அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு, அரசியல் செல்வாக்கு மற்றும் தலைமைத்துவமாக மாறுவதை உறுதி செய்வதே இலங்கையின் அடுத்த பெரும் சவால் என்று ஐ.நா. பெண்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் உள்ளூராட்சியில் பெண்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் தாக்கம் மற்றும் படிப்பினைகளை ஆராயும் ‘எண்களுக்கு அப்பால்’ என்ற

தலைப்பிலான புதிய அறிக்கை வெளியிடப்பட்டதன் மூலம் இந்த வலியுறுத்தல் வெளிப்பட்டது.

ஐ.நா. பெண்கள் அமைப்பு இலங்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உத்திசார் கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாட்டில் பெண்களின்

அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக அரசாங்கப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள்,

பெண் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகள், அபிவிருத்திப் பங்காளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா. பெண்கள் அமைப்பு இலங்கை அலுவலகத் தலைவர் ரமாயா சல்கடோ, அரசியல் நிறுவனங்களில் பெண்களின்

பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது முக்கியமானது என்றாலும், அத்தகைய பிரதிநிதித்துவம் அர்த்தமுள்ள பங்கேற்பு, செல்வாக்கு மற்றும்

தலைமைத்துவமாக மாறுவதை உறுதி செய்வதே அடுத்த சவால் என்று கூறினார்.

இட ஒதுக்கீட்டின் மூலம் உள்ளூராட்சியில் நுழைந்த பெண்களின் அனுபவங்கள், எது பலனளித்தது, பெண்களின் அரசியல் பங்கேற்பைத்

தொடர்ந்து கட்டுப்படுத்தும் சவால்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் சூழலை உருவாக்கத் தேவையான சீர்திருத்தங்கள் குறித்த மதிப்புமிக்கப் பார்வைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் தாக்கத்தை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஏறக்குறைய இரண்டு சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 23 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், கட்சிகளின் அதிகாரப் பகிர்வு, தேர்தல் பிரச்சார நிதி மற்றும் அரசியல் வலையமைப்புகளுக்கான வரையறுக்கப்பட்ட

அணுகல், சமமற்ற தலைமைத்துவ வாய்ப்புகள், துன்புறுத்தல் மற்றும் வன்முறை, மற்றும் தலைமை தாங்கும் பெண்களின் திறனைக்

கேள்விக்குட்படுத்தும் தொடர்ச்சியான சமூக மனப்பான்மைகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தடைகளை பெண்கள் அரசியலில் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.

அதிகரித்த எண்ணிக்கைப் பிரதிநிதித்துவம், அதிக அரசியல் செல்வாக்கையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் ஏற்படுத்தியுள்ளதா என்பதையும் இந்த

அறிக்கை ஆராய்கிறது. மேலும், பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தத் தேவையான கட்டமைப்பு மாற்றங்களையும் இது எடுத்துக்காட்டுகிறது.

மாகாண மற்றும் தேசிய அளவிலான எதிர்கால சீர்திருத்தங்களுக்கான இட ஒதுக்கீட்டு அனுபவத்தின் தாக்கங்கள், அத்துடன் அரசியல் நியமனங்கள்,

தேர்தல் பிரச்சார நிதி, தலைமைத்துவ முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான சவால்கள் ஆகியவற்றில் இந்த உரையாடலின் போது நடைபெற்ற கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.

சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள், இளம் பெண்கள், கிராமப்புறப் பெண்கள், மோதல்களால்

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நிறுவப்பட்ட அரசியல் வலையமைப்புகளுக்கு வெளியே உள்ளவர்கள் ஆகியோரை அரசியல்

பங்கேற்பு முயற்சிகள் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

இலங்கையில் பெண்களின் அரசியல் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலக் கொள்கை ஈடுபாடு,

பரிந்துரை, திட்டமிடல் மற்றும் கூட்டாண்மைகளுக்கு இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் பங்களிக்கும் என்று ஐ.நா. பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை ரணில்
Posted in இலங்கை செய்திகள்

நான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை ரணில்

நான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை ரணில்

நான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை ரணில் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து

அஸ்கிரி பீடங்களின் பிரதான தேரர்களை வணங்கி

மற்றும் அஸ்கிரி பீடங்களின் பிரதான தேரர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றார்.

இந்த விஜயத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை

சந்தித்தார், அதைத் தொடர்ந்து அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வாராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்தார்.

​​நாட்டின் தற்போதைய அரசியல்

இந்தக் கூட்டங்களின் போது, ​​நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகா நாயக்க தேரர்களுடன் விக்ரமசிங்க கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விவாதங்களைத் தொடர்ந்து, அரசியல் விஷயங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ​​விக்ரமசிங்க

அவர்களின் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளித்து, தான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்
Posted in இலங்கை செய்திகள்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார்

தங்கம் அரசியலில் இருந்து விலகினார் என ஊசி கட்சி தலைவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளாராம் .


அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அவர் எவ்வித அரசியலிலும் ஈடுபட மாட்டார் என்கிறார் ஊசி கட்சியின் ஊசி அடி தலைவர் .

பிரபல யூடுப் பெண்களை விபச்சாரிகள் என அர்ச்சுனா அதெரிவித்த நிலையில் ,அதுவே மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நல்மதிப்பை இழக்க செய்ததுடன் ,அவருக்கு எதிராக அதிகளவான பெண்கள் திரும்ப காரணமாக மாறியது .

அதனால் தேர்தலில் மிக பெரும் சரிவு ஏற்பட்டதுடன் அதில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டது .

எனவே தோல்வியை தழுவுவோம் என தெரிந்தும் ,இந்த தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என தெரிந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டு ஓட்டம் பிடித்துள்ளார் தங்கம் .

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .

சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .

நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .

இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

வீடியோ இரண்டு

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.


எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.


நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.

என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் என டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார் ,யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா இப்படி முழங்கியுள்ளார் .

தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய போராட்ட குழுக்களில் டக்ளஸ் தேவானந்தா ஒருவராவார் .

ஆனால் அந்த இலட்சிய பாதையில் தெளிவுற நேர்மையுடன் பயணிக்க முடியாத அவர் எதிரியுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான சாதிகளில்; ஈடுபட்டார் .

ஈழ தமிழர் வரலாற்றில் யார் இந்த டக்ளஸ் தேவானந்தா என்றால் அவருக்கு என ஒரு திறந்தவெளி கறுப்பு பக்கம் உள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக பெரும் சாதனையை இவர் தமிழர்களுக்கு நாட்டுவார் என எதிர் பார்க்க பட்டது.

ஆனால் அது வெற்றிடமாகவே காண படுகிறது .

ஒன்று பட்டு ஒருமித்து பயணித்த தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையில் சதிகளை தூவி பிரித்தாண்டு ,இன்று ஒட்டு மொத்த தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியாத நிலையில் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா மாற்றம் பெற்றார் .

இது தவிர்க்க பட முடியாத ஒரு பக்கத்தின் பாதை என்பது அவரது உளதெளிவு .

ஆனால் அதனை ஈழ தேசிய இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ,புலிகள் இல்லா காட்டுக்குள் எலிகளுக்கு வேட்டை என்பதை போலவே இப்பொழுது இலங்கையில் பல பெருச்சாளிகள் உலவி திரிகின்றனர் .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

வரலாற்றில் கிடைத்த மிக பெரும் வாய்ப்புக்களை டக்ளஸ் தேவானந்தாவும் தவறவிட்டு விட்டார் ,என்பதே அவரை எதிரியாக கருகியவர்கள் நெஞ்சங்களில் ஓரத்தில் இப்படி செய்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் ,அற்று போயுள்ளதை காண முடிகிறது .

வயது மூப்பாகி விட்ட நிலையில் ,ஐந்து ஆண்டுகளுடன் எனது ஆயூள் முடிந்து விடும் என டக்ளஸ் தேவானந்தா நினைத்திருப்பார் போல் உள்ளது .

இது அவரது அரசியல் கட்சியின் சிந்தாந்தம் எனவே அதனை யார் தான் மாற்ற முடியும் ..?,ஐந்து என்ன பத்து வருடங்கள் கூட அரசியலில் பயணியுங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே .

கல்லான மனிதர் என்றாலும் ஒரு மூலையில் ஈரம் உள்ளது என்பதை தொலை காட்சி விவாதத்தில் பஞ்சாயத்து பண்ணிய உங்கள் நிலை கண்டு வியந்தேன் .

ஆதலால் உங்கள் செய்திகளை தவிர்த்து வந்த நான் ஒரு சிறு இடம் ஒதுக்கி பதிவிடுகிறேன் .

உங்களுக்கு நாங்கள் எதிரிகள் ஆனால் தமிழர்கள் இன்று யாரையும் எதிரியாக பார்க்கவில்லை .

ஏன் என்றால் அவர்களுக்கு எதிர்க்கும் பலம் இன்று இல்லை டக்ளஸ் தேவானந்தா அவர்களே புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும்

தொடம்கஸ்லந்த ஸ்ரீ சைலத்தலாராம விகாரையில் தூபியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே பூசல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும், வெவ்வேறு புவியியல் அதிகார வரம்புகளில் வாழும் மக்களின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி பேசி இந்த சர்ச்சைகளை அரசியல்வாதிகளே உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

அதன் மூலம் வாக்குகளைப் பெறவே எதிர்பார்க்கின்றனர் என்றும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு நபர்களிடம் 13 குறித்து சிலரிடம் விருப்பம் என்றும் மற்றும் சிலரிடம் விருப்பமில்லை என்றும் ஜனாதிபதி கனவுகளை கொண்ட இவர்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த அரசியல் தலைவர்கள் சரியான குணாதிசயங்களில் இல்லாமல் அதிகாரத்தை பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கின்றனர் என்றும், தமது சுகபோக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக 220 இலட்சம் மக்களின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ற போக்கில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

மதங்கள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவினால்தான் நாட்டின் ஒருமைப்பாடு, பிரதேச ஒருமைப்பாடு, பலம், இறைமை, எமது தேசியம் எமது வாழ்வியல் பாதுகாக்கப்படும் என்றும், எனவே இன, மத, சாதி முரண்பாடுகள் ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது என்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக வைத்தியர் சாபிக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இனப் பிளவைக் கிளப்பினர் என்றும், இறுதியில்,வைத்தியர் சாபி சரியானவர் என்று நிரூபனமானது என்றும் குறிப்பிட்டார்.

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

எனவே சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து இன,மத,இன மக்களுக்கும் இடையிலான பிணைப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளில் கொண்ட பேராசையால் சிலர் நாட்டை துண்டு துண்டாக பிரித்து வருகின்றனர் என்றும், இது தேசப்பற்று அல்ல என்றும், கடந்த காலங்களில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவரை மக்களே விரட்டியடித்தனர் என்றும் படித்தவர்களையும் அறிவாளிகளையும் இணைத்துக் கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பப் பங்களிப்பதை தான் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் பிரச்சனைகளை பேச பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்றத்தில் ஒரு முட்டாள் கூட்டம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பேசி,பேச்சுக்களில் குறுக்கிட்டு மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான வசந்த அத்துகோரலவின் ஆய்வின் பிரகாரம், இந்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இதனால் அம்மக்கள் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர் என்றும், பயிர் சேதத்தால் 60 ஆயிரம் ஏக்கர் நாசமாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதனால் 68729 கோடி தங்கம், நகைகள் ஆபரணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

என்றும்,இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்
Posted in உலக செய்திகள்

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்

Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் இருந்து நான் ஒதுங்க மாட்டேன் மகிந்த அறிவிப்பு

அரசியலில் இருந்து நான் ஒதுங்க மாட்டேன் மகிந்த அறிவிப்பு

இலங்கையில் தொடர்ந்து அரசியலில் நான் இருப்பேன் என மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் .

