பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசமாக பேசி காட்சிகளை அனுப்பி பண மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது .

இலங்கை பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் .


கைதானவர் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது .

பெண்களிடம் ஆபாசமாக பேசி ஏமாற்றய நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

No posts found.
Posted in சினிமா

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா
ஹன்சிகா
நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை

செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால்

நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி

வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.

நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த

சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்.

ஹன்சிகா
ஹன்சிகா
பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை ,பதின்வயது கர்ப்பங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுச் செய்தியை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது

கர்ப்பங்கள் குறித்த அறிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் பதின்வயது கர்ப்பங்கள் குறித்த அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, குழந்தைகளைப் பாதுகாக்க வலுவான குடும்ப

மற்றும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தி, இலங்கை காவல்துறை ஒரு பொது விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, பதின்வயது கர்ப்பங்களுக்குக் காரணமாக அமையும் முக்கிய சமூகவியல் காரணிகளில் ஒன்று, குடும்பங்களுக்குள் உணர்ச்சிப்

பிணைப்புகள் படிப்படியாகச் சிதைந்து போவதாகும். பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பிள்ளைகளுடன் வலுவான மற்றும் ஆதரவான

உறவுகளைப் பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

கடுமையான வாழ்க்கை முறைகள் காரணமாக, சில பெற்றோர்களால் தங்கள் மகள்களின் அன்றாட வாழ்க்கை, ஆர்வங்கள், கவலைகள் மற்றும் உணர்ச்சித்

தேவைகளைப் புரிந்துகொள்ளப் போதுமான நேரத்தைச் செலவிட முடிவதில்லை என்று காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

வீட்டில் அன்பும் கவனமும் கிடைக்கவில்லை என்று உணரும்போது, ​​சில இளம் பெண்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்களிடமிருந்து பாசம், கவனிப்பு

காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள்

மற்றும் புரிதலை நாடக்கூடும் என்று காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அது மேலும் கூறுகிறது.

இத்தகைய சட்டவிரோத மற்றும் முன்கூட்டிய கர்ப்பங்கள், கல்வி தடைபடுதல், குழந்தைப்பருவ இழப்பு மற்றும் எதிர்கால லட்சியங்களில் நீண்டகால பாதிப்பு

உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

“பல சமயங்களில், பெற்றோரிடமிருந்து விலகிச் செல்லும்போது, ​​பெண்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவிற்கு மாற்றாக கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களை நாடுகின்றனர்,” என்று அது கூறியது.

காவல்துறையின்படி, மகள்களை இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்க, பெற்றோர்களும் பாதுகாவலர்களும்

பின்வருவனவற்றில் மிகுந்த கவனம் செலுத்துமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்:

ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585
Posted in தியாகி பாடல் பாடல்கள்

ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585

ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585

ஒத்த சொல்லு ஓன்னால என் மனச நோகடிச்சாயே எனும் காதலின் வலி சுமந்த பாடலை தியாகி அவர்கள் எழுதியுலாளர் .

பாசம் காட்டி போன்றவளே ஒத்த சொல்லு ஓன்னால மனம், நோகுதடி
கண்கள் குளம் ஆகுதடி என்பதாக அவர் படாலில் குறிப்பிடுகிறார் .|Otha sollu unnala |585 |

மனதின் சுமைகளை இந்த பாடல் எடுத்து விளக்குகிறது

SAD ,SADSONG ,

பாடல் பெயர் ஒத்த சொல்லு உன்னால
பாடல் ஆசிரியர் தியாகி |THIYAKI
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்


வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

புட்டிம்மா ஏய் புட்டிம்மா | இளம்பிறை |544 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song
Posted in இளம்பிறை பாடல்கள்

புட்டிம்மா ஏய் புட்டிம்மா | இளம்பிறை |544 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

புட்டிம்மா ஏய் புட்டிம்மா | இளம்பிறை |544 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

புட்டிம்மா ஏய் புட்டிம்மா | இளம்பிறை |544 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song ,புட்டிம்மா ஏய் புட்டிம்மா பேத்தி மற்றும் பேரன்களுக்கு இடையில் இடம் பெறும் பாச பிணைப்பு இந்த பாடல் வெளிக் காட்டியுள்ளது .544

பாட்டி ,தாத்தா அன்பு பாசம் காதல்

பாட்டி ,தாத்தா அன்பு பாசம் காதல் என்பனவற்றை இந்த பாடலில் காண முடிகிறது .

பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் ,

எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன இந்த பாடலை வெளியீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது

பாடல் பெயர் புட்டிம்மா ஏய் புட்டிம்மா
பாடல் ஆசிரியர் இளம்பிறை |ILAMPIRAI
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்


வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

CLICK HERE FULL VIDEO

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye ThangaThampiye|514 |Ai Tamil Song

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song தம்பியின் துயர் பிரிவில் இந்த பாடலை பாடல் ஆசிரியர் சிவதா லண்டனில் இருந்து எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் இசை தயாரிப்பு குழுவினால் இசை அமைக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிக பாடல்

இவரது 26 வது பாடலாக இந்த பாடல் வெளியாகியுள்ளது .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிக பாடல்களை

எழுதிய பெண் என்ற சாதனையை பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் தொடர்ந்து தக்க வைத்துள்ளார் .

ஒரு குடும்பத்தில் அண்ணா ,தங்கை தம்பி பாச உறவு நிலையின் ஏக்கத்தை இந்த பாடல் அப்பட்டமாக வெளி படுத்தியுள்ளது .

கேட்கும் பொழுதே நெஞ்சு உருகும் நிலையில் இந்த தம்பியே தம்பியேஎன்கின்ற பாடல் அமைய பெற்றுள்ளது .

தம்பிகள் மீதும் பாசம் கொண்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

,வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதும் போட்டியில் பாடல் ஆசிரியர்கள் தமது திறனை தீவிரமாக வெளி படுத்தி வருகின்றனர் .

அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் தமிழர் மண்

Thampiye Thambiye Thanga Thambiye |Thampiye Thampiye Thanga Thambiye | 514 | Ai Tamil Song

Thampiye Thambiye Thanga Thambiye |Thampiye Thampiye Thanga Thambiye | 514 | Ai Tamil Song This song has been written by lyricist Sivatha from London in the Thambiyin Thooir section.

The music has been composed by Vanni Mainthan Music Production Team.

This song is her 26th song released. Vanni Mainthan Lyrics writer Sivatha continues to hold the record of being the woman who has written the most songs on the TikTok platform.

This song clearly reveals the longing for the affectionate relationship between brother and sister in a family.

This song, Thambiye Thambiye, has become a song that melts the heart when you listen to it.

This song is dedicated to those who love their younger brothers.

, Songwriters are actively showcasing their talent in the Thousand Song Writing Competition organized by Vanni Mainthan Tik Tok.

Our congratulations and appreciation to everyone.
May your work continue, may the Tamil land win.

CLICK HERE VIDEO

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி

ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி

ஆஸ்திரேலியா வீரவணக்கு நிகழ்வு தோல்வி அடைந்துள்ளதாக அங்கு திரண்ட மக்கள் கூட்டம் தெரிவித்துள்ளனர்.

திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழருடைய மண்டபத்துக்கு முன்பாக திரண்ட பெரும் திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனை அறிந்த கார்களில் வந்தவர் மண்டபத்துக்குள் நுழைய முடியாதபடி மக்கள் தடுத்தனர்.

தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள கூலிக் குழு ஒன்று வீரவணக்க நிகழ்வை நடத்த முற்பட்டது.

முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள்

முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள் ,தலைவர் இறந்துவிட்டார் என உரிமை கூற முற்பட்டதை அடுத்து ,மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் முறுகல் இடம்பெற்றுள்ளது .

அடையாளம் தெரியாத சிங்கள கூலிகளாகவும் இந்திய கூலிகளுக்கும் செயல்படும் கூலிகளே தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என இந்த வீரவணக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனைக் கண்டித்து தலைவர் மீதும் தமிழீழ மண் மீதும் தமிழீழ மக்கள் மீதும் பாசம் கொண்ட அறத்தமிழர்கள் திரண்டு எழுந்து தமது எதிர்ப்பை காட்டினர்.

