6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
Spread the love

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு ,பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் 57 பிரிவிலும்

கெம்பியன் கீழ் பிரிவிலும் நேற்று (22) இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய வானிலையால் ஆறு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் குடியிருப்புகளில் உள்ள கூறைதகடுகள் வீசிய பலத்த காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ளது இதனால் ஆறு குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் இருந்த சில பொருட்கள் சேதமடைந்துள்ளது.

வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இனைந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவளை நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக பொகவந்தலாவ மற்றும் இராணிகாடு வரையிலான பிரதான வீதிகளின் அருகாமையில் உள்ள

மரங்கள் சரிந்து விழுந்துள்ளமையினால் பொகவந்தலாவ பிரதேசத்திற்கான மின்சாரம் முழுமையாக தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் கேசல்கமுவ ஒயாவின்

அன்மையில் உள்ள குடியிருப்பாளர்களை அவமானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.