Posted in மருத்துவம்

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா

முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா? இந்த ஹேர் பேக் போடுங்க…
ஹேர் பேக்
முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல்

பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…

புரோட்டீன் ரிச் ஹேர் பேக்

தேவையானவை

வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.

பலன்கள்

முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.

    Posted in மருத்துவம்

    கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்

    முடி வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவு வகை

    பெண்கள் நீண்ட கூந்தல் பராமரிப்புக் காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள் ஷாம்புக்கள் கிடைக்கின்றன,அதனால் கூந்தல் வளரவும் வேகம் .

    அவை வெளிப்புற பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.

    கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்

    உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம்.

    இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எந்தெந்த சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும்,

    ஆரோக்கியத்துக்கும் அவசியம், எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

    • முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய
    • ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில்
    • உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம்
    • உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பயோட்டின்
    • என்கிற விட்டமினும் உள்ளது.
    • பீன்ஸில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பீன்ஸ்,
    • சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல்
    கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
    • அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.
    • ஓட்ஸில் விட்டமின் பி-யும், தாது உப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு
    • நிறமளிக்கக்கூடியது. ஓட்ஸில் உள்ள சத்துக்கள் முடி வேகமாகவும், கருமையான நிறத்திலும் வளரத்
    • தேவையானவை ஆகும்.
    • கேரட்டில் விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை
    • பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு.
    • கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.
    • பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    • இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.
    • தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.
    எனக்கொரு பதில் சொல்லாயோ
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    எனக்கொரு பதில் சொல்லாயோ

    எனக்கொரு பதில் சொல்லாயோ

    கொஞ்சி பேசும் மொழி தனையே
    மனம் கெஞ்சி கேட்க துடிக்குதடி
    வஞ்சி உந்தன் பேரழகை – உன்
    வளையல் சத்தம் காட்டுதடி

    அஞ்சி அஞ்சி பேசி விடும்
    அச்ச நாணம் பிடிக்குதடி
    கொள்ளை பிரியம் வைத்திடவே
    கொடி கூந்தல் அழைக்குதடி

    சிந்தி வழியும் புன்னகையில்
    சிறைச்சாலை நொறுங்குதடி
    வெட்டி பார்க்கும் விழி அசைவில்
    வெடி குண்டு வெடிக்குதடி

    சாலையில் ஓடும் வண்டிகளை – உன்
    சலங்கை சத்தம் ஒதுக்குதடி
    உலக போரை தணித்திடவே
    உன் உள்ள அமைதி துடிக்குதடி

    இத்தனை பேறு கொண்டவளே
    இதயம் நுழைந்த மர்மம் என்ன
    எத்தனை நாள் எனை தொடர்வாய்
    எனக்கொரு பதில் சொல்லாயோ ..?

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 19-10-2024
    0044 7536707793

    ஏன் துரோகம் செய்தாய்
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    ஏன் துரோகம் செய்தாய்

    ஏன் துரோகம் செய்தாய்

    உன்னை தினம் நினைக்கையில்
    உள்ளம் வாடுதே
    உன்னோடு பேச நாளும்
    உள்ளம் தேடுதே

    கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றை
    கனவு தாங்குதே
    காலடியின் மண்ணெடுத்து
    தலை தூங்குதே

    கண் விழிக்கும் போதினில்
    கால் சலங்கை அழைக்குதே
    கண் இமையின் மேலே
    கரும் கூந்தல் தழுவுதே

    உன்னை நினைக்கும் போதெல்லாம்
    உள்ளம் வாடுதே
    ஊன் உறக்கம் தொலைத்து
    உன்னால் சாகுதே

    காண மறந்து போனதென்ன
    காதல் இறந்த மாயம் என்ன
    என்ன நினைத்து என்னை மறந்தாய்
    எதற்காக என்னை இழிந்தாய் …?