இதனால் அந்த நிகழ்வு தோற்றுப் போனதை கீழே உள்ள காட்சிகள் ஊடாக நீங்கள் காணலாம்.

தலைவரையும் தமிழீழ மண்ணையும் நேசிக்கிற மானத் தமிழர்கள் இப்படித்தான் கிளெர்ந்தெழுவார்கள் என்பது சிங்கள கூலிகளுக்கும் வாடகை வாய்களுக்கும் இது ஒரு சாட்டை அடியாக காணப்படுகிறது.

இன்று மதியம் லண்டநேரம் ஐந்து மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் இதுதான் பேச்சு.

கண்ணாமூச்சியா காதல்
Posted in கவிதைகள்

கண்ணாமூச்சியா காதல்

கண்ணாமூச்சியா காதல்


மெல்லமாக எனைக் கொல்கின்றேன் – உன்
மௌனத்தில் சிரிக்கின்றேன்
கண் பேசும் வார்த்தைகள் – நான்
காவியங்களாக சேர்க்கின்றேன்

தெரிந்த பாசம் தெரியாதவளாய்
தெரியாத வேஷம் கொண்டவளாய்…
நெருக்கம் கொஞ்சம், தூரம் அதிகமாக
என் இதயத்தை நாளும் சோதிக்கிறாய்

உன் பேச்சு ஓர் பதில் தரும் என
நான் காத்திருக்கின்றேன்
புரிந்தும் புரியாமலும் – காதல்
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்தான்.

வந்து வந்து பேசுகிறாய் -தினம்
வரவேற்பை தருகின்றாய்
கொஞ்சி பேச மறுப்பதேன் -என்னை
கொள்ளையடிக்க வெறுப்பதேன்

என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

உந்தன் கவி படிக்கையில
உள்ளம் வியக்குதடி
உன்னை தினம் பார்த்திடவே
உள்ளம் துடிக்குதடி

நீ எழுதி வைத்த கவிதையதை
நித்தம் புரட்டி படிக்கையில
சத்தம் இன்றி கிடக்குதடி – மனம்
சாதனை போல பேசுதடி

பன்மையில் பகிரும் மொழியதனில்
பாசம் வந்து கொட்டுதடி
ஒருமையில் பேசும் சங்கதியில்
ஓடி மனம் துள்ளுதடி

என்னை என்னடி செய்தாயோ – என்னை
ஏனோ சிறை வைத்தாயோ
உன்னை மறக்க முடியாமல்
உள்ளத்தை ஏனோ வைத்தாயோ

பேசா பேசும் பேரழகே
பேரொளி எனக்கு காட்டாயோ
பக்கம் வந்து பார்த்திடவே
பாவை என்னை அழைக்காயோ ..?

ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்

காதலே சோகமா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காதலே சோகமா

காதலே சோகமா

காதலே சோகமா
உன்னாலே நெஞ்சிலே பாரமே
ஆனந்தம் வந்து கூடாதோ
ஆருயிரே பாசம் காட்டாயோ
உன்னை மறக்க முடியல
இன்னோர் இதயத்தை தேட பிடிக்கல

நேற்றுவரை நெஞ்சுக்குள்ள நீ இருந்தாய்
நெசமா பல கதை சொன்னாய்
இன்று மறந்து போனதென்ன
இதயத்தில் வலி தந்ததென்ன

உன்ன போல ஒருவரை
இன்றுவரை நானும் பார்க்கல
உயிராய் இருந்தாய்
இன்னும் நானும் மறக்கல

ஏனோ என்னை மறந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்
உயிரே உயிர் வலிக்குது
உயிர் பிரியவே மனம் துடிக்குது

உன்னை மறக்க முடியல
இப்படி நடக்கும் என்று நினைக்கல
இதயமே வாழ பிடிக்கல
சத்தியமாய் சொல்கிறேன்
என்னை வந்து கொன்று விடு …!

ஆக்கம் – 02-05-2025
வன்னி மைந்தன்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்

அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள் ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கடந்த தினம் அர்ச்சுனா எங்கே என கேட்டு கேட்டு பெண்கள் அழுத்த காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் உள்ளது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவு கடந்த பாசம் மேற்படி காணொளியில் பெண்கள் அழுத கண்ணீர் குமுறல் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது .

கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் மக்களே

வீடியோ

அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு

அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு

அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவற்ற பாசம் இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .

ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக தமது நிலை பாட்டை காண்பித்து வருவது ,அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்து காண்ப்பிக்கிறது .

அத்துடன் அனுரா வருகை மக்களிற்கான விழிப்புணர்வு மற்றும் ,நல்லாட்சியை வழங்கும் என்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கிறார் .

கட்சி சின்னம் ,அதன் செயலணி உருவாக்கம் தொடர்பாகவும் ,இந்த காணொளியில் தெரிவித்துள்ளார் .

கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

வீடியோ

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது

ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது

இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு

எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்

தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.

உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.

ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.

ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.

ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.


எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.

அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.

2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.

ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.

ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.

யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.

அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.


ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.

மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.


டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .

நன்றி டேவிட் அண்ணா .

என்னை எரிக்காதே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை எரிக்காதே

என்னை எரிக்காதே

பங்கு சந்தை போல
பாவை நீ ஆடாத
ஏற்ற இறக்கம் போல
ஏறி என்னை மிரட்டாத

சேர்த்து வைத்த இலாபத்தை
சேதமாக்கி போகாத
செய்கூலி இல்லாமாலே
சென்நெருப்பை வீசாத

சாட்டை நீ பார்க்காமலே
சாளரத்தை திறக்காத
தோற்றுவிட்ட பின்னாலே
தோல்வி என்னில் வீசாத

மூச்சு முட்ட பாசம் வைத்தேன்
முன்னே என்னை முறைக்காத
தாலி கட்டும் வரைக்கும் என்னை
தள்ளி என்னை வைக்காதே

வன்னி மண் யுத்தம் போல
வாட்டி என்னை எடுக்காத
வாலாட்டும் நாயைப்போல
வாசலில வைக்காதே

உன்னை நானே நம்பி வந்தேன்
உயிரே என்னை வெறுக்காதே
வைகாசியில் பிறந்தவளே
வைக்கோலாய் என்னை எரிக்காதே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-06-2024

தாயுமானவள்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

தாயுமானவள்

தாயுமானவள்

தாயுமானவள் “அண்ணா…அப்பாட்டைப் போப்போறேன்” “அம்மாட்டைப் போப்போறன் “… என்று உடலில் சத்திர சிகிச்சைக்காக ஏற்றப்பட்டு பின்னர் வலுவிழந்து கொண்டிருக்கும் அனஸ்தீசியா மருந்தின் தாக்கத்தினால் அரைகுறை மயக்கத்தில் புசத்திக் கொண்டிருந்தாள் அகல்.

அகலுக்கு கனவுலகில் எங்கோ வெண் பஞ்சுக் கூட்டத்தின் நடுவே தேவதூதர்களுடன் பறப்பது போலிருந்தது…

அவளுக்குத் தேவதூதர்களாக மலர்ந்த முகத்துடனும் கனிந்த பார்வுயுடனும் கண் முன்னே தென்படும் எல்லா மருத்துவப் போராளிகளும் தோன்றினார்கள்.

அருகிலே கலங்கல் உருவமாகத் தெரிந்த stethoscope ஐ கழுத்தில மாலையாக அணிந்தவாறு blood pressure ஐயும் pulse ஐயும் check பண்ணிக் கொண்டிருந்த

போராளி வைத்தியரான இனியன் ரொக்டரைப் பார்த்துத் தான் அகல் அனஸ்தீசியா மருத்தின் தாக்கத்தினால் கையைக் காலையடித்து திமிறிக் கொண்டு இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாள்.

