Posted in இலங்கை செய்திகள்

டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் தேசிய நிகழ்ச்சி

பைஷல் இஸ்மாயில் –

டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்த்தின் விஷேட அறிவுருத்தல்களுக்கமைவாக கிழக்கு மாகாணம் முழுவதும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக, கிழக்கு மாகாண சபை வளாகத்தில் (18) கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா தலைமையில்

இச்சிரமாதானப் பணிகள் இடம்பெற்றது. இதில் முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உள்ளிட்ட

முதலமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் இதில் ஈடுபட்டனர்.

இதன்போது முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

டெங்கு நோய்த் தொற்றற்ற ஒரு நாடாக எமது நாடு திகழ்வேண்டும் என்ற ஜனாதிபதின் சிநத்தனைக்கமைவாக, கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணம் முழுவதும் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு

வருகின்றன. டெங்கு நுளம்பின் உருவாக்கத்தையும், அதன் பெருக்கத்தையும் இல்லாது செய்வதாக இருந்தால் நாம் இருக்கின்ற இடங்களை நாளாந்தம் துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.

கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட டெங்கு நுளம்புப் பரவல் வீதம் குறைவாக இருக்கின்றது. இதை 100 வீதம் இல்லாமல் செய்வதே எமது ஆளுநரினதும்,

எங்களினதும் நோக்காக இருக்கின்றது. அதற்காக சுகாதாரத்துறை பாரிய பங்களிப்புக்களையும், விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.

உயிர்கொல்லி நோயாக இருக்கின்ற டெங்கு நோய் பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளை

இல்லாமல் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இதை பெற்றிகொள்ள முடியும் என்றார்.

    Posted in இலங்கை செய்திகள்

    டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

    டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

    கல்முனை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

    ஜனவரி மாதம் தொடக்கம் இது வரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்கானப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கொரோனா தொற்று தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை

    முன்னெடுப்பதற்காக சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் வேகமாக பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    டெங்கு நுளம்பு பரவுவதற்கு வசதியாக வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

    என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ் மாவட்டத்தில் வீடுகளில் நுளம்பு பெருக்கம்

      யாழ் மாவட்டத்தில் வீடுகளில் நுளம்பு பெருக்கம்

      யாழ் மாவட்டத்தில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை

      மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் S.மோகன குமார் தெரிவித்துள்ளார்.

      யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க

      வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் கொரோனா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன்

      சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் கேட்டுகொண்டார்.

      உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை

      பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பரிசோதனையின்

      போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

      தற்பொழுது கொரோனா நோய் தொற்று அபாயம் தொடர்பில் நாம் அனைவரும் செயற்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றி லிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையினர்

      மற்றும் ஏனைய துறையினர் தொடர்ச்சியாக முயற்சித்து வரும் நிலையில் தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக

      டெங்கு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் எமது பிரதேசத்தில் கூடுதலாக காணப்படுகின்றது.

      கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே எனவே மக்கள் கொரோனா மற்றும் டெங்கு

      நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.

          டெங்கு சிக்குன்குனியா நோய்
          Posted in இலங்கை செய்திகள்

          டெங்கு சிக்குன்குனியா நோய்

          டெங்கு சிக்குன்குனியா நோய்

          டெங்கு சிக்குன்குனியா நோய் ,பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய

          நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

          விசேட ஆய்வுகளின் போது பாடசாலை வளாகத்தில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலையின் அதிபருக்கு எதிராக

          சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அந்த வழிகாட்டல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பு

          பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுவதற்கு, முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017

          ஆகிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிய வழிகாட்டல் பத்திரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

          அதன்படி, அனைத்து பாடசாலை வளாகங்களையும் நும்புகள் பெருகாதவாறு பராமரிக்க, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத

          வகையில் உகந்த உள் செயற்திட்டமொன்றை உருவாக்கி செயல்படுத்துவதற்கு இதன்மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

          பாடசாலைகளின் அதிபர்கள்

          இது தொடர்பாக, அனைத்து அரச மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், பிரிவெனாக்களின் பரிவேனாதிபதிகள், தேசிய

          கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் மாகாணத்தில் உள்ள ஏனைய கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

          அதன்படி, பாடசாலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போது, வளாகத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள்

          பதிவாகினால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
          Posted in இலங்கை செய்திகள்

          பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்

          பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்

          பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம் ,நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

          இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

          இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

          நேற்று (04) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான புதிய பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

          தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர்

          இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

          சமீப காலமாக ​​ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

          இவ்வகை நுளம்புகளே சிக்குன்குனியாவுக்கும் காரணமாகின்றன. இந்த இரண்டு நோய்களிலும் அதிக ஆபத்து உள்ளது. தற்போது இன்ஃப்ளூயன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

          இது வயதான சிலருக்கு கடுமையான நிலைமைகளுக்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.

