விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி ,தெல்தெனியாவில் உள்ள பம்பரகல கோயில் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி

காவல்துறையின் கூற்றுப்படி, நான்கு இளைஞர்கள் குளிப்பதற்காக நீர்த்தேக்கத்திற்குள் நுழைந்தபோது, ​​

அவர்களில் இருவர் முதலில் நீரில் மூழ்கினர். பின்னர் மீட்புக் குழுவினரால் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மற்றொரு இளைஞர் காணாமல் போன நிலையில், அக்குழுவில் இருந்த ஒருவர் காயமின்றி மீட்கப்பட்டார்.

காணாமல் போன இளைஞரின் உடலை

காணாமல் போன இளைஞரின் உடலை காவல்துறை பின்னர் மீட்டதால், மொத்த பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

உயிரிழந்த அனைவரும் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கண்டி, வெரலகமவைச் சேர்ந்தவர்கள்.

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி
Posted in உலக செய்திகள்

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி ,மத்திய லிஸ்பனில் நடந்த கார் விபத்தில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆறு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க தூதரகத்திற்கு வெகு தொலைவில்

அமெரிக்க தூதரகத்திற்கு வெகு தொலைவில் இல்லாத அவெனிடா டாஸ் ஃபோர்காஸ் அர்மடாஸில் அதிகாலை 3:40 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் ஐந்து இருக்கைகள் கொண்ட வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்ததாகவும், பின்னால் நான்கு பேர் அமர்ந்திருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து படங்கள் BMW காரின் கருகிய ஷெல்லையும், தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை அடையும் பணியில் ஈடுபட்டபோது அதன் கூரை அகற்றப்பட்டதையும் காட்டியது.

போர்த்துகீசிய ஊடகங்களின் ஆரம்ப அறிக்கைகள், 19 வயது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு “கவனச்சிதறல்” அடைந்திருக்கலாம் என்றும், குறைந்தது ஒரு பயணியாவது சீட் பெல்ட் அணியவில்லை என்றும் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
ஆறு பேரும் அங்கோலாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.

இந்த சோகம் லிஸ்பனின் அங்கோலா சமூகம் முழுவதும் எதிரொலித்தது, மேலும் போர்ச்சுகலுக்கான நாட்டின் தூதரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையைத் தூண்டியது.

தூதர் மரியா டி ஜீசஸ் ஃபெரீரா ஒரு இரங்கல் கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களை “பிரகாசமான எதிர்காலம் கொண்ட இளைஞர்கள்” என்று விவரித்தார்.

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ​​நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் மேலும் இருவருடன் போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது அந்த அனர்த்தம் இடம்பெற்றதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் நேற்று

இதற்கிடையில், அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹங்கம கடற்கரையில் நேற்று (20) நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நாவுல பொலிஸாரும் அஹங்கம பொலிஸாரும் காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்.

உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நால்வரில் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி ,பனாமா கழி முகத்திற்கு அருகில் கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் பனாமாவின் மத்திய பகுதியைச் சேர்ந்த தனசிறி இதுவர மற்றும் சூரஜ் ஆகிய 18 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பனாமா கழிமுகப் பகுதிக்கு அருகே நீந்திக் கொண்டிருந்த போது, ​​ அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பனாமா பொலிஸார் தெரிவித்துள்ளது.

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று இரவு பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.

மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை

புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் எஸ்.வியாழேந்திரன் நேற்று கைது செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் ,கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

24 மற்றும் 34 வயதுடைய இரு இளைஞர்கள், கஹட்டகஸ்திகிலிய, இஹல கன்ஹிடிகம ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல மற்றும் புஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு ‘இஹல கன்ஹிடிகம’ ஏரியில் குளிப்பதற்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்கள் இருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை ,இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, ​​நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள் ,தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளியில் இரண்டு சடலங்கள்

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த

முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌிறேயி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மர்ம மரணங்கள்

இலங்கை திரு நாட்டில் இடம்பெறு இவ்விதமான மர்ம மரணங்கள் தொடர்பில் மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

ஆளும் அரசும் அதன் காவல்துறையினாலும் ஏன் இந்த மர்ம மனித படுகொலைகளை தடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

வரலாற்று சாதனையாக பல ஆண்டுகளாக இவ்விதமான மர்ம படுகொலைகள் ,இடம் பெற்ற வண்னம் உள்ளது .

இவை ஆளும் அரசுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது ,மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.

இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசு

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை காவல்துறையால் இவ்விதமான கைதுகள் தொடராக பொழுத்தகும் ,பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் இவ்வாறான வாலிபர்கள் செயல்கள் குறைவடையவில்லை என்பது குறிப்பிட தக்கது .

கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல், உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், உறவினர்களிடம் மரணம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தார்.

உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (13) இரவு அலங்கார பணிகளில் ஈடுப்பட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மூவர் இன்றைய தினம்(14) அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இனந்தெரியாதோர் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் என பி​ரதேசமக்கள் தெரிவித்துள்ள ​நிலையில் பொலிஸார் மேலதிக விசார​ணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்

விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்

மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி​ விபத்துக்குள்ளாகினர்.

விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்

இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது

கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்

கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய வரலாற்றிலேயே பெருந்தொகை கஞ்சாவை கடத்தலை முறியடித்து பெரும் குற்றச் செயல் ஒன்றைத் தடுத்து நிறுத்தியவர்கள் பொன்னாலை இளைஞர்கள் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார தெரிவித்தார்.

இதற்காக பொன்னாலை இளைஞர்களையும் பொதுமக்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பாராட்டியுள்ளார்.

பொன்னாலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார, இலங்கையில் கஞ்சா, ஹெரோயின் என்பன பாரியளவில் வியாபாரமாக நடைபெறுகின்றது. இதை பொலிஸாரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே இதை முறியடிக்க முடியும்.

வட்டுக்கோட்டை பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் கஞ்சா கடத்தலை முறியடித்து நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய குற்றச்செயலைக் கட்டுப்படுத்த உதவியவர்கள் பொன்னாலை இளைஞர்கள். இதற்காக பொன்னாலை மக்களையும் இளைஞர்களையும் வட்டுக்கோட்டை பொறுப்பதிகாரி பாராட்டியிருக்கின்றார்.

இதேபோன்று, ஏனைய பிரதேச மக்களும் இளைஞர்களும் செயற்படுவார்களாயின் இயன்றவரை போதைப்பொருள் கடத்தலை முறியடித்து குற்றச்செயல்களைக் குறைக்க முடியும் – எனத் தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது

வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது

அத்துடன், வேப்பங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளையும் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

12 இளைஞர்கள் கைது

12 இளைஞர்கள் கைது

அவிசாவளை – குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதியின் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது

பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது

பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது

நேற்று அதிகாலையில் டிக்டொக் மூலம் இளைஞர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக ஊடக தளமான TikTok இல் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை எவ்வாறு ஓட்டுவது என்பதைக் காட்டும் வீடியோவையும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

வீதியில் செல்லும் வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை

அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி, இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ,

கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது
செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மதுபோதையில் நண்பனை கிணற்றுக்குள் தள்ளிய இளைஞர்கள்

மதுபோதையில் நண்பனை கிணற்றுக்குள் தள்ளிய இளைஞர்கள்

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வேளை, நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி விழுத்தப்பட்டுள்ளார்.

வாக்குமூலங்களின் அடிப்படையில், பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை திங்கட்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளதுடன்
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

11 இளைஞர்கள் கடத்தல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

11 இளைஞர்கள் கடத்தல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம்

தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருநாகொட உள்ளிட்ட
14 கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.