அவனும் சகோதர பாசத்துடனும் தாயைப் போன்ற பரிவுடனும் அவளது தலையைத் தடவியவாறு “ஓமம்மா அம்மா அப்பாட்டை போகலாம்…

பிள்ளைக்கு காயம் எல்லாம் மாறினவுடன எல்லோரையும் பார்க்கப் போகலாம்” என்று கூறிச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்…

அரைகுறை மயக்க நிலையில் அகலின் ஆழ் மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் கேள்விக் கணைகளாக இனியன் டொக்டரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

அவனும் அலுக்காமல் சலிக்காமல் அவளது எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தவாறு இருந்தான்.

அழகிய பூவொன்று வாடினாற் போலிருந்த அவளது முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

போர் முன்னரங்கப் பகுதி ஒன்றில் களமருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில்

பி.கே இன ஆயுத ரவை ஒன்று அவளது இடுப்பு பகுதிக்குள்ளால் நுழைந்து நெஞ்சுப் பகுதியால் வெளியேறி இருந்தது.

இதனால் அவளது சிறு குடலில் பாதிப்பு ஏற்பட்டதனால் அதனின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்தது.

இனியன் டொக்டரின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…அவனுக்கு அகலைச் சிறுவயது முதலே தெரியும்.

அவனின் சித்தியின் பக்கத்து வீட்டில் தான் அவள் வீடு இருந்தது. அவனின் சித்தியின் மகள் மதுவின் சிறு வயதுத் தோழியும் பாடசாலை நண்பியும் தான் அவள்.

யாழ்ப்பாணம் திண்ணைவேலியில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் அவர்களது வீடு அமைந்திருந்தது.

அவன் அமைப்பில் போராளியாக இணைய முதல் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இரண்டு ஆண்டுகள் கல்விகற்ற காலத்தில்
சித்தி வீட்டில் தான் தங்கி நின்று கல்வி கற்றான்.

அப்போதுதான் அகல் அவனுக்கு அறிமுகம் ஆனாள்.அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும்.

அவனின் சித்தியின் மகளும் அவளும் ஆண்டு ஐந்து புலமைப்பரிசுப் பரீட்சையில் அதிஉயர் புள்ளிகள் பெற்று யாழ்நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.

அகலின் அப்பா யாழ் நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர்.

அம்மா வங்கி ஒன்றின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

அம்மா, அப்பா, அவளைவிட இரண்டு வயது குறைந்த தம்பி என அழகிய அவளது சிறு குடும்பம் இருந்தது.

நல்ல சிவந்த நிறமும் கருந்திராட்சை போன்ற துரு துரு விழிகளும் செப்பு வாயும் சுருட்டை முடியும் கொழு கொழு கன்னங்களுமாக பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சிறுமியாக அவள் தோற்றம் அமைந்திருந்தது.

படிப்பிலும் விளையாட்டிலும் வலு கெட்டிக்காரி. மதுவுடன் விளையாட வரும்போது இனியனுடனும் அண்ணா…

அண்ணா என்று மிகவும் அன்பாக அழைத்துப் பழகுவாள்.

அவன் படிக்கும் புத்தகங்களை ஆர்வத்துடன் தானும் எடுத்து வாசித்துப் பார்த்து விட்டு அவற்றினைப்பற்றி எதுவும் நன்றாகப் புரியாத போதும் “அண்ணா…

நானும் கெட்டிக்காரியாகப் படித்து வளர்ந்ததும் ஒரு டொக்டராக வருவேன் ” என்று அழகிய அவளது கண்களில் கனவு மிதக்கக் கூறுவாள்.

மகிழ்வாகப் போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் அவர்களது குடும்பத்தில் முதலாவதாக ஒரு பேரிழப்பு ஏற்பட்டது.

கொழும்பில் அவளது மாமா பிரபல சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் குடும்பத்துடன் தான் கொழும்பில் வைத்தியர்களுக்கான குவாட்டர்சில் அகலின் அம்மம்மா, தாத்தாவும் வசித்து வந்தனர்.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பில் கொழும்பில் பிரபல சத்திர சிகிச்சை நிபுணராக அவளது மாமா இருந்த போதும் தமிழர்கள் என்ற

காரணத்தினால் அவளது மாமா, மாமி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையும் குவார்டர்சில் வைத்துக் கதறக் கதற வாளால் வெட்டப்பட்டு எரியூட்டிக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவளது அம்மம்மா, தாத்தா கொழும்பில் அவர்கள் இடத்திலிருந்து சிறிது தள்ளி வேறு ஒரு இடத்தில் வசித்து வந்த உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்குச் சென்றபடியால் அந்தச் சம்பவத்தில் இருந்து தப்பியிருந்தனர்.

பின்னர் அந்த உறவினர் குடும்பத்துடன் சேர்ந்து அவளது அம்மம்மாவும், தாத்தாவும் உடுத்த உடையுடன் மாற்றுடை இல்லாது வவுனியா காட்டுப்பகுதியினூடாக நடையில் பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பி யாழ்ப்பாணம் வந்து அவளது குடும்பத்துடன் தங்கியிருந்தனர்.

அம்மம்மா, தாத்தாவிடமிருந்து ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை தூண்டித் துருவி அறிந்த அகலின் மனதில் அப்போதே இலங்கை அரசின் மீது ஆழமான ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்து. அம்மம்மா,

தாத்தாவிடம் அறிந்த ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை இனியவனுடனும் பகிர்ந்து “ஏன் அண்ணா சிங்களவர்கள் இப்படித் தமிழ் மக்களுக்குச் செய்யினம் ” என்று கவலையுடன் கேட்பாள்.

இனியவன் அந்தச் சிறுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறுவான்.

பின்னர் காலவோட்ட மாற்றத்தில் காலத்தின் தேவை அறிந்து இனியவனும் தனது படிப்பை இடைநிறுத்தி விட்டு போராளியாக மாறி மருத்துவப்போராளியாக கடைமையாற்றிக் கொண்டிருந்தான்.


தமிழீழ மருத்துவப் பிரிவின் மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்ட அணி ஒன்றிற்கான மருத்துவப் போராளிகளுக்கு வகுப்பு எடுப்பதற்காக இனியவன் ஒரு முகாமுக்குச் சென்றிருந்த போது

“ரமணன் அண்ணா” என்று இனியவனின் சொந்தப் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரு பெண்ணின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

திருப்பிப் பார்த்தால் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடன் வெள்ளை நிற சேட்டும் கறுப்புநிற ஜீன்சும் இடுப்பில் கறுப்புப் பட்டியும் அணிந்தபடி

மெல்லிய வெள்ளைநிறத் தோற்றத்துடன் அழகிய பெண் போராளி ஒருத்தி சிரித்த வண்ணம் நின்றிருந்தாள்.

இனியனுக்கு அவளைக் கண்டதும் முகம் எங்கோ கண்ட மாதிரி நினைவு வந்தது. யாரிது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது “ரமணன் அண்ணா…

என்னைத் தெரியவில்லையா…?நான் தான் மதுவின் பிரண்ட் ஜானு”…இப்ப என்ர பெயர் “அகல் ” என்றாள் சிரித்தபடி…

இனியவனுக்கு அவளைப் பார்க்க வியப்பாக இருந்தது.

கடைசியாக 12 வயதுச் சிறுமியாகக் கண்ட “ஜானுவை” இப்ப 20 வயது அழகிய இளம் பெண்போராளியான “அகல்” ஆகக் காணுகின்றான்.

அவளது தோற்றத்தில் முந்தி இருந்த குழந்தைத்தனம் மாறி இப்ப ஒரு “போராளிக்குரிய உறுதியும் வீரமும் மிடுக்கும்” காணப்பட்டது.

எனினும் கண்களில் ஏதோ ஒரு சோகம் இழையோடியிருந்ததை இனியவன் இனங்கண்டு கொண்டான்.

