மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil
Spread the love

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் இது தாங்க .
நம்ம வீட்டில் நாங்கள் கடாயில தோசை ஒட்டாமல் செய்வது எப்படி .

தோசை சுடும் பொழுது ஒட்டாம பிஞ்சிடாது வந்திடனும் ,அப்போதாங்க ,அது தரமானதா இருக்கும் .

அப்படி மசாலா தோசை ஒட்டாமல் ,பிஞ்சிடாது வருவதற்கு என்ன செய்யணும்.வீட்டில் மசாலா தோசை சமையல் செய்வது எப்படி .

வாங்க மசாலா தோசை செய்முறைக்குள் போகலாம்

செய்முறை ஒன்று

இந்த மசாலா தோசை செய்வதற்கு வேண்டிய அரிசி எடுத்து கொள்ளுங்க .பச்சை அரிசி எடுத்து கொள்ளுங்க . அப்போது தான் நாம் சொன்னது போல ஒட்டாம வரும் .


அரசி ,உளுந்து ,கடலை பருப்பு ,வெந்தயம் யாவும் தண்ணியில போட்டு கழுவுங்க .

வடிவாக கழுவி எடுத்து மீளவும் ,தண்ணி ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வையுங்க .

இது கூடவே அவல் எடுங்க .அந்த அவல் ,அத்தனையும் தண்ணியில ஊற வைத்து கொள்ளுங்க .வெள்ளை அவல் இதுக்கு சிறந்த ஒன்று .இந்த அவலும் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

இப்போ அரிசி உளுந்து அவல் எல்லாம் ஊறி அழகா வந்திருக்கு .தண்ணியில வடிய வைத்து ,எல்லாத்தையும் எடுத்து மிக்சியில் போட்டுக்கலாம் .

மிக்சியில் தேவையான தண்ணி சேர்த்திருங்க .அப்புறம் அதனை அரைத்து எடுத்து கொள்ளுங்க .


அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதற்குள் மாவுடன் கொஞ்சம் உப்பு கலந்து கொள்ளுங்க .

மாவை நன்றாகவே கலக்கி கொள்ளுங்க .அரைத்த மாவை எட்டு மணி நேரம் ஊறவைத்து ,பொங்க விடுங்க.
பொங்கி வந்த மாவை கரண்டி வைத்து கலக்கி எடுங்க .

செய்முறை இரண்டு

இப்போ தோசை டவா ரெடி பண்ணி கொள்ளுங்க .அப்புறம் தண்ணி தெளித்து கிளீன் பண்ணிருங்க .

தோசை மாவை ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளுங்க .இப்போ பாருங்க மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

இப்போ இதை மாற்றி இன்னுமொரு முறையில் செய்துக்கலாம் .

அது எப்படி என்றால் தோசை மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளுங்க .அப்புறம் அந்த மாவை எடுத்து ,அந்த தோசை மாவுக்குள் ரவை மற்றும் ,ஒரு கரண்டி சக்கரை சேர்த்து கொள்ளுங்க .

மாவை ரெம்ப மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

ரவை ஊறி வந்த பின்னர், 15 நிமிடம் கழித்து ,தோசை டவா அதில் ஊற்றி கொள்ளுங்க .
இப்போ ரெம்பவே மொறு மொறுன்னு தோசை வந்திருக்கு .

இப்போ நீங்க செய்து வைத்த மசாலா பொடி மற்றும் சட்னி வைத்து சாப்பிடுங்க .செமையா இருக்கும் .

மசாலா தோசை மொறு மொறுனு வரும் ரகசியம் crispy dosa in tamil samayal tamil

நேரம் தாங்க கொஞ்சம் கூட பிடிக்குது . ஆனால் என்ன பண்ண ,தரமான தோசை இப்படி தாங்க செய்து கொள்ள முடியும் .


கடையில விற்கிற தோசை ,தரத்திற்கு இந்த தோசை நாம பெற்று கொண்டோம் .

வாரத்தில இப்படி இரண்டு தடவை ,இந்த மாதிரி தோசை சமையல் செய்து அசத்துங்க .

நம்ம வீட்டில இன்று அழகான தோசை சமையல் செய்தாச்சு .

ரெம்ப தோசை சட்னியுடன் சாப்பிட்டதில தூக்கம் வருது தலைவா .

Author: நலன் விரும்பி

Leave a Reply