இலங்கை மக்களினால் ராஜபாக்ச குடும்பம், துரத்தபட்ட நிலையில் ,மகிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவரது இந்த திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களினால் விரட்டியடிக்க பட்ட நிலையிலும் ,ஆணவத்தின் நிலையில் இருந்து மகிந்த ராஜபக்சவின்
இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.

    திவ்யா சத்யராஜ்
    Posted in சினிமா

    அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்

    அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

    அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
    திவ்யா சத்யராஜ்


    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம்

    செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.

    ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற

    இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும்

    இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

    அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்

    எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

    இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.

      Posted in சினிமா

      அரசியலில் களமிறங்கும் சோனு சூட்

      அரசியலில் களமிறங்கும் சோனு சூட்


      தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகர் சோனு சூட், தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

      அரசியலில் களமிறங்கும் சோனு சூட்
      சோனு சூட்


      தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனு சூட். இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருக்கிறார். சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த

      தொழிலாளர்களை பஸ், ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். வெளிநாட்டில் தவித்த மாணவ, மாணவிகளை விமானத்தில்

      இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.

      அவரது இதுபோன்ற சேவைகளை பாராட்டும் விதமாக தெலுங்கானாவில் சோனுசூட்டுக்கு கோவில் கட்டினர். இந்த நிலையில் தனது சகோதரி மாளவிகா அரசியலில் ஈடுபட இருப்பதாக

      சோனுசூட் அறிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது சகோதரி மாளவிகா

      மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மோகா தொகுதியில் அவர் போட்டியிடுவார்” என்றார்.

      சோனு சூட்

      இதுபோல் சோனுசூட்டும் அரசியலில் ஈடுபட இருக்கிறார். பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அல்லது

      ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

        Posted in Uncategorized

        சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்

        சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்

        நடந்து முடிந்த தமிழக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல் படு தோல்வியை சந்தித்தார்

        ,மக்களின் பெருமித ஆதரவு தனக்கு உள்ளதாகவும் தான் தமிழகத்தின் முதல்வர் என சூளுரைத்தவாறு போட்டியிட்டார்

        அவரது அந்த எதிர் பார்ப்பு பலத்த தோல்வியில் முடிவுற்றது ,இதனை அடுத்து தற்போது சர்வதேச ஊடகங்களினால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ,

        சினிமாவில் திறன் மிக்க கீரோவாக வலம் வரும் அவர் அரசியலில் சீரோ என தெரிவித்து வருவது கமலுக்கு பெரும் அவமானத்தையும் ,துயரையும் ஏற்படுத்தியுள்ளது

        இது போலவே ரஜினிகாந்தும் போட்டியிட முற்பட்டு திடீரென கட்சியை கலைத்து விலகினார்

        ,அதனால் அவர் தனது நடிப்பு தொழிலை முடக்காது தப்பித்து கொண்டார் என்ற வாதம் இபொழுது முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்

          ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்

          ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது

          சிறந்த சேவையைச் செய்வேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

          ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்
          ராகவா லாரன்ஸ் – ரஜினிகாந்த்
          நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

          நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில்

          நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது

          நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில்

          நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

          கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும்,

          நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காக தொடங்கினேன்.

          எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன் அதற்கு எனக்கு அனைவரும்

          உறுதுணையாக இருந்துள்ளனர். கலைஞர் அய்யா, ஸ்டாலின் சார், அன்புமனி ராமதாஸ் சார் போன்றோர் பல இதய அறுவை

          சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

          ராகவா லாரன்ஸ் – ரஜினிகாந்த்

          நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் நான் அரசியலில் நுழையாததற்கு காரணம், எதிர்மறை அரசியலை நான் விரும்பாததால் தான், என் அம்மாவுக்கும் அதே கருத்துதான்.