இனியவன் மேற்படிப்புக்காக மேற்கத்தைய நாடு ஒன்றிற்கு அமைப்பினால் அனுப்பப்பட்டு ஐந்து ஆண்டுகள் கற்கைநெறி நிறைவடைந்தவுடன்

ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்கான தகுதிச் சான்றிதழுடன் தாயகம் திரும்பி வன்னிப்பகுதியில் மக்களுக்கும் போராளிகளுக்கான முழுமையான மருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தான்.

இதனால் அவனுக்கு தனது சித்தி குடும்பம், ஜானு பற்றிய விபரங்கள் தெரியாதிருந்தது.

அகலுடன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு போகும்போது தான் சித்தி குடும்பம் பற்றிய அவளது குடும்பம் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான் இனியவன்.

இடிமேல் இடியாக அகலின் குடும்பத்திற்கு அடுத்த இரண்டாவது இழப்பும் ஏற்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் விமானத்தாக்குதலின் குண்டு வீச்சில் அவளது சிறிய தம்பியையும் அவள் இழந்திருந்தாள்.

இனியவனுக்குத் தெரியும் அகல் தனது தம்பி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் என்பது.

தம்பியின் இழப்பு பற்றி அவள் கூறும் போது கண்கள் சிறிது கலங்கினாலும் போராளிக்குரிய மனவுரத்துடன் கவலையை மறைத்து அவள் காட்டிய முகமாற்றத்தை பார்த்த இனியவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது தம்பியின் இழப்புக்குப் பின்னர் அவளது அம்மா, அப்பா, அம்மம்மா , தாத்தா எல்லோருக்கும் எல்லாமுமாக அவள் தான் இருந்திருக்கிறாள்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அவ்வளவு இழப்புகள் போர்ச்சூழலுக்கு மத்தியிலும் மனவுறுதியுடன் கற்று மிகச்சிறந்த அதி பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் உயிரியல்துறையில் எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் நாட்டின் போர்ச்சூழல் அவளைத் தொடர்ந்து கல்வி கற்க விடவில்லை. இராணுவத்தின் நிலப்பறிப்புகள், விமானக் குண்டு வீச்சுகள் ,

எறிகணை வீச்சுகள் இதனால் தொடர் இடப்பெயர்வுகள் எனத் தொடர்ந்த இராணுவ அட்டூழியங்களினால் காலத்தின் தேவை கருதி தன்னையும் போராளியாக இணைத்துக் கொண்டாள்.

அவள் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்றபடியினால் மருத்துப்பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டாள்.

அவளின் மிகச்சிறந்த க.பொ.த சாதாரண தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தமிழீழ மருத்துப் பிரிவில் போராளி மருத்துவர்களுக்கான மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்க நியமிக்கப்பட்டிருந்தாள்.

அங்கே போராளி மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரையாளராக இனியவன் வந்திருந்த போதே அகலை அவன் சந்தித்தான்.

அந்த மருத்துக் கல்லூரியில் அகல் தான் சிறிய வயதுப் போராளி .

ஆனாலும் அறிவில் முதிர்ந்த மற்றைய மருத்துவப் போராளிகளுக்கு நிகராக மிகவும் ஆர்வத்துடன் கற்கைநெறியைத் தொடர்ந்தாள்.

அங்கே மருத்துவப் போராளிகள் கற்கைநெறியையும் மேற்கொள்ளும் நேரத்தில் தேவைப்பட்டால் களமருத்துவப் பணிகள்,

காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல், வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து காயப்பட்டு வரும் போராளிகளுக்கான சத்திரசிகிச்சைகளில் உதவியாகச் செயற்படுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுவார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மருத்தவப் போராளிகளின் பங்களிப்பானது தலையாயதும் காத்திரமானதுமாகும்.

களத்திலே காயப்பட்டு வரும் போராளிகளுக்கு அவர்களே அம்மாவாகவும் அப்பாவாகவும் அனைத்துமாகவும் இருந்து களத்திலும் சரி மருத்துவ முகாம்களிலும் சரி தங்களது பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளுவார்கள்.

தங்கள் தூக்கத்தை பசியை ஒறுத்து ஒரு தாய் தனது குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பாளோ அவ்வாறே காயப்பட்டு வரும் போராளிகளை அன்புடன்

அரவணைத்து ஆறுதல் கூறி குளிப்பாட்டி உணவூட்டி உடைமாற்றி எந்த அருவருப்போ முகச்சுளிப்போ அற்று எந்நேரமும் இன்முகத்துடன் கடமையாற்றுவார்கள்.

அவ்வாறே மருத்துவ முகாமிலே அகலும் அனைவருக்கும் தாயுமானவளாக விளங்கினாள்.

பாரிய விழுப்புண்களுக்குள்ளான போராளிகளுக்கு venflon மூலம் அடிக்கடி (injection) ஊசி மருந்து ஏற்றும் போது கை வீங்கி injection ஏற்ற முடியாதவாறு கடும் வேதனையாக இருக்கும்.

அதனால் மருத்துவப் போராளிகள் injection போட வரும்போது காயப்பட்ட போராளிகள் வலிவேதனையில் கத்தியவாறு போட மறுப்பதுண்டு.

ஆனால் அகல் injection போட வந்தால் அவர்கள் அமைதியாகப் போட விடுவார்கள்.

அவர்களுக்கு வலி தெரியாதவாறு நகைச்சுவைக் கதைகள் கூறி மென்மையாக பக்குவமாகச் சிரித்தபடியே injection ஐ ஏற்றிவிடுவாள் அவள்.

அதனால் காயப்பட்ட போராளிகள் எல்லோரும் “அகல் டொக்டர் வந்தால் தான் injection போடுவேன் ” என்று அடம் பிடிப்பதுண்டு.

அதைவிட வலிவேதனைகளால் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் போராளிகளையும் அன்பாக கதைத்து மிரட்டி தனது குழந்தைகளுக்குத் தாய் உணவூட்டுவது போன்ற பரிவுடனும் பக்குவத்துடனும் ஊட்டி விடுவாள்.

அவர்களும் அவளது அன்பான அணுகுதலைக் கண்டு எதிர்ப்புக் காட்டாமல் உண்ணுவார்கள்.

மருத்துவப் போராளியாக இருந்த போதும் அகலின் மனதிலும் எல்லாப் போராளிகளைப் போலவும் தானும் சண்டைக் களத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவா நீண்ட காலமாகக் குடிகொண்டிருந்தது.

தனது பொறுப்பாளரிடம் அடிக்கடி “என்னை ஒரு தடவை என்றாலும் சண்டைக்கு விடுங்கோ அக்கா” என்று நச்சரிப்பாள்.

மருத்துவத்துறையில் கற்று நன்றாகத் தேர்ச்சியடைந்த போராளியான அவளைச் சண்டைக்கு விட்டு இழந்தால் அவளை மாதிரி இன்னொரு

மருத்துவப் போராளியை கற்பித்து பயிற்றுவித்து உருவாக்குவது கடினம் என்ற படியால் அவளது பொறுப்பாளர்

“இயக்கம் சொன்னதைத் தான் நீர் செய்ய வேண்டும்…

நீர் சொன்னதை இயக்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது…

இயக்கத்திற்கு எங்க எங்க யார் யாரை எப்போது எந்த நேரத்தில விடவேண்டும் எண்டு தெரியும்…

அதுவரை இயக்கம் தந்த உம்மட வேலையைப் பாரும் ” என்று அகலின் கோரிக்கையைத் தட்டிக் கழித்தவாறே வந்தார்.

ஆனால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற மாதிரி அகலின் தொடர் நச்சரிப்பால் அவளின் கோரிக்கையை ஏற்றுச் சிறிது காலம் போர் முன்னரங்குகளில் களமருத்துவப் பணியை மேற்கொள்ள அனுமதித்தார்.

அவளும் பெருமகிழ்வுடன் தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்வுடன் தனது மருத்துவ முகாம் போராளிகளிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றாள்.

காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த போராளிகளுக்கே தாயைப் போன்று பரிவு காட்டிய அவளது பிரிவு மிகவும் தாங்க முடியாதிருந்தது.

ஆனால் போராளிகள் என்றால் வலியும் பிரிவும் இழப்பும் சாதாரணம் தானே. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு கண்ணீருடன் அவளுக்கு விடை கொடுத்தார்கள்.

