விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் ! photo

Spread the love

விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் !

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில்,

அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற

சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை இந்த lifttheban.uk இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின்

இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றதென குறிப்பிடுகின்றனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில்,

பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும்

தமது விருப்பினை இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின்

செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

இலங்கை
இலங்கை

Author: நலன் விரும்பி

Leave a Reply