிக்கிறது
    ஆனாலும் நேரமில்லை

    பட்ட கடன் பாதியில
    பாதிவழி துரைத்தையில
    பாய்க்கின்று விடுமுறை தான்
    பாவியுனக்கு கொடும் துயர்தான்

    சொர்க்கத்தில வாழ்வென்று
    சொல்லி வைத்த திருமணமோ
    சொகமிழந்து வாடுறது
    சோகமதில் தேய்கிறது

    சிக்கனத்தை சிறைபிடிக்க
    சீதேவி மறந்ததினால்
    விழியிரண்டில் நீராச்சு
    விழுந்து உடல் ஒடிந்தாச்சு …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 11-03-2022

      அஜித்
      Posted in சினிமா

      ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.

      ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.

      ஏமாற்றம்., ஏமாற்றம்., ஏமாற்றம்., மனசு ரொம்ப வலி(மை)க்குது என்று அஜித் ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை போஸ்டர் ஒட்டி தெரிவித்துள்ளனர்.

      ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்
      அஜித்


      அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்

      காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

      பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை

      வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது.

      கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில்

      குறிப்பிட்டிருப்பது, “ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it’s ok” என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்டரின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

        Posted in சினிமா

        உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா

        உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா

        நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதை அறிந்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

        எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும்,

        கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

        மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘மாணவர்கள் அனைவரும் அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு

        அண்ணனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க… நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க… பயம், விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைந்துவிடும்.

        சூர்யா

        தற்கொலை செய்வது, உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வில் தோல்வி அடைந்து இருக்கிறேன். கேவலான மார்க் எடுத்து

        இருக்கிறேன். மதிப்பெண், தேர்வை விட சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் பெருசா ஜெயிக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

          Posted in சினிமா

          பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்

          பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்

          கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

          பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்
          பிரான்சிஸ் கிருபா


          திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

          மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகியவை இவரின் முக்கிய படைப்புகளாகப் பார்க்கப்படுகிறது.

          இவர் எழுதிய கன்னி எனும் புதினம், 2007 ஆம் ஆண்டில் சிறந்த புதினம் என்ற விருதைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

          தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ள இவர், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி இருந்தார்.

          இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா, நேற்று இரவு காலமானார். பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

          Posted in சினிமா

          நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்

          நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்

          தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் நிவேதா பெத்துராஜ், பார்ட்டி, பொன் மாணிக்கவேல், விராட பருவம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

          பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்
          நிவேதா பெத்துராஜ்


          ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில்

          நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

          அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம்

          ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.

          இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            உன்னால் தவிக்கிறேன்

            உன்னால் தவிக்கிறேன்

            சில்லறையா நீ குலுங்க
            சிலிர்க்குதடி என் உடம்பு
            சிந்தையில நீ நடக்க
            சிதறுதடி என் குசும்பு

            வம்பு பண்ண வந்தவளே
            வாசலிலே நிற்பதுவோ ..?
            வாலாட்டி நான் சுற்ற
            வாய் விட்டு சிரிப்பதுவோ ..?

            கோடையில ஆற்று நீரை
            கொதிக்க வைக்கும் சூரியனே
            வெப்பத்தை தூவி விட்டு
            வெண்ணிலவு போவதெங்கே ..?

            குழைத்து வைத்த மாவை போல
            குமரி புள்ள நீ கிடக்க
            அவித்து உன்னை தின்ன
            ஆள் மனசு துடிக்காதோ ..?

            என் தோப்பில் பூவாகி
            எனக்கெனவே காய்த்தவளே
            நான் மட்டும் ரசித்துவிடும்
            நாள் ஒன்றை காட்டாயா …?

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 09-02-2021

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in சினிமா

              பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி

              பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி

              ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… என்று கூறியுள்ளார்.

              பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி
              சிம்பு


              சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில்

              நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

              இதில் சிம்பு பேசும்போது, இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன், எப்படி இப்படி மாறினேன், இந்தப் படம் எப்படி உருவானது, எப்படி

              முடிந்தது என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. அதான் உண்மை. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்க

              பார்த்தாலும் நெகட்டிவ் ஆக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என்று இருக்கிறார்கள்.

              அட்வைஸ் பண்றதை எல்லாரும் நிறுத்தவேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்பதை

              நிறுத்திக்கொள்ளுங்கள். மனசு சுத்தமாய் இருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். நான் வாழ்க்கையில் ஒரு சமயத்தில்

              கஷ்டப்பட்டேன் என்றால் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால் தான் உடல் எடை கூடியது. படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.

              இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது

              . எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பேச ஒன்றுமில்லை இனிமேல்

              செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

              சிம்பு அதிரடி
              சிம்பு அதிரடி
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              உனக்காக காத்திருக்கேன்

              உனக்காக காத்திருக்கேன்

              காந்த கண் பேரழகி
              என்னை கவரந்தாய் நீ அழகி
              உன் உதட்டை நான் மெழுக
              உரிமத்தை தாராயா …?

              அம்மியில நீ அரைக்க
              ஆடி இடுப்பாட
              என் மனசு கரையுதடி
              என் வயது கொதிக்குதடி

              குதிரை நடை பிடித்து
              குமரி நீ போகையில
              ஆகாயம் இடியுதடி
              அகிலம் நடுங்குதடி

              தொடை காட்டி நீ போக
              தெரு நாய்கள் வழிமறிக்க
              சிரித்து போறவளே
              சிங்காரி நீ தாண்டி

              உண்மை சொல்லிடவா
              உள்ளத்தை தொலைத்தேண்டி
              தேதி ஒன்று தருவாயா
              தேறி நான் உறங்க …..!

              வன்னி மைந்தன்
              ஆக்கம் -27-10-2020

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in உலக செய்திகள்

                தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை

                தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை

                பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
                நடிகை ஸ்ரவானி


                மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித்

                தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத்

                மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

                அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி

                வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

                நடிகை ஸ்ரவானி

                இளம் வயதில் சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                Posted in உலக செய்திகள் சினிமா

                லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்.

                லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்.

                நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னிடம் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதாக நடிகை வனிதா பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

                லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்
                வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்


                நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி

                ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி

                ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

                அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது: நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி

                ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி

                செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில்

                தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.

                இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.

                இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு

                அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என வனிதா கூறியுள்ளார்.

                    Posted in சினிமா

                    எனக்கு திருமணம் -குஷியில் நடிகை

                    எனக்கு திருமணம் -குஷியில் நடிகை

                    விஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

                    ‘என்னுடையவர்’… திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட ஹீரோயின்
                    வெங்கட சைதன்ய ஜோனாலகாடு, நிஹாரிகா


                    விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக

                    அறிமுகமானவர் நிஹாரிகா. தற்போது அசோக் செலவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு,

                    ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள் தயாரித்தும் வருகிறார்.

                    இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் பிரபாசும்

                    காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும்

                    மறுத்தனர். நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார்.

                    நிஹாரிகா, வெங்கட சைதன்ய ஜோனாலகாடு

                    இந்த நிலையில் நிஹாரிகா திருமணம் முடிவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடக்க

                    போகும் தகவலை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். மாப்பிள்ளை முகம் தெரியாத வகையில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

                    தற்போது மணமகன் முகம் தெரியும் இன்னொரு படத்தை வெளியிட்டு, அதில் என்னுடையவர் என குறிப்பிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். மணமகன் பெயர் வெங்கட சைதன்ய

                    ஜோனாலகாடு. குண்டூரை சேர்ந்தவர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிஹாரிகாவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்