படையணிப் போராளிகளுடன் இணைந்து கடுமையான போர்ப் பயிற்சியினை எடுத்து நிறைவு செய்ததும் அவளும் போர் முன்னரங்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டாள்.

களத்திலேயும் அகலின் பணி காத்திரமானதாக அமைந்தது. பச்சைநிறச் சீருடையில் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை

முதுகிலும் நெஞ்சில் கோல்சரும் குறுக்கே துப்பாக்கியையும் கொழுவியபடி வோக்கிடோக்கியையும் கையில் வைத்துக் கொண்டு மிடுக்கான நடையுடன் இன்முகத்துடனும் நேர் கொண்ட பார்வையுடனும் போர் முன்னரங்கப்

பகுதிகளில் காவலரண்களுக்கு அவள் சென்று வரும் போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நேரே கண்ட மாதிரி பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், கிளைமோர் தாக்குதல்கள், கண்ணிவெடிகள்,

ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல்கள் அனைத்திற்குள்ளாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது முன்னரங்குகளில் நிற்கும் போராளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கச் சென்று வருவாள்.

அப்படித்தான் ஓர்நாள் போர் முன்னரங்கிலே நிற்கும் ஒரு போராளிக்கு கடும் காய்ச்சல் அடிக்க மெயினில் நின்ற அவளுக்கு வோக்கி டோக்கியில் அழைப்பு வந்தது.

அகலும் அவளது உதவியாளரான இன்னொரு பெண் போராளியும் போர் முன்னரங்கப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஏற்கனவே அந்தப் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என அறிவுறுத்தல் வந்திருந்தது.

மெயினில் நின்ற பொறுப்பாளர் அகலுக்கும் அவளுக்கு உதவியாகச் சென்ற மற்றைய போராளிக்கும் பாதுகாப்பாகச் சென்று வரக் கூறி ஏதும் உதவி

தேவைப்பட்டால் உடனே வோக்கி டோக்கியில் அறிவிக்கும்படியும் உடனே தயாராக நிற்கும் முறியடிப்பு அணியைத் தாம் அனுப்புவதாகவும் சொல்லி அனுப்பினார்.

காய்ச்சல் வந்த போராளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து விட்டு அகலும் அவளது உதவியாளரும் மெயினை நோக்கித் திருப்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

வரும் போது பொறுப்பாளரினால் எச்சரிக்கை செய்யப்படிருந்ததனால் இருவரும் சுற்று முற்றும் அவதானமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தனர்.

அகலுக்கு வரும் போது இல்லாத ஏதோவொரு வித்தியாசம் தென்பட்டது. அதனைத் தனது உதவியாளராக வந்த போராளியிடம்

“கயல் எனக்கு வரும் போது இருந்ததை விட இப்போது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது என்று கூறினாள்.

அவளும் “ஓம் அக்கா எனக்கும் வித்தியாசம் தெரிகிறது என்றாள்” . ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று அகலின் உள் மனம் உணர்த்தியது.

அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து அண்ணளவாக 200m தூரத்தில் திடீரென்று ஆட்காட்டிக் குருவிகள் கீச்சிட்டவாறு சிறகடித்துப் பறந்தன.

உடனே அகலும் மற்றைய போராளியும் எச்சரிக்கையாகி அருகில் நின்ற மரத்திற்குப் பின்னால் காப்பெடுத்தவாறு நிலமையினை அவதானித்தனர்.

சிறிது தூரத்தில் இலைகுழைகளால் உருமறைப்புச் செய்த தொப்பியணிந்த ஆறேழு இராணுவத்தினரின் தலைகள் தென்பட்டன.

அகல் தனது துப்பாக்கியைத் தயார்நிலையில் வைத்தபடி கயலுக்கும் துப்பாக்கியைத் தயார்நிலையில் வைக்கும்படி கூறிவிட்டு உடனே வோக்கியில்

மெயினிலுள்ள பொறுப்பாளருக்கு அருகில் உள்ள இராணுவத்தினருக்கு கேட்காத வகையில் நிலமையைத் தெரியப்படுத்தினாள்.

அவரும் அவர்கள் நிற்கும் இடத்தை தெளிவாகக் கேட்டு விட்டு இயன்றவரை சண்டையைத் தவிர்த்து தமது உதவி முறியடிப்பு அணி வரும்வரை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.


அகலும் “சரியக்கா அப்படியே செய்கிறோம் ” என்று கூறிவிட்டுத் திரும்பும் போது அகலின் அசைவினை ஒரு ஆழ ஊடுருவும் இராணுவத்தினன் அவதானித்து விட்டு அவளை நோக்கிச் சுடத் தொடங்கி விட்டான்.

மிகவும் பாரமான மருத்துவப்பையினைத் தோளில் சுமந்தவாறு அகலும் மற்றைய போராளியான கயலும் மரங்களுக்கிடையே காப்பெடுத்தவாறு காப்புச்சூட்டை வழங்கியவண்ணம் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இராணுவ அணியிலோ ஏழு பேர் இருந்தார்கள்.

ஆனால் இங்கு அகலும் கயலும் மட்டும் தான். ஆனால் இருவருக்கும் எடுத்த கடும் பயிற்சி கைகொடுத்தது.

இருவரும் மனவுறுதியுடனும் ஓர்மத்துடனும் பதில் தாக்குதலை வழங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் உதவி முறியடிப்புத் தாக்குலணியினரின்

லீடர் அகலுடன் வோக்கியில் தொடர்பு கொண்டு தங்கள் அணி அருகில் வந்து விட்டது மனம் தளராது இருக்கும்படி தெரிவித்தார்.

மருத்துவப்பையுடன் மரத்துக்குப் பின்னே காப்பெடுத்து நின்று கொண்டிருந்த அகலினை இராணுவத்தினரின் பி.கே இன ரவை ஒன்று இடுப்பைத் துளைத்தவாறு உள்ளே புகுந்து நெஞ்சு வழியாக வெளி வந்தது..

இரத்தம் பெருக்கெடுத்தோட கீழே விழுந்தாள் அகல்.

அருகே இன்னொரு மரத்துக்குப் பின்னால் காப்பெடுத்து நின்றிருந்த கயல் இதனை அவதானித்து ஓடி வந்து அகலின் காயங்களுக்கு இரத்தம் வெளியேறாதவாறு பீல் கொம்பிரசை வைத்துக் கட்டினாள்.

இவர்கள் நின்ற இடத்தைக் குறிவைத்தபடி மூன்று இராணுவத்தினர் சுட்டவாறு முன்னேறி வந்து கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த அகல் “என்னால முடியாமல் இருக்கு …

என்னைச் சுட்டுவிட்டு நீ தப்பிச் செல்” என்று கயலிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

ஆனால் கயல் அதனை ஏற்றுக் கொள்ளாது “அகல் அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில எங்கட அணி வந்திடும்….

அதுவரை கொஞ்சம் தாக்குப் பிடியுங்கோ…நான் அவங்களுக்கு டைவர்ட் காட்டி எதிர்ப்பக்கம் ஓடுறன்…

எப்படியாவது நீங்கள் தப்பிச் செல்லுங்கோ அக்கா…

உங்கட சேவை இயக்கத்துக்கு முக்கியம் தேவை..உங்களால் நிறையப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற முடியும்…

இயக்கம் உங்களை எவ்வளவு செலவளித்து படிப்பித்தது …அதற்கு பிரயோசனம் இருக்கோணும் ” என்று கூறியவாறு அகல் மறிக்க மறிக்க இராணுவத்தினரை நோக்கிச் சுட்டவாறு முன்னேறிச் சென்றாள்.

மூன்று இராணுவத்தினரின் கவனமும் கயலை நோக்கித் திரும்பியது. கயலின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி ஒரு இராணுவத்தினன் வீழ்ந்தான்.

மற்ற இரண்டு இராணுவத்தினரின் ரவைகளும் கயலின் உடலைத் துளைத்துச் செல்ல கயலின் உடல் அவள் நேசித்த மண்ணில் வீழ்ந்தது.