          இதேவேளை, புதிய நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பான தற்போதைய பிரசாரம் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கினார்.

          வைரஸ் சுவாச நோய்

          உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.

          நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.

          ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.

          வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்
          Posted in இலங்கை செய்திகள்

          வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்

          வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்

          வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய் குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

          அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

          அதன்படி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

          டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்குன்கனியா ஏற்பட்ட பிறகு மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் என்றும் வைத்திய நிபுணர் கூறினார்.

          அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்குன்கன்யாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்த நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

          இன்றைய காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா நோய் நிலை அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

          22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு
          Posted in இலங்கை செய்திகள்

          22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு

          22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு

          22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு ,22 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.

          சுற்றுப்புற சூழல் காரணமாக பெருகிவரும் நுளம்பு கொசுக்களின் ஊடாக இந்த நோய் தொற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த நுளம்புகளினால் காவிச் செல்லப்படும் கொடிய கிருமி ஒன்றே காய்ச்சலை ஏற்படுத்தி ,அது டெங்கு நோயாக மாற்றமடைந்து மரணமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 22627 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த நோய் தாக்கம் என்பது சுற்றுப்புற சூழல் காரணமாகவே ,அதிகமாக இடம்பெற்று வருவதாகவும், நீர் நிலையிலிருந்து எழுந்து பறக்கும் நுழம்புகளினால், இந்த நோய் அதிகமாக பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          வீட்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும்படி சுகாதாரப் பிரிவு அறிவித்து வருகின்ற பொழுதும், மக்கள் அதனை செவிமடுக்காது இருப்பதினாலேயே ,இந்த நோய் தொற்றுக்கொள்ள வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          மேலும் உயிர்பலிகளை தடுக்கவும் ,இந்த நோயின் தாக்குதலில் இருந்து எம்மை தற்காத்து கொள்ளவும் ,மக்கள் விழிப்பாக செயல்படும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

          மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு
          Posted in இலங்கை செய்திகள்

          மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

          மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

          மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு நோய் பரவல் தொற்று அதிகமாக காணப்படுவதால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

          சுற்றுப்புற சூழல் காரணமாகவே இந்த டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது.

          நாங்கள் வாழ்கின்ற வீடுகள் சுற்றுப்புறங்கள் அசுத்தமாக காணப்படுவதாலும் நேரடிகள் தேங்கி இருப்பதால் அங்கு

          நுளம்புகள் உற்பத்தியாகி அதிலிருந்து பரவுகின்ற ஒரு புதிய வகை கிருமியின் ஊடாக இந்த டெங்கு நோய் உருவாக்கம் பெறுகிறது.

          ஆகவேதான் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு தற்பொழுது மக்களிடம் வேண்டிக் கொள்கிறது.

          பல்வேறுபட்ட விழிப்புணர்வு கருத்தரங்கள் நடைபெற்ற பொழுதும் இந்த டெங்கு நோயை அளிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது மக்கள் மத்தியில் காணப்படவில்லை.

          காய்ச்சலாக உருவெடுத்து இப்ப இந்த மலேரியாக மாற்றம் பெற்று இந்த மக்கள் இறந்து வருவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் ,தற்போது டெங்கு நோய தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

          இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த தவறினால் மக்கள் அதிக அளவில் பலியாக குடும்ப அச்சம் விடுக்கப்பட்டுள்ளது.

          எனவே வீடுகளில் உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து இந்த டெங்கு நோயின் கொடிய உயிர் பணியில் இருந்து மக்களை தப்பித்துக் கொள்ளுங்கள் என ஆரம்பித்து விடுக்கப்படுகிறது.

          பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்

          இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்

          இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய் அவதிப்படும் மக்கள் தடுக்க தடுமாறும் சுகாதார அமைச்சு .

          இலங்கையில் தற்பொழுது டெங்கு நோயானது இந்த வருடத்தின் இதுவரை யான காலப்பகுதியில் அதிகரித்துள்ளதாக, இலங்கையினுடைய சுகாதார அமைச்சு இப்படி அறிவித்திருக்கிறது.

          இந்த டெங்கு நோயினால் இந்த வருடத்தின் இதுவரை யான காலப்பகுதியில். ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக .இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கிறது.

