9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்
Spread the love

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன் ,14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அயல் வீடுகளில் வசிக்கும் 2 சிறுவர்களும் நண்பர்களாவர்.

9 வயதுடைய சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

9 வயதுடைய சிறுவனின் உடலில் 6 அல்லது 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயதுடைய சிறுவனின்ன வீட்டில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.