அவளின் இரத்தத்தால் அந்தமண் சிவந்தது.

இப்படித் தான் எத்தனையோ போராளிகள் தன்னலம் கருதாது நாட்டினதும் இயக்கத்தினதும் தேவையை உணர்ந்து தம்முயிரை ஈய்ந்துள்ளனர்.

பின்னர் போராளிகளின் உதவி முறியடிப்பு அணி அந்த இடத்தினை வந்தடைந்திருந்தது.

அவர்கள் இராணுவ ஆழ ஊடுருவும் அணிக்கு எதிரான தாக்குதலை நடாத்தி மிகுதி இராணுவத்தினரையும் கொன்றொழித்து அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி காயப்பட்ட அகலையும் பின்னகர்த்தினர்.

அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அனுப்பப்பட்ட போதுதான் அங்கு இனியன் அகலைக் கண்டான்.

மருத்துவப் போராளிகளின் சிறந்த மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அவளின் மனவுறுதியும் சேர்ந்து அகலின் காயங்களை வெகு விரைவில் குணமடையச் செய்தது.


பின்னர் தன்னைக் காப்பாற்றிய கயலின் அகலா நினைவையும் கனவையும் நெஞ்சில் சுமந்தவாறு தனது கற்கை நெறியைத் தொடர்ந்து நிறைவு செய்து

ஒரு முழுமையான போராளி வைத்தியராகத் திரும்பவும் கழுத்தில் மாலையாக ரெதஸ்கோப் அணிந்தவாறு இன்முகத்துடன் போராளிகளுக்கும் மக்களுக்குமான தாயகத்தின் தாயுமானவளாக அகல் தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றாள்.

யாவும் கற்பனை அல்ல…

நிலாதமிழ்.சிறு கதைகள்

தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்

தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்

தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்துள்ளதுடன் தமிழர் அரசியலை முன்னிலை படுத்த ஒன்றிணைவது காலத்தின் தேவை என்கிறார் .

தேர்தல் வரும் பொழுதெல்லாம் ஒற்றுமை நேசம், பாசம், என கூறும் தமிழ் அரசியல் காட்சிகள் ,தேர்தல் முடிந்தது வெள்ளை வேட்டியை மடிச்சு கட்டி ஓடிவிடுவது ஏன் என்பது தெரியவில்லை .

மூன்றாம் பேச்சு மேசையின் பொழுது ஒட்டு குழுக்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்க பட்டதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு .

எனவே இவர்கள் கூற்றின் படியும் மீளவும் அனைவரும் ஒன்றித்து பணியாற்றுவது காலத்தின் தேவை எனும் சித்தார்த்தன் கூற்று சரியானது தான் என்கிறது ஒரு தரப்பு .

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அது சார்ந்தவர்கள் நிலைப்பாடு வேறாக உள்ளது .ஆக மொத்தம் யார் குற்றியும் அரசி வேகாது என்பதுதான் இன்றைய தமிழர் அரசியல் நிலை .

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எந்த சமயமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சமயம் அல்ல எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில் (19) நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் றிஸ்வியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரையொன்று வெளியிடப்பட்டதுடன் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அதனை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

நிகழ்ச்சி நிரலில் முந்திக் கொண்டமைக்காக முதலில் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.நான் இறுதியாக பேசுவதாகவே இருந்தது. எனினும் இன்று புதிதாக இரண்டு அமைச்சர்கள் பதவியேற்க இருப்பதனால் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாக நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். முழுக்கூட்டமும் முடிவடைந்து நான் செல்லும் வரை அவர்கள் காத்திருக்க மாட்டார்கள்.

இந்த அமைப்பினுடைய தலைவரது முழுமையான பேச்சை நான் செவிமடுத்ததுடன் அதில் அவர் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் விசேடமாக கருத்துக்கூற விரும்புகின்றேன்.

உலமா சபை இன்று தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இது அவர்களது நூற்றாண்டு விழாவாகும். இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தை நினைவுக்கூற வேண்டும். முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் உலகம் மிகப் பெரிய மாற்றத்துக்கு முகம்கொடுத்து வந்த காலகட்டமே1922 ஆம் ஆண்டாகும்.

இக்காலப்பகுதியில் கலீபா ஆட்சி முறையை ஒழிக்கும் நடைமுறையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கலீபா ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்கு இந்தியா மிகப் பெரிய இயக்கமொன்றைக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் அதே காலப்பகுதியில் தான் முஸ்லிம்களின் எண்ணங்களதும் சிந்தாந்தத்தினதும் மையமாகச் செயற்படும் உலமா சபை எனும் அமைப்பை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் அப்போதிருந்த சில பிரச்சினைகளுக்கு நாம் இன்றும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.

நாம் இப்போது வித்தியாசமானதொரு உலகத்தில் வசிக்கின்றோம். 1922 ஆம் ஆண்டில் 150 நாடுகளும் அப்போது இருக்கவில்லை. நாம் புதிய நூற்றாண்டில் வசிக்கின்றோம். விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி, அரசியல் உரிமைகளின் முன்னேற்றம் என்ற இந்தப் பின்னணியில் நாம் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்.

இஸ்லாம் மட்டுமன்றி அனைத்து சமயங்களுமே தமது சமயத்தின் அடிப்படைகளையே பார்க்கின்றன. சமயம் கூறும் தூய்மையான அர்த்தங்கள் எவை? அவற்றை எவ்வாறு நவீன உலகத்துடன் இணைப்பது? சமயத்தின் அடிப்படையை நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பௌத்தம். புத்த பெருமான் கங்கைக் கரைகளில் இருந்து பௌத்த மதத்தைப் போதிக்கும்போது கரையோர நகரிகமே இருந்தது. எனினும் அது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது பௌத்த சமயத்தில் ஓரளவு அடிப்படையைக் கொண்டிருந்த கரையோர நாகரீகத்தை கட்டியெழுப்ப எம்மால் முடிந்தது. அது கௌதம புத்தருடைய காலத்தில் இல்லை என்பதற்காக நாம் இந்த நாகரீகத்தை நிராகரிக்கவில்லை. எனினும் எம்மால் அந்த நாகரீகத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

அதுபோன்றே, நாம் அனைவரும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். எமது சமயத்தின் அடிப்படையைப் பார்ப்பதற்கு கடந்த காலம் எமக்கு உதவியாக அமையும். எந்தவொரு சமயமும் வெறுப்புச் சமயம் அல்ல. அது வெறுப்புச் சமயமாக இருக்கவும் முடியாது. அது நிச்சயமாக இரக்கமானதாகவே இருக்க வேண்டும்.

மோசஸுக்கு அங்கீகாரம் வழங்கிய, கிறிஸ்துவுக்கு அங்கீகாரம் வழங்கிய, நபிகள் நாயகத்துக்கு அங்கீகாரம் வழங்கிய சமயம் வெறுப்புச் சமயம் என்ற அர்த்தத்தைக் கொள்ளாது. இது அன்பை அடிப்படையாகக் கொண்டதொரு சமயமாகும். இஸ்லாமும் முஹம்மது நபியும் அதனையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றனர்.

எனவே நாம் எந்தவொரு சமயத்தையும் வெறுப்புச் சமயமாக மாற்றக் கூடாது.எனினும் அதன் அடிப்படையைப் பாருங்கள். நாம் எவ்வாறு ஒன்றாக வாழ்வது? நாம் எவ்வாறு பிற சமையத்தையும் பிறரையும் பார்ப்பது?

ஒவ்வொரு சமயமும் தனது சமயத்தைப் பற்றி அனைவருக்கும் போதிக்க வேண்டும். ஆஸ்திகனுக்கும் நாஸ்திகனுக்கும். நாஸ்திகனுக்குப் போதிப்பதால் அவர்கள் எந்தவொரு சமயத்தினதும் எதிரிகள் ஆகிவிட மாட்டார்கள்.

