மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை

Spread the love

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை

பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சுப்ரீம் கோர்ட்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது, பா.ஜ.க.வை சார்ந்த அஜய்

ஷ்யாம், சிம்லா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி

அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக வினோத் துவா பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு

மற்றும் இமாச்சல பிரதேச அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்குமாறு வினோத் துவா விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு

தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை தொடர்ந்து நடத்த சிம்லா போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளன

      Leave a Reply