சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை

Spread the love

சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை

ராப் மெஷின்ஸ் வேர்ல்ட்வைட் மற்றும் வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் டேனியா பால்சன் நடித்த ஏடிகே-வின் ‘பச்சை’ இசை வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது.

சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை
பச்சை ஆல்பம் போஸ்டர்


இயற்கை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பச்சை’ இசை வீடியோ டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலை வைல்ட்லென்ஸ்

ஸ்டுடியோவுடன் இணைந்து ராப் மெஷின்ஸ் வேர்ல்டுவைடின் நிர்வாக இயக்குநர் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ளார்.

ராப்பர் ஏடிகே என்கிற ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் இந்த இசை வீடியோவை இயக்கியுள்ளதோடு பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா,

விஜய் ஆண்டனி, தமன் மற்றும் டி இமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஏடிகே பணியாற்றியுள்ளார்.

‘பச்சை’ பாடலை இசையமைத்து பாடியிருப்பவர் பிரியாமாலி. இதற்கு முன்பு இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகியோருடன் இவர் பணிபுரிந்துள்ளார்.

டிக் டாக் பிரபலம் டேனியா பால்சன் இந்த பாடலில் நாயகியாக நடித்துள்ளார். ஏடிகே சிறப்பு

தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு இளம் பெண் வனப்பகுதிக்குள் ஓடி, புதிய காற்றை சுவாசித்து

, அங்கு கிடைக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது போல இந்த பாடலின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தலைப்புக்கேற்றார் போல் பாடலுக்கான வரிகள் இயற்கையின் முக்கியத்துவத்தை

வலியுறுத்துகின்றன, காட்சிகள் கண்ணனுக்கு இனிமையாக அமைந்துள்ளன. வைல்ட்லென்ஸ்

ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் தீபன் ராஜ் இந்த இசை வீடியோவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    Leave a Reply