சமயங்களும் பாரிய பிணக்குகளுக்கு முகம் கொடுத்துச் செல்கின்றன. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எதிர்காலம் என்றால் என்ன என்பது தொடர்பில் இஸ்லாத்திலும் பாரிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

ஏனைய சமயங்களிலும் இந்நிலைமை காணப்படுகிறது. நீங்கள் கத்தோலிக்க தேவாலயங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே அருட் தந்தையின் போதனைகள் கத்தோலிக்க தேவாலயத்திலுள்ள பழமைவாத உறுப்பினர்களால் பெரிதும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இங்கிலாந்திலுள்ள தேவாலயங்களில் தற்போது ஆண் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதா அதனை எவ்வாறு நடத்துவது போன்ற விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

அனைத்து சமயங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. அது இந்து சமயமாக இருந்தாலும் சரி பௌத்த சமயமாக இருந்தாலும் சரி.அவை என்ன என்பது பற்றியே நாம் கலந்துரையாடி வருகின்றோம். எனவே நாம் அனைவரும் அதற்கு முகம் கொடுத்துள்ளோம். எனினும் நாம் எமது அடிப்படை கொள்கையிலிருந்து விலகக்கூடாது. எனவே அது வெறுப்புக்குறிய சமயம் ஆகாது. அது அன்பு செலுத்த வேண்டிய சமயம் ஆகும்.

சமயத்தின் ஆகக்கூடிய நோக்கம் எங்கே முடிவடையும் என்பதை எவ்வாறு கண்டறிவது? எனவே, இஸ்லாம், பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த நம் அனைவரும் எமது சமயத்தின் அடிப்படைகளை தேடும் கொள்கைகளில் குறியாக இருக்க வேண்டும். சமயம் வர்த்தகமயப்படுத்தப்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம். ஆம்! யுத்தத்தங்கள் உருவாகவும் சமயம் காரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக சமயம் தனக்குத்தானே ஏற்றுக் கொள்வதுடன் நவீனத்துக்கு வழிகாட்ட வேண்டும். இஸ்லாமானது நபிகள் பிறந்த அரேபியாவுக்கே மீண்டும் செல்ல வேண்டும் என கூறுபவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலம் பக்தாதை தலைநகரமாகக் கொண்டிருந்தது. அது வானியல், மருத்துவம் என எம்மீது ஏற்படுத்தியுள்ள செல்வாக்கைப் பாருங்கள். ஸ்பெயினில் உள்ள ஐபீரியன் குடாநாட்டிலுள்ள முஸ்லிம் இராச்சியங்களைப் பாருங்கள். அவையே இன்று ஐரோப்பாவாக வளர்ச்சியடைந்துள்ளன. நாம் அவற்றைப் பற்றி பேசுகின்றோம். உஸ்மானிய சாம்ராச்சியத்தைச் சேர்ந்த சுலைமான் நபியைப் பாருங்கள்.

எமது பிராந்தியத்தில் கூட அக்பார் பேரரசர் பிராந்தியங்களை ஒன்றிணைக்க முயற்சி செய்தார். அவர், இரண்டு சமுத்திரங்களின் சங்கமம் பற்றி பேசிய தனது பேரனின் கருத்தியலைப் பின்தொடர்ந்தார். அதனையே நாம் இப்போது இந்து-பசுபிக் என்றழைக்கின்றோம்.எனினும் அவர் அதைப்பற்றிக் கூறவில்லை. இளவரசர் கூறிய இரண்டு சமுத்திரங்களின் சங்கமம் என்பது அக்காலப்பகுதிக்குரிய இந்து மற்றும் இஸ்லாம் சமயங்களின் சங்கமத்தையே குறிக்கின்றது. எனினும் நாளடைவில் அவர் கூறியது புவிசார் அரசியல் அடிப்படையில் மாற்றப்பட்டதுடன் அதுவே மோதலுக்கும் காரணமாக அமைந்தது. அதுவே சாராம்சம் என்பதாகும். நீங்கள் நவீனத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்லப்போகின்றீர்களா? சமயங்கள் அதனை செய்ய வேண்டும். அதில் மாற்றம் செய்வதற்கு எதுவும் இல்லை. சமயத்தில் கூறப்பட்டுள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபியாவில் ஆரம்பமானாலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிலேயே உள்ளனர்.இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் மட்டுமன்றி சஹாராவின் தெற்குப் பகுதியிலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் இருக்கின்றனர். அடுத்ததாக கிழக்கே அமெரிக்காவிலும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். எனினும் தற்போது அவர்களிடையே வேறுபாடுகள் மட்டும் மோதல்கள் இடம்பெற்று வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது.

இந்திய உபகண்டத்தில் வாழும் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தற்போது மேலைத்தேய நாகரீகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பிரித்தானிய பிரதமராக இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரும் மேயராக முஸ்லிம் ஒருவருமே உள்ளனர். அவர்கள் மேற்கத்தேய கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றனரே தவிர இந்து மற்றும் இஸ்லாத்தை வளர்த்தெடுத்த கலாசாரத்தை பிரதிபலிக்கவில்லை.அது போன்ற விடயங்களையே நாம் இன்று கையாள்வதுடன் நவீனம் என்றால் என்ன? நவீன நிலை என்பது என்ன? நாம் எங்கே செல்கின்றோம் என்பவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே நவீனமயமாதல் என்பது முக்கியம். இலங்கையில் முஸ்லிங்களுக்கிடையே நவீன சிந்தனையை ஏற்படுத்தும் நிலையங்களை உருவாக்க வேண்டுமென்றே நான் கூறுவேன். அதற்கு மிகச் சிறந்த இடம் தென்கிழக்கே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஆகும். இன்று திருமதி அஸ்ரப்ஆவரது சாதனைக்காக கௌரவிக்கப்பட்டார். பெண் என்ற வகையில் அது அவருக்கு உரித்தானதாகும். இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தமைக்காக மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது நவீன சிந்தனைகளைக் கொண்ட நவீன பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். அப்போது அரசாங்கத்தின் ஆதரவும் அதற்கு கிடைக்கும். எனினும் இதனை நீங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த நினைத்தால் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திற்கூடாகவும் நீங்கள் இதே விளைவை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நவீனம் எனும் சாரம்சத்தையே நாம் ஏற்றுக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும். இங்கே கூட முஸ்லிம்கள் மாற்றங்களுக்கு முகம் கொடுத்திருப்பதையும் அது பற்றி கலந்துரையாடுவதையும் என்னால் பார்க்க முடிந்த்து.

அந்த வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பிரதான விடயமாக உள்ளது. அது மிகவும் நாகரீகமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அது முஸ்லிம் சமூகத்தினருடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் நான் அதில் தலையிட விரும்பவில்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்காதீர்கள் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அன்றொருநாள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துக்கு எதிராக சிறுவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைக் கண்டேன்.அது முறையானதல்ல. அது சிறுவர் பராமரிப்பை மீறும் வன்முறையாகும். வளர்ந்தவர்கள் அதனைச் செய்வது வேறு விடயம். ஆனால் கண்டிப்பாக சிறுவர்கள் அல்லர். அது முஸ்லிம்கள் பற்றிய மறைமுகமான மதிப்பீட்டைக் கொடுக்கும். எனவே அவர்களை அனுமதிக்காதீர்கள். அது மட்டுமே எனக்கு கூறவேண்டியுள்ளது.

தற்போது நீங்கள் உங்கள் 100வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளீர்கள். நாமும் 75வது ஆண்டை பூர்த்திசெய்யவுள்ளோம். எமது அதிகப்படியான நேரம் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதிலேயே கழிந்துள்ளது. எனினும் தற்போது இது நல்லிணக்கத்துக்கான நேரமாகும்.