          சுற்றுப்புற சூழல் மாசடைதல் .நீர்நிலைகள் ,என்பனவற்றில் நுளம்புகள் தொல்லை அதிகரித்தல் புற சூழல் காரணமாக, இந்த டெங்கு நோய் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுறது .

          அதனால் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்தால், இவ்வாறான டெங்கு நோய் அபாயம் தொற்றாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

          நீர் நிலைகளில் தேங்கி நிற்கும் நுழம்புகள் ,அந்த விஷக்கிருமிகளை மனிதர்கள் மீது குத்தி பரப்பி ,அதன் ஊடாக இந்த நோயைப் பரப்புவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

          மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பொழுதும் ,இந்த டெங்கு நோய் பரவலை தடுக்க முடியாது, தற்பொழுது இலங்கை சுகாதார அமைச்சு திணறி வருகிறது .

          ஆண்டுதோறும் இந்த டெங்கு காய்ச்சல் மலேரியாவாக மாற்றம் பெற்று பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

          அதிகரிக்கும் டெங்கு நோய்
          Posted in இலங்கை செய்திகள்

          அதிகரிக்கும் டெங்கு நோய்

          அதிகரிக்கும் டெங்கு நோய்

          அதிகரிக்கும் டெங்கு நோய்,தமிழர் பகுதியில் சமீப காலங்களாக டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது இவ்வாறு வவுனியாவில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          சுற்றுப்புறச் சூழல்களை அசுத்தமாக வைத்திருப்பதால் இந்த டெங்கு நோய் அதிகமாக மக்களை தாக்கி வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

          மழை நீர்கள் தங்கி அதன் ஊடாக நுளம்பு அதிகரித்து காணப்படுவதால் மக்களை இந்த டெங்கு நோய் தாக்குவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

          2024 ஆம் ஆண்டு வரை என காலப்பகுதியில் 113 க்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

          வீடியோ

          இந்த நோய் தாக்குதலில் தொற்றுக்கு உள்ளாகி சிலர் பலியாகி உள்ள தகவல்களும் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

          எனவே மக்களே இந்த கொடிய நோயிலிருந்து உங்கள் உயிர்களை தப்ப வைத்துக்கொள்ளளுங்கள் , உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது செய்தி கூட கடத்தப்படும் செய்தி ஆகிறது.

          கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்
          Posted in இலங்கை செய்திகள்

          கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

          கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

          கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ் ,இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

          நுலம்புகள் தாக்குதலை மேற்கொள்வதால் அதிலிருந்து புதிய வகையான ஜிகா வைரஸ் என பரவியுள்ளது .

          இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை இலகுவாக சென்று தாக்குதல் நடத்துவதாகவும் ,

          அதனால் கர்ப்பிணிகள் பலமாக பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த நுளம்புகளினால் ஏற்படுகின்ற இந்த வைரஸ் தாக்குதலைஅடுத்து அதிலிருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் என்கின்ற நடவடிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

          இந்த நோய் அறிகுறி காணப்படுவதற்கான அறிகுறிகளாக தலைவலி தோள் வெடிப்பு ,காய்ச்சல், மூட்டு வலி ,உள்ளிட்டவர்களுக்கானப்படுகின்றன .

          இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவை ஜிகா வைரஸ்னுடைய நோயில் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

          மீண்டும் அதனை இங்கு குறிப்பிடுகின்றோம், இந்த நோயின் அறிகுறியாக உங்களுக்கு காணப்படுவது தலைவலி ,தோல் வெடிப்பு , காய்ச்சல் மூட்டு வலி என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

          எனவே இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியரை சோதனை நடத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வேண்டுதல் எடுத்துள்ளது.

          இந்த நோயானது தற்போது தமிழகத்திலும் பரவி வருகின்ற நிலையிலும் இலங்கையிலும் இவ்வாறான எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          சுற்றுப்புறங்களை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாகவே இந்த நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகிறது .

          அதனால் அந்த நுளம்புகளில் இருந்து நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன .

          சுத்தம் சுகம் தரும் என்பதற்கு இணங்க நாம் எமது வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் .

          சுற்று புறங்களை நாங்கள் சுத்தமாக வைத்திருப்பதால் நாங்கள் நமக்கு நோய்களை உருவாக்கி கொள்கின்ற நடவடிக்கை காணப்படுவதாகவே சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

          எனவே மக்களை எமது வீடுகளை சுத்தமாக நாங்கள் வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான புதிய உயிர்கொல்லி நோய்களிலிருந்து, தப்பித்துக் கொள்ள முடியும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இங்கே மீளவும் சுட்டி காட்ட தக்கது ..