    ஆக்கம்
    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்

    முட்டை கண்ணு பார்வை
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    முட்டை கண்ணு பார்வை

    முட்டை கண்ணு பார்வை

    முட்டை கண்னு பார்வையாலே
    முத்தம் தந்து போறவளே
    மூக் குத்தி வெட்குதடி
    முத்தம் இங்கே சொக்குதடி

    கட்டியணைக்கும் போதிலே
    கரும் கூந்தல் விலகுதடி
    வெட்கம் இல்லா தழுவ
    வென் இதழ் தீண்டுதடி

    கன்னம் இரண்டை வருடவே – தங்க
    கழுத்து தூண்டுதடி
    வண்ண நிலா வாடவே
    வாலிபம் அழைக்குதடி

    சொல்லி சொல்லி ஆறவே
    சொந்தம் உன்னை தேடுதே
    பந்தம் உன்னில் படரவே
    பாயும் இங்கே காயுதே

    நிலவே என்ன தயக்கம்
    நீயும் வந்திடு
    நீளம் நாங்கள் கடக்கவே
    நிகழ்வுகள் செய்திடு !

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 31-05-2024

    படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

    facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க

    நாங்கள் மலர்ந்துவிட்டோம்
    Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

    நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

    நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

    மலர்களே❗
    சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
    நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
    கார்த்திகை மாத
    காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
    வான்மழை பெய்யும்
    கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.

    மங்கையரே❗
    எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
    வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
    வந்து குடிகொள்ளப் போவதில்லை.
    தேசம்மீட்க உயிர்துறந்த
    தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.

    சாமிகளே❗
    கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
    பக்தர்கள் பூத்தட்டுகளில்
    காத்திருக்கப் போவதில்லை.
    உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
    உடல்களைத் தழுவப்போகிறோம்.

    தேனீக்களே❗
    உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
    மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
    மாவீரரின் விடுதலை
    வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.

    மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
    இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
    ஆசைக்காக மலரவில்லை.
    புனிதர் நாளின்
    பூசைக்காக மலர்ந்துள்ளோம்.

    காய்ந்து விழும்
    காலத்துக்காக மலரவில்லை.
    கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗

    -பிறேமா(எழில்)-

    உன்னால் துடிக்கும் இதயம்
    Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் துடிக்கும் இதயம்

    உன்னால் துடிக்கும் இதயம்

    எழுதாத காகிதத்தில்
    எழுதி வைத்த நினைவுகளை
    எடுத்து படிக்கையில
    ஏங்கி மனம் துடிக்குதே

    புதைத்து வைத்த ஆசைகளை
    புரட்டி எடுத்து பார்க்கையில
    கண்ணீர் மட்டும் பரிசாச்சே
    கல்லாகி மனம் போச்சே

    தோகை மயில் ஆடையில-உன்
    தொங்கும் கூந்தல் தெரியுமடி
    பாடி குயில் போகையில – உன்
    பாட்டு ஒலிக்குமடி

    எனெக்கெனவே நீ ஆக்கி
    எடுத்து வந்த உணவுகளோ
    இன்று நினைத்தாலும் ருசிக்குதடி
    இன்றும் மனம் தேடுதடி

    கை பேசி இல்லா காலத்தில – உன்
    கை வரைந்த கடிதங்களை
    தூசி தட்டி படித்தே
    தூரிகையால் வரைகிறேன்

    தொலையாமல் நெஞ்சுக்குள்
    தொல்லை தருகிறாய்
    தொடர்பு இன்றி பிரிந்தாலும் – தினமுனை
    தொட்டு தொட்டே பேசுகிறேன் .

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 30-04-2023

    Posted in மருத்துவம்

    குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு

    குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு

    சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும்.

    குளிக்காவிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
    குளியல்


    தினமும் குளிப்பவர்களுக்கு, குளியல் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே தெரியும். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் குளியலை உடலுக்கு தேவையான முக்கியமான

    விஷயமாக குறிப்பிடுகிறது. எந்த நீரில், எப்படி, எந்த நேரத்தில் குளிக்கவேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குகிறது.

    கோடை காலம் உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் காலமாகும். அதனால் உடல் எதிர்கொள்ளும் அசவுகரியங்களை ஓரளவு கட்டுப்படுத்த குளியல் உதவுகிறது. அதோடு

    உடலின் புறப்பகுதியில் உள்ள அழுக்கை போக்கவும் துணைபுரிகிறது.

    எப்போது குளிக்க வேண்டும்?

    காலையில் குளிப்பது மிக நல்லது. காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வியர்வை வெளிப்பட்ட உடலோடு குளிக்கவேண்டும். காலை உணவுக்கு

    முன்பாக குளித்திடுவது சரியானது. அதிக பசியோடு இருக்கும்போதும், சாப்பிட்ட உடனேயும் குளிப்பது உடலுக்கு ஏற்றதல்ல. காலையில் தலைக்கு குளிப்பதும், இரவில் தலைக்கு கீழ் கழுவுவதும் உஷ்ணத்தை வெளியேற்றும் வழிமுறையாகும்.