          ஏனென்றால் நாம் எல்லோரையும் பற்றியும் மோசமாக பேச வேண்டும், மற்றும் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான் அதை செய்யமாட்டேன், அனைவரையும் மதிக்கிறேன். எனவே, யாராவது எதிர்மறை அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள்

          மோசமாகப் பேசவோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தவோ தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன். இந்தியாவில்

          நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு

          அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார்.

          தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால்,

          அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் என்று கூறியிருக்கிறார்..

          Posted in சினிமா

          அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு

          அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு


          தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

          நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு
          நடிகை நமீதா

          தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

          திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

          பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.

          பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன்

          தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

          மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.

              Posted in முக்கிய செய்திகள்

              இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு

              இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு,- இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மிகுந்த பரபரப்பையும் ,பீதியையும் ஏற்படுத்திய வண்ணம் நாட்கள் நகர்கிறது ,என்றுமில்லாதவாறு மகிந்த குடும்பத்தின் நெருக்கமானவர்கள் பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தில் அமர்த்தபட்டுள்ளனர் ,

              அதற்கு மைத்திரி தாராள வழிகளை திறந்து விரித்தார்,இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்க பட்டுளளார் ,அதுபோலவே கடல்படையும் ,இந்த தேர்தலில் தாம் வெற்றி பெறா விட்டால் இராணுவத்தின் இரும்பு கரம் கொண்டு ஆட்சியை கைப்பற்றும் நகர்வில் மகிந்த அண்ட் கோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,

              தேர்தல் ஆணையரின் போக்கும் ,அவ்வாறே காணப்படுகிறது ,பெரும் மேசடிகள் மத்தியில் இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது ,அத்துடன் வாக்கு சிதறல்களை மேற்கொள்ளும் முகமாக ஒருபோதும் இல்லாதவாறு 41 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றனர் ,இதில் மூன்றாவது பெரும் சக் தியாக யார் உள்ளனர் என்பதையும் ,மக்கள் ஏதுவாக உள்ளனர் எனபதை படம் பிடிக்கவும் இந்த தேர்தல் வரலாற்று களமுனையாக வீழ்ந்து கிடக்கிறது ,

              மக்கள் குறிப்பாக தமிழர் வாக்குகள் இந்த வெற்றியை தீர்மானிக்க போகின்றன ,அவர்கள் ஆதரவு யானை கட்சிக்கு உள்ளது ,ஆகவே அதனை தடுக்கும் நோக்குடன் ,வெளிநாட்டு சிங்களவர்கள் இலங்கை அழைக்க படுகின்றனர் ,இந்த வாக்குகளை சரி செய்யவே இந்த உள்ளக விளையாடல்கள் நடக்கின்றன .செயலும் நகர்வும் மகிந்த அண்ட் கோவே ஆட்சியில் அமர்வார்கள் என்பது நிழலாக தெரிகிறது

              இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
              Posted in இலங்கை செய்திகள்

              இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

              இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

              இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

              சிறையில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.

              சமீபத்திய மாதங்களில் 73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் வலுத்து வருகின்றன. சிறை அதிகாரிகள்

              நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அவர் தனது வலது கண்ணின் பார்வையை பெரும்பாலும் இழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

              100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள, கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், கடந்த ஆண்டு ஊழல்

              வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். தனக்கு எதிரான அனைத்து வழக்குகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கான் கூறினார்.

              சிறையில் இருந்தாலும், அவர் பாகிஸ்தான் அரசியலில் ஒரு சக்தியாகவே இருக்கிறார். அவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்

              கடந்த காலங்களில் கொடிய வன்முறை மற்றும் அடக்குமுறைகளுக்கு வழிவகுத்துள்ளன.