          அதிகரிக்கும் டெங்கு அபாயம்
          Posted in இலங்கை செய்திகள்

          அதிகரிக்கும் டெங்கு அபாயம்

          அதிகரிக்கும் டெங்கு அபாயம்

          அதிகரிக்கும் டெங்கு அபாயம் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

          பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என அதன் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொ க்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

          அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

          டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

          “டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 90,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

          அதேபோல், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

          நோயாளிகளின் எண்ணிக்கை

          மே மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. வரும் காலங்களில் பருவமழையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 93,874 இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.

          இங்கிருந்து கொசுக்கள் பெருகக்கூடிய 28,310 பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

          மேலும், கொசுப்புழுக்கள் உள்ள 4,890 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவித்தார்

          இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

          டெங்கொழிக்க எங்களின் பங்கு
          Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

          டெங்கொழிக்க எங்களின் பங்கு

          டெங்கொழிக்க எங்களின் பங்கு

          சிரட்டை பேணி கோம்பைகளை
          நீர் தேங்காமல் வை!
          குறட்டை விட்டுத் தூங்க வீட்டைக்
          கூட்டிப் பெருக்கனும் உன் கை!

          பொலித்தீன் பைகள் யோக்கற் கப்பும்
          சூழலுக்கு கேடு!
          பொழுது சாய்ந்து தூங்கும்போதும்
          நுளம்பு வலை போடு!

          அரட்டையடிச்சு அலட்சியமா யிருந்தா
          அழிச்சிடும் நுளம்பு!
          விரட்டியடிக்க செயற்படனு மென்று
          வீட்டார்க்கு விளம்பு!

          கிடைத்தற்கரிய உயரிய பிறப்பு
          மானிடப் பிறப்பு!
          இடத்தை தூய்மைப் படுத்தாவிட்டால்
          கிடைப்பதே இறப்பு!

          தேங்கும் நீர் தங்கி நின்றால்
          டெங்கு ஊதும் சங்கு!
          எங்கும் சுத்தம் பேணும் நலனே
          எங்களின் பங்கு❗

          -பிறேமா(எழில்)-

          வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு
          Posted in இலங்கை செய்திகள்

          வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

          வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

          வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு

          தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

          டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

          வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

          இவ்விடயம் தொடர்பில் உடன் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

          இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ்

          மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

          வீடியோ

          நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
          Posted in இலங்கை செய்திகள்

          டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

          டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

          மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

          வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

          தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

          நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
          Posted in இலங்கை செய்திகள்

          நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை

          நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை

          நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்கள் இந்நோய்க்கு வேகமாக பலியாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

          20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

          இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலைகளை மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

          மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர்.

          நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை

          எவ்வாறாயினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், நாட்டின் 67 வலயங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

          தற்போதைய மழை காலத்துடன் இந்த அபாய வலயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

          இதேவேளை, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டட நிர்மாணப் பகுதிகள்,

          என்பனவற்றை உடனடியாகச்
          சுத்தப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் அபாயகரமானதாக மாறக் கூடும் என்று அவர் சுட்டிக்கட்டினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு

            மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு

            மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு

            ஒழிப்பு செயற்றிட்டம் நேற்றைய தினம் (04) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

            பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைஇ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி

            பணிமனை மற்றும் பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.

            வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச

            செயலக உத்தியோகத்தர்கள்இ டெங்கு ஒழிப்பு செயலணிஇ உத்தியோகத்தர்கள்இ பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

            இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும்

            வைத்தியசாலை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

            இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில்

            உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்

              மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்

              மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது.

              இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது. கடந்த

              செப்டம்பர் 26 ஆந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

              இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நோயாளர்களும்,

              வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 டெங்கு நோயாளர்களும்,

              கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருநோயாளருமாக மொத்தம் 16 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்;டுள்ளனர்.

              இருப்பினும் வாகரை, செங்கலடி, ஏறாவூர், வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான்

              ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

              மேலும் கடந்த 09 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2,248 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

              இதேவேளை எதிர்வரும் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்

              நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை

              துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

              முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

              கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04 ஆம் , 05ஆம் , 06ஆம்

              மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

              இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு

              உட்படுத்தப்படவுள்ளதாகவும் , இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன்

              பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.

              இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole)

              ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

              சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய

              இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும்

              அறிவிக்கப்ட்டுள்ளது.
              கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக

              முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.