    தினமும் உடலைக் கழுவும் நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்த சாறு சேருங்கள். கோடை காலத்தில் அது உடலுக்கு உற்சாகத்தை தரும். சரும நோய்களும்

    அகலும். வெட்டி வேர், சந்தனம் மற்றும் துளசி, வேப்பிலை போன்றவைகளை கலந்த நீரிலும் குளிக்கலாம்.

    எப்படி குளிக்கவேண்டும்?

    குளிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு

    தலைக்கு குளிக்கும்போது முதலில் தலையில்தான் தண்ணீரை ஊற்றவேண்டும். சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம்

    செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும். குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, பிடித்தமான எண்ணெய்யை உடலில்

    தேய்த்துவிட்டு குளிக்கவேண்டும். அதனால், கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.

    சோப் பயன்படுத்தலாமா?

    சோப் பயன்பாடு சருமத்தை வறட்சி்க்குள்ளாக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதனால் தினமும் ஒரு தடவை மட்டும் சோப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்றாக

    பயறு தூள், கடலை மாவு போன்றவைகளை உபயோகிக்கலாம். குளிக்கும்போது பயன்படுத்த ஆயுர்வேத சூரணம் உள்ளது. அதனை பயன்படுத்தலாம். அது எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றது.

    தலையில் ஷாம்புவுக்கு பதில் செம்பருத்தி தாழி பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கோடை உஷ்ணத்தால் முடியில் ஏற்படும் பல்வேறு

    பாதிப்புகளை அது போக்கும். நெல்லிக்காயை உலரவைத்து தயாரித்த தூள், பயறு தூள் போன்றவைகளாலும் கூந்தலை கழுவலாம். உடல் அதிகமாக சூடானாலும் முடி

    உதிர்தலும், பொடுகு பிரச்சினையும் தோன்றும். கூந்தலை மேற்கண்ட முறையில் பராமரித்தால் அந்த தொல்லைகள் அகலும்.

    வெயிலில் செல்லும்போது முகம் கறுத்துப்போகாமல் இருக்க மல்லியை பயன்படுத்தலாம். ஒரு பிடி மல்லியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து

    அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். கோடைகாலத்தில்
    பெண்கள் கூந்தல் மற்றும் சரும அழகில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      முற்று பெற்ற காதல் ..!

      முற்று பெற்ற காதல் ..!

      உன்னை தினம் பாட
      உள்ளம் தினம் ஏங்கும்
      உன்னை கண்டு விட்டால் – விழி
      ஊரில் ஏறி ஆடும்

      கன்னம் இரண்டில் நுள்ள
      காதல் விரல்கள் துடிக்கும்
      கன்னம் இரண்டும் சிவக்க – உன்
      கைகள் அடிக்க பிடிக்கும்

      மெல்ல வந்து பேச
      மெல்ல உதடு துடிக்கும்
      மெலிந்து மேனி துடிக்க
      மெல்ல தானே பிடிக்கும்

      சின்ன உதடு ஆடி
      சிரித்து பேச இரசிக்கும்
      சீலை கூந்தல் ஆடி
      சீண்ட உடலும் சிலிர்க்கும்

      வட்டம் போட்டு ஆடும்
      வண்டு விழி பிடிக்கும்
      வளைந்து நெளிந்து குழையும்
      வலது கையும் பிடிக்கும்

      பக்கம் வந்து அமர்ந்தால் -ஆசை
      பற்றி தீயாய் எரியும்
      படித்து பார்க்க முனைந்தால்
      பக்கம் பலது திறக்கும்

      முற்று பெற்ற மோகம்
      முடிந்து போனால் வெட்கும்
      முள்ளாய் முளைத்த கீறல்
      முறைத்து பார்த்து பேசும்

      திட்டம் போட்டு நடித்த
      திட்ட வரைபு பிடித்தது
      தீண்டி பார்த்த காதல்
      தின்ன தின்ன இனித்தது …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 21-02-2022

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னால் தவிக்கிறேன் ..!

        உன்னால் தவிக்கிறேன் ..!