எனவே தான் நாம் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளோம். அதாவது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நல்லிணக்கத்துக்குப் பங்களிக்கப் போகின்றார்கள் என்பது பற்றி நாம் ஆராய்ந்தோம். முதற்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். இந்தக் கலந்துரையாடல் மூலமாக நாம் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

மனோ கணேசன் என்னை ஏன் உற்றுப் பார்க்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. மலையகத் தமிழர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். அவர்கள் தாமதித்து வந்தாலும் அவர்களையும் சமூகத்துடன் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

எமது சமூகத்தில் காலம் தாமதித்து பல இனங்களும் சமயங்களும் ஒன்றிணைக்கப்பட்டாலும் அவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்கவில்லை. எனவே அவர்களும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக முஸ்லிம் இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எனக்கு கலந்துரையாட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் திகன கலவரம் , 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படுவதுடன் அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் பேச வேண்டும்.

கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினையிலும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளையே இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள முஸ்லிம்களும் மன்னார் முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் , சிங்களவர்கள் போன்று இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், சமூக பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர வேண்டும். இது நல்லிணக்கம் தொடர்பான மூன்றாம் கட்ட நடவடிக்கையாக அமையும்.

அதேபோன்று சிங்களவர்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அதிலும் பல குழுக்கள் உள்ளன. சிலர் சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதுபோன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே எனக்கு சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, ஏனைய முஸ்லிம் குழுக்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள்ள பிரச்சினைகளை எமது மூன்றாம் கட்ட சந்திப்பின்போது எமக்கு அறியத்தருமாறு நான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையைக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சினை இருப்பதன் காரணமாகவே அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் நாம் அனைவரையும் ஒன்றாக இணைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்ப்போம். அப்போது 75வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழும் நிலை ஏற்படும்.

அடுத்த 25 வருடங்களில் வரலாற்றுக்கான நிறுவனமொன்றை ஸ்தாபிப்போம். அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிஆராய்வார்கள். எனவே நாம் பொது இடங்களில் இருந்து கொண்டு பழையதைப் பற்றி கூச்சலிடத் தேவையில்லை. மேலும் புதிய பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக அரச மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான ஏனைய நிறுவனங்களும் உருவாக்கப்படும். ஒரு தேசமாக நாம் உறுதியாக இருப்போம்.சமூக நீதி நிலவட்டும் .

இனங்களுக்கிடையேயான ஒற்றுமை நிலவட்டும். எமக்குள் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் புதிய பொருளாதாரத்தை நாம் கொண்டிருப்போம். என்னை இந்த நிகழ்விற்கு அழைத்தமைக்கு நன்றி.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜ. எம் றிஸ்வி கருத்து தெரிவிக்கையில்….
எமது நாடான இலங்கையானது பல்லினங்கள், பல சமயங்களைக் கொண்ட ஒரு நாடாகும். நாட்டின் முன்னேற்றமும், அபிவிருத்தியும், எமது அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான இணக்கமான உறவிலேயே தங்கியுள்ளது. எமது நாடு பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான ஆரோக்கியமான உறவுகள் மூலம் வளம் பெற்றுள்ளதை வரலாறு சான்று பகர்கின்றது.

பிரிவினைவாத மோதல்களைக் குறைக்கும் வகையில் செயல்பட்ட தூரதரிசனம் மிக்கவர்களிடம் காணப்பட்ட அன்பு, அரவணைப்பு, பாசம் மற்றும் மரியாதை என்ற பண்புகளே வெற்றிகரமான தேசங்களின் அடிக்கற்களாக இருந்துள்ளன.

சாதி, இன, மத பேதமின்றி ஒவ்வொருவருக்குமிடையில் உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது இந்நாட்டின் ஒவ்வொரு தேசப்பற்றுள்ள குடிமகனினதும் கடமையாகும்.

சகவாழ்வு, அனைவருக்கும் கல்வி, தேசிய பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பிலும் ஜம்இய்யாதுல் உலமா பங்களிப்புக்களை செய்து வருகிறது.

கடந்த தசாப்தங்களில் அனைத்து இனங்களுக்கும் மத்தியில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் அதீத முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்விடயமானது மறைந்த வரலாற்று ஆசிரியரான கலாநிதி லோர்ணா தேவராஜா எழுதிய “The Muslims of Sri Lanka – One Thousand Years of Ethnic Harmony” என்ற நூலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமய உரிமைகள் தொடர்பாக வரலாற்றிலேயே முதலாவதாக எழுதப்பட்ட யாப்பாக கருதப்படுவது எமது நபி (ஸல்) அவர்களினால் புனித மதீனா நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட மதீனா சாசனமாகும். இதுவே அரசுடனும், ஏனையே சமய தலைவர்களுடனும் இணைந்து சமய நெறியை நெறிப்படுத்துவது. இதுவே, நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை, சகவாழ்வு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதன் முதன்மையான முக்கியத்துவத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் உணர்த்தியது.

எம்மைச் சூழ உள்ள சமகால சவால்களுக்கு மத்தியில், சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பான முயற்சிகளுக்கான தேவைகள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அதன்படி, எமது நாட்டின் அர்ப்பணம் மிக்க தலைவர்களோடு தோளோடு தோள் நின்று உழைப்பது மிகவும் முன்னுரிமை மிக்கதாகும்.

மனிதவர்க்கத்தின் வெற்றியும் , சுபீட்சமும் நற்பண்புகளை பலப்படுத்தல், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் வெகுவாக தங்கியுள்ளது.

இஸ்லாம் கல்வியை ஊக்கப்படுத்துவதோடு, எமது தயவின் கீழ் இருப்போருக்கு கற்பதற்கான ஏற்பாட்டை ப் பொறுப்புடையதாகவும் ஆக்குகின்றது.

“அனைவருக்கும் கல்வி” என்ற கருப்பொருளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது வறிய மாணவர்களுக்கான கல்வி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதாவது ஓர் ஆத்மாவை காப்பாற்றுவது முழு மனித சமுதாயத்தையும் காப்பாற்றுவதற்கு சமனானதாகும் என்ற தெய்வீகச் செய்தி குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் பல சமூக, சமய நிறுவனங்கள், அரசியல் இயக்கங்கள் ஆகியன தீவிரப்போக்கு, தீவிரவாதம் மற்றும் இன்னோரன்ன வன்முறையான செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தன.
தனிப்பட்டவர்கள் சமயம், சமூக அநீதி, பொருளாதார கஷ்டங்கள்,
இனம் மற்றும் ஏனையவற்றை காரணங்காட்டி அங்கீகரிக்க முடியாத நடத்தைகளுக்கு நியாயம் கற்பித்துள்ளனர்.

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்
Posted in உலக செய்திகள்

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

உக்கிரேனில் ரசியா இராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று வீட்டின் மீது வீழ்ந்து வெடித்தது .

இதன் பொழுது அந்த வீட்டில் வசித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட, நால்வர் பலியாகினர் .

இவ்வேளை அங்கிருந்த நாய் மட்டும் தப்பித்து கொண்டது .

எயமானர்கள் வீட்டுடன் இடிந்து இறந்து போன செயலை கண்ணுற்று நாயானது ,மிகவும் சோகத்தில் உறைந்துள்ளது .

அந்த இடிந்த வீட்டை விட்டு அகலாது ,அதே இடத்தில இருந்து கண்ணீர் விடும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வளர்த்தவர்கள் பிரியத்தில் திளைத்த நாயானது ,அவர்கள் இறந்த துயரை கண்ணுற்று ,சோகத்தில் உறைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .

மிருகங்கள் மனிதர்கள் மீது காண்பிக்கும் பாசம் என்பது, பெற்ற பிள்ளைகள் போல் உள்ளது .

ஆனால் மனிதர்கள் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்ட வண்ணம் உள்ளனர் .


விலங்குகள் மீதும் மனிதர்களை போல பாசம் காட்டினால் ,யாவும் ஓர் தாய் பிள்ளைகள் போல ஒன்றாக வாழ்ந்திட முடியும் .

ஆடு ,மாடு நாய்,கோழி பூனை போன்றன மனிதர்களுடன் ஒன்றாகி போனவர்களாக செல்ல பிராணிகளாக உள்ளன .


அவற்றையே மனிதன் உட்க்கொண்ட வண்ணம் பயணிக்கிறான் .

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்

கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே

நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே

இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022