வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள்
வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள் ,2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) வருமான வரியை செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டிக்கு உட்படுத்தப்படுவார் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், எந்தவொரு நபரும் எந்த வகையான செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும்.
அன்றைய திகதிக்குப் பிறகு நிலுவையில் உள்ள வரிகள் இருந்தால், அவற்றை மீட்பதற்கு உள்நாட்டு வருமானச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான மேலதிக
தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது









