நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்

Spread the love

நான் சொன்னது சரியே -கதிர்காமரின் உறவினர் சுமந்திரன் இறுமாப்பு – கொதிப்பில் தமிழர்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் அந்த மண்ணில் முற்றாக அழிக்க பட்டதன் பின்னர் ,

பல் வேறு குழுக்களாக விளங்கி ,இலங்கை அரசுக்கு துணை நின்ற தமிழ் போராளி குழுக்களை ஒன்றிணைத்து


,கால தேவை கருதி ,தராகி சிவராம்,யோசப் பரராயசிங்கம்,மற்றும் ஆண்டன் பாலசிங்கத்தினால் இந்த கட்சி உருவாக்க பட்டது

அவ்விதம் உருவாக்க பட்ட இந்த கட்சியில் , ஐந்து வயதில் இருந்து சிங்க பால்குடித்து ,கொழும்பில் வளர்ந்து வந்த சுமந்திரன் ,தான்

இருக்கும் கட்சியை ஆரம்பித்த தமிழீ விடுதலை புலிகளை கொச்சையாக பேசியுள்ளார்

இவரது கடந்த பத்து வருட கால ஆட்சி ,