        கறுப்பு தார் வீதியிலே
        கட்டழகு நடக்குது
        கன்னிப்பூ அது ஒன்றை
        கால் இரண்டு துரத்துது

        பூ வாசம் அது வீச
        புது மனது வாடுது
        பூகம்ப நில அதிர்வாய்
        பூ மனது அதிருது

        இடை காட்டும் உன்னழகு
        இதயத்தை வருடுது
        இளம் நெஞ்சே உனைதழுவ
        இரு விரல்கள் துடிக்குது

        கால் பிடித்த நடை பிடித்தே
        கால் இரண்டு நோகுது
        கட்டழகு உன் கூந்தல்
        கண் இமையை மறைக்குது

        உனை பார்த்த நாள் முதலாய்
        உறங்க விழி மறுக்குது
        உன் உதட்டு மொழி கேட்க
        உள் மனது துடிக்குது

        என் மனதை தொலைத்து விட்டேன்
        ஏ நெஞ்சே பேசயா
        என் ஏக்கம் தனித்துவிட
        என் அருகில் கூடாயா !

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 06-02-2022

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          ஏன் பேச மறந்தாய் ..?

          ஏன் பேச மறந்தாய் ..?

          உன் கொலீசு காதுக்குள்ளே
          ஊளையிட்டு மகிழுதடி
          உன் கொண்டை மல்லிகை
          ஊர் வாசம் வீசுதடி

          தேர் ஓடும் வீதியிலே
          தேவதை நீ நடக்கையிலே
          தெறித்தோடும் காளை எல்லாம் -உன்
          தோகை கூந்தல் தொடருமடி

          பாலை வன புல்வெளியில்
          பா வினங்கள் மேய்ந்திடுமோ
          பாவை உந்தன் பூவிதழில்
          படரா வண்டு உறங்கிடுமோ

          நீர் தேடும் வேர்கள் எல்லாம்
          நிழல் தர மறந்திடுமோ
          நிலவே உன் பேரழகை
          நிழல் தழுவ அஞ்சிடுமோ

          தொலை தூர நடை பிடித்து
          தொலையாம வீதி வந்து
          கண் முன்னே நிற்பவரே
          கதை பேசா நிற்பதென்ன

          காளை உந்தன் நெஞ்சுக்குள்ளே
          காதலாகி நான் இருக்க
          என் அருகில் வந்து நின்று
          ஏன் பேச நீ மறந்தாய் ..?

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 25-01-2022

            Posted in மருத்துவம்

            கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

            கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

            கொரோனாவுக்கு தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் சிலருக்கு பாதிப்பு உண்டாகலாம். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

            கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்
            சருமம், கூந்தலில் ஏற்படும் பாதிப்புகள்


            நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களில் சிலர் உடல் சோர்வு, தசை வலி, மூளை சோர்வு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இவை தவிர

            கூந்தல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த பாதிப்புகள் 6 முதல் 9 மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

            கொப்புளம்: கொரோனா தொற்றின்போது தடிப்பு, கொப்புளம் போன்றவை ஏற்படுவது பொதுவானது. சிலருக்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் பாதிப்பு உண்டாகலாம்.

            கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

            முடி உதிர்தல்: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 2 முதல் 3 மாதங்களுக்கு பிறகு முடி உதிர்தல் பிரச்சினையை எதிர்கொள்வதாக பலர் புகார் அளித்திருக்கிறார்கள். கூந்தலை அலசும் போது,

            தலை சீவும்போது, குளிக்கும்போது அடர்த்தியாக முடி உதிர்வதை கண்கூடாக காண நேரிடும். இந்த வகையான முடி உதிர்தல் ‘டெலோஜென் எபுவியம்’ என்று அழைக்கப்படுகிறது.

            கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒன்றரை மாதங்களில் இந்த பிரச்சினை தொடங்கலாம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரும்போது இந்த பாதிப்பு நிகழும்.

            பொதுவாக பிரசவம், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ‘டெலோஜென் எபுவியம்’ பிரச்சினையை எதிர்கொள்வார்கள். அந்த வரிசையில் கொரோனாவும்

            கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

            இணைந்திருக்கிறது. கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனை தவிர்க்க இயலாதது.

            கொரோனாவும் தொற்றும், கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். பிற வகையான டெலோஜன் எபுவியத்துடன் கொரோனா

            பாதிப்பை ஒப்பிடும்போது இந்த வகையான முடி உதிர்தல் தீவிரமாக இருக்கும். சிலருக்கு வழுக்கை தலை பிரச்சினை ஏற்படக்கூடும்.