              இஸ்லாமாபாத்திலிருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள லக்கி மர்வத் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் பேரணி, இரவு

              முழுவதும் இடைநிறுத்தப்பட்டு, திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் வாக்கில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

              முதலில் கடந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பேரணி, அரசாங்கத்திற்கும் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ)

              கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முட்டுக்கட்டையில் முடிந்தன.

              கான் 2023 ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ரகசியங்களைக் கசியவிடுவது முதல் அரசுப் பரிசுகளை விற்பது வரை

              100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன – இவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறியுள்ளார்.

              பிடிஐ ஆளும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதலமைச்சர் சோஹைல் அஃப்ரிடி, இந்தப் பேரணி வியாழக்கிழமைக்குள்

              இஸ்லாமாபாத்திற்கு மேற்கே சுமார் 80 கி.மீ (50 மைல்) தொலைவில் உள்ள ஒரு நகரத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கிறார்.

              “[அதற்குள்] இந்த இயக்கம் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைந்திருக்கும், ஒவ்வொரு சதுக்கமும் செயல்பாடுகளின்

              மையமாக மாறியிருக்கும்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். மேலும், “அரசியல் செயல்பாட்டில் மக்கள் தீவிரப் பங்கு வகிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

              இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள், தலைநகருக்கான முக்கிய அணுகல் பாதைகளைத் தடுப்பதற்காக சரக்குக் கொள்கலன்களை அடுக்கி வைத்துள்ளனர்.

              தேசிய மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து தங்கள் தலைவர்கள் கானிடம் ஆலோசனை பெறுவதற்காக, அவரை அணுக அனுமதி

              கோரிய கட்சியின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்ததால், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக பிடிஐ கட்சி கூறியது.

              கானுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என்றும் தாங்கள் கோரியிருந்ததாக அக்கட்சி மேலும் கூறியது.

              இதற்கிடையில், பயங்கரவாத எதிர்ப்புப் பிரச்சினைகள் குறித்த முந்தைய வாக்குறுதிகளிலிருந்து கைபர் பக்துன்க்வா அரசாங்கம்

              பின்வாங்கிவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகளை அஃப்ரிடி “சதி செய்வதாகவும்” உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி குற்றம்

              சாட்டியதாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

              ஆகஸ்ட் மாதம், கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனை மற்றும்

              சிகிச்சைக்காக அவர் சிறையிலிருந்து ஒரு அரசு மருத்துவமனைக்குச் சிறிது காலம் மாற்றப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அவரை “மருத்துவ ரீதியாகத் தகுதியானவர்” என்று அறிவித்தனர்.

              2023-ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, நீதிமன்றங்களிடமிருந்து கான் பெற்ற மிக

              முக்கியமான நிவாரணம் இந்தத் தலையீடுதான். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கான் கூறுகிறார்.

              இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களால் அவர் பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற

              உத்தரவை மீறியதற்காக, கானின் குடும்பத்தினரும் பிடிஐ கட்சியும் அதிகாரிகளை விமர்சித்துள்ளனர்.

              செப்டம்பர் 20 அன்று, கானின் சகோதரி அலீமா கானும் கிழக்கு நகரமான லாகூரில் கைது செய்யப்பட்டார்.

              கானும் “சட்டம் ஒழுங்கு நிலைமைகளை உருவாக்க” மக்களைத் திரட்டி வந்ததாகவும், “அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களிடையே

              ஆட்சேபனைக்குரிய கோஷங்களை எழுப்பி வந்ததாகவும்” கைது உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

              முன்னர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கிய கான், 2018 முதல் 2022 வரை நாட்டின் பிரதமராகப் பணியாற்றினார்.

              அவரது சிறைவாசம் ஆதரவாளர்களால் பெரிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியது, அவை அதிகாரிகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன.

              முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பல புகார்களை அளித்துள்ளனர்.

              பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
              Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

              பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

              பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

              பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி வாக்குப்பதிவு நடந்து சில வாரங்களுக்குப் பிறகு பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்

              பெருவின் கடும் போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்

              பெருவின் கடும் போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வாக்குப்பதிவு நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, வலதுசாரி வேட்பாளரான கெய்கோ ஃபுஜிமோரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

              ஜூன் 7 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில், 51 வயதான இவர் 50.135% வாக்காளர் ஆதரவைப் பெற்றார். இடதுசாரி வேட்பாளரான ராபர்டோ

              சான்செஸ் 49.865% வாக்குகளைப் பெற்றார். இது 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசமாகும் என பெருவின் தேர்தல் நீதிமன்றம் சான்றளித்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

              பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ ஃபுஜிமோரியின் மகளான இவர், இந்த தென் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு

              போட்டியிடுவது இது நான்காவது முறையாகும். இம்முறை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

              கொலம்பியாவில் அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லாவின் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நிகழ்ந்த இவரது தேர்தல், லத்தீன் அமெரிக்க அரசியலில் வலதுசாரி நோக்கிய ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.

              பொறுப்புடனும், பணிவுடனும்

              “பொறுப்புடனும், பணிவுடனும், ஆழ்ந்த கடமையுணர்வுடனும்” ஜனாதிபதிப் பதவியை ஏற்பதாக ஃபுஜிமோரி கூறினார்.

              “இந்த மாற்றக் காலத்தின் ஒவ்வொரு நாளும், செவிமடுப்பதற்கும், உரையாடலில் ஈடுபடுவதற்கும், புதிய அரசாங்கத்தின் தொடக்கத்திற்குத் தயாராக இருப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

              இது, தனது குறைவான பதவிக்காலத்தை மறைமுகமாகக் குறிப்பிடுவது போலத் தோன்றியது.

              57 வயதான சான்செஸ், இரண்டாம் கட்டத் தேர்தல் “கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வெளிநாடுகளில்

              உள்ள பெருவியன் வாக்காளர்களிடையே ஃபுஜிமோரிக்கு வலுவான ஆதரவு இருப்பது முறைகேடுகளின் அறிகுறி என்று வாதிட்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

              வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது கட்சி தேர்தல் நீதிமன்றத்தின் பிரகடனத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்து, வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரியது.

              முன்னாள் வெளியுறவு வர்த்தக அமைச்சரான சான்செஸ், பரந்த பொருளாதார சீர்திருத்தங்களை கொள்கைத் திட்டமாகக் கொண்டிருந்த வேளையில்,

              இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய குற்றம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை குறித்த கவலைகளால் ஃபுஜிமோரி பயனடைந்தார்.

              பிரச்சாரம் முழுவதும், அவர் தனது தந்தையின் சர்ச்சைக்குரிய பாரம்பரியத்தை முன்னிறுத்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், குறிப்பாக

              சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ள மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

              அல்பர்டோ ஃபுஜிமோரி, தனது பெருகிவரும் சர்வாதிகார ஆட்சியின் போது மேற்கொண்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் கட்டாய

              கருத்தடைகள் தொடர்பான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

              மேலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க தனியார் முதலீடுகளை ஈர்ப்பதாகவும், பெருவில் குற்றங்களில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்ட

              ஆவணமற்ற குடியேறிகளை உடனடியாக வெளியேற்றுவதாகவும் கெய்கோ உறுதியளித்தார்.

              பெருவில் நிலவிய கடுமையான அரசியல் ஸ்திரமின்மை காலகட்டத்தில், அவர் 2011, 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தேர்தலில் தோல்வியுற்றார்.

              அவர் ஒரு தசாப்தத்தில் அந்த ஆண்டியன் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.