            புண்கள்: ‘கோவிட் பீட்’ எனப்படும் இது பொதுவாக கைகளிலும், கால்களிலும் காணப்படும். இந்த பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் விரல்கள் நீலம் அல்லது சிவப்பு கலந்த நீல நிறத்தில்

            காணப்படும். பெரும்பாலும் வெளி நாடுகளில் இத்தகைய அறிகுறிகள் தென்படுகிறது. இந்தியாவில் இத்தகைய அறிகுறிகள் இல்லை.

            வறட்சி: தைராய்டு அல்லது நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஏற்கனவே சில சரும பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். சரும வறட்சியும் எட்டிப்பார்க்கும். நோய்த்தாக்குதலின் போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளும் சரும வறட்சிக்கு வித்திடலாம்.

            சரும அரிப்பு: கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான சமயத்தில் இந்த பிரச்சினையை அனுபவிக்கக்கூடும். நமைச்சல், அரிப்பு போன்றவை உடலின் எந்த பகுதியிலும், எந்த நேரத்திலும்

            தோன்றும். சில நேரங்களில் சிவப்பு நிறத்தில் தடிப்பு, சரும ஒவ்வாமை பிரச்சினைகள் உண்டாகும். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் இத்தகைய பாதிப்புகள் நீடிக்கலாம்.

            இத்தகைய சருமம், முடி சார்ந்த பிரச்சினைகளை தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறை

            பராமரிப்பதும் பாதிப்பின் வீரியத்தை தடுக்க உதவும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவது பலன் தரும்.

            நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் பிரச்சினைகளை களையலாம்.

              Posted in மருத்துவம்

              முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

              முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

              முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

              சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.


              முடி கருகருவென அடர்த்தியாக நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு

              . சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும். இதை கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன்

              பொறாமைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் பாப் கட்டிங் செய்தாலோ அல்லது முடியின் அளவை குறைத்துக் கொண்டாலோ அது பற்றி ஊரே பேசும்.

              அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உண்டு.

              இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்

              பெண்களின் தலைமுடியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

              முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

              சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.

              உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு

              முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

              காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள்.

              இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.

              இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி

              வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை,

              பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.

              கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.

              தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

              முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

              பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும்.

              உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

              கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும்.

              வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த

              பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

                Posted in மருத்துவம்

                முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க

                முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க

                முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.


                மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை

                கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல்

                ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

                முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:

                உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

                அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற

                வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.

                கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும்

                உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.

                முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்

                கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை.

                முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.

                பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.

                முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க

                கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.

                ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

                பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.

                முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான

                கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.

                  Posted in மருத்துவம்

                  பசியை போக்க இதை சாப்பிடுங்க

                  பசியை போக்க இதை சாப்பிடுங்க

                  தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம்.

                  இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


                  தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம்.

                  இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக

                  கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை

                  எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம். வயிற்றுக்கு நன்மை பயக்கும். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம்

                  சேர்க்கும். மோரின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

                  எடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு

                  பசியை போக்க இதை சாப்பிடுங்க

                  அறவே இல்லை. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம்,

                  பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.

                  நீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும்.

                  வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர்

                  தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.

                  வலுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28

                  சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

                  ரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில்

                  கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.

                  மலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து

                  மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்

                    Posted in மருத்துவம்

                    பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு

                    பொடுகு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பூண்டு

                    முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது.

                    முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15

                    நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம். பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ்

                    எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த

                    எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை

                    அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.

                    பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,

                    1. பூண்டில் ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
                    2. பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது
                    3. பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
                    4. முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
                    5. தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.