              அவரது பதவியேற்பு விழா ஜூலை 28 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

              மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா
              Posted in இலங்கை செய்திகள்

              மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

              மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

              மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா கூறுகிறார்

              சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர்

              சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, தனது அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்களை நிராகரித்துள்ளார். மிதவாத-வலதுசாரி அரசியல்

              முகாமை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், வளர்ச்சி பெற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதில்

              தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

              தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு அறிக்கையில், இலங்கை ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக மாறுவதைக் காணும் விருப்பத்தின்

              காரணமாகவே இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்ததாக அந்த பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். மேலும், தனது குடும்பத்தில் இதற்கு முன்பு யாரும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

              குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக

              குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகத் தான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தனது அரசியல் பயணம் மிதவாத-வலதுசாரி

              இயக்கத்திற்குள்ளேயே தொடரும் என்றும், எதிர்காலத்தில் ஒரு தலைமைப் பதவியை ஏற்கும் நிலைக்கும் அது விரிவடையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

              தற்போதைய அரசாங்கத்திற்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று கூறி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி சில்வா அதனை விமர்சித்தார். உள்நோக்கிய

              கொள்கைகள் மூலம் நாடு முன்னேற்றம் அடைய முடியாது என்ற கருத்தைக் கொண்ட அவர், இலங்கை உலகப் பொருளாதாரத்திற்குத் திறந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

              சமீபத்திய ஊகங்களுக்குப் பதிலளித்த அவர், தற்போதைய அரசாங்கத்தில் சேருவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று மறுத்ததோடு, சில குழுக்கள்

              பல்வேறு பிரச்சாரங்கள் மூலம் சமகி ஜன பலவேகய கட்சிக்குள் உட்கட்சிப் பிளவுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

              நாட்டின் பொருளாதார செழிப்பை நோக்கமாகக் கொண்டு தற்போதைய நிர்வாகத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதாகவும், அதே

              நேரத்தில் தேவைப்படும் இடங்களில் ஆக்கப்பூர்வமான கொள்கைகளை ஆதரிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

              தேவைப்பட்டால், நாட்டின் நலனுக்காக எந்தவொரு பெரிய பொறுப்பையும் அல்லது சவாலையும் ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி

              சில்வா, “நாட்டிற்கு ஒரு புதிய சகாப்தம் தேவை” என்று கூறி தனது அறிக்கையை முடித்தார்.

              முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்
              Posted in இலங்கை செய்திகள்

              முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

              முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

              முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் ,இலங்கையின் தென்பிராந்தியத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று காலை (02) காலமானார்.

              பிராந்திய அரசியலில் தனது செல்வாக்கு

              பிராந்திய அரசியலில் தனது செல்வாக்குமிக்க பங்கிற்கும், தேசிய ஆட்சிமுறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கும் பெயர் பெற்ற விஜேசேகர, தனது அரசியல் வாழ்வில் பல முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தார்.

              இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்

              இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

              தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு
              Posted in இலங்கை செய்திகள்

              தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

              தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

              தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

              ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி

              ஆளும் அரசினால் முன்னெடுக்க படும் ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி மிக பெரும் அபத்தமானது .

              இந்த ஏக்கிய இராச்சிய திட்டத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் .

              அவ்வாறு அந்த தீர்வு திட்டத்தை எதிர்க்க தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் என்ற விடயத்தை இலங்கை தமிழரசு கட்சிக்கு அழைப்பை விடுத்துள்ளது .

              வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அரசியல் விவாத அரங்கில் கலந்து கொண்டு பேசிய ,தமிழ் தேசிய மக்கள் முன்னையின் கட்சி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

              இது சந்தர்ப்பவாத அரசியலா

              இது சந்தர்ப்பவாத அரசியலா அல்லது நிகழ்கால அரசியலில் இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி அதனால் எழப்போகும் ஆட்சி கவிழ்ப்பு

              மக்கள் போராட்டங்கள் ஊடாக தமக்கு எதிர்ப்பு கிளப்பும் என்பதை அறிந்து இந்த இணைப்பை ஏற்படுத்த முற்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .

              காணொளியை முழுமையாக பாருங்கள்