                    கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய்

                    எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

                    தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ்

                    செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

                    பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன்

                    அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

                    பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு

                    முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        என்னை திருமணம் செய்

                        என்னை திருமணம் செய்

                        சன்னி வண்டியில
                        சாலை போகையில
                        முன்னே வந்தவளே
                        முன் விழி பறித்தவளே

                        நெஞ்சை பறி கொடுத்து
                        நெடு நாளா நான் தவிக்க
                        கஞ்ச தனம் படைத்து
                        காண போறவளே

                        கூந்தல் நிலம் கூட்ட
                        குயில் குரல் பாட்டிசைக்க
                        சலங்கை மணி ஒலிக்க
                        சாலை எழுந்து வர

                        வீதி போறவளே
                        விளையாடல் செய்பவளே
                        என்னை பறி கொடுத்தேன்
                        ஏன் என்று கேட்காயோ ..?

                        உன்னை தேடுதடி
                        உயிர் ஒன்று வாடுதடி
                        காதல் செய்து விட்டேன்
                        கல்யாணம் பண்ணிக்கடி ….!

                        வன்னி மைந்தன் (ஜெகன் )
                        ஆக்கம் 06-06-2020

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                        என்னை-திருமணம்-செய்
                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            இது தான் வாழ்வு …!

                            இது தான் வாழ்வு …!

                            தோளுக்கு மாலையா
                            தோட்ட பூவே வாறியா ..?
                            வாழை நாரில
                            வந்து சிக்கிறியா …?

                            கல்யாண பந்தலிலே
                            காட்சிக்கு நிக்கிறியா ..?
                            கூந்தல் மேவியே
                            குலவி ஆடுறியா ..?

                            அழகாய் பூத்தாய்
                            ஆயூளை பறித்தான் …
                            உயிரு போகுமுன்னே
                            உலவுறாய் அழகாய் தான் …

                            சிரித்து மலர்ந்து
                            சிறகு உடைந்து …
                            வீழ்ந்து கருகி
                            வீழ்ந்தாய் நொந்து ….

                            வாசல் பூவே
                            வாழ்வு இதுவாச்சு …
                            அழகாய் பூத்தென்ன
                            ஆயூள் முடிந்தாச்சு …!

                            வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                            ஆக்கம் -11/03/2019

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            உன்னை நான் மறப்பேனா …?

                            உன்னை நான் மறப்பேனா …?

                            உடைத்து பாயும் அருவி போல
                            உன் நினைவு ஓடுதடி…..
                            உருளும் அலை வேகம் போல
                            உள்ளம் ஆடுதடி …

                            வெடித்து பறக்கும் கணை போல
                            வேகம் கூடுதடி – என்னை
                            வேக வைத்து பார்த்தவளே
                            வேண்டும் வரம் தந்திடடி ….

                            பூவை சூடி நீயும் நடக்க
                            பூமி குளிருதடி – அந்த
                            வானம் கூட சிரிக்க
                            வாழ்த்து கொட்டுதடி ….

                            கலைந்த கூந்தல்
                            கண்ணில் விழவே காதல் பிறக்குதடி .
                            கண்ணே உன்னை தீண்டத்தானே
                            காமம் அழைக்குதடி …

                            நெஞ்சுக்குள்ளே உந்தன் நினைவு
                            நெருப்பாய் கொதிக்குதடி ….
                            நெஞ்சே உன்னை சுமந்தேன்
                            நெருங்கி வந்திடடி …!

                            வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                            ஆக்கம் -26/02/2019

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            ஏன் இவள் இப்படியானாள் …?

                            ஏன் இவள் இப்படியானாள் …?

                            கொட்டுகிற அருவியில
                            கொடி கூந்தல் விரிப்பவளே ….
                            கொடுக்கை அவிழ்க்க பாக்ககுதடி
                            கோர அலை தாக்குதடி ….

                            முடிச்சவிழ்ந்து போகுமென்று
                            மூசி அலை வீசுதடி …
                            அடி ஆற்று பக்கம் யாரும் வந்தா
                            அம்மணமே என் செய்வாய் …?

                            ஒத்தையில உன்னை வைச்சு
                            ஓடி விளையாடுதடி …
                            கட்டெறும்பா குத்தி தானே – தேகம்
                            காயம் வைத்து போகுதடி ….

                            வைச்ச கண்ணு வாங்காம
                            உச்சி வானம் பாக்குதடி ..
                            மஞ்சள் வெயில் வீசுறவன்
                            மடி தடவி போறாண்டி ….

                            ஒத்திருந்தது பேசிடவே
                            ஒர கண்ணனால் பார்ப்பவளே ..
                            கன்னி ராசி கொண்டவனோ
                            கள்ள சூரியன் திண்ணுறானே ….!

                            வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                            ஆக்கம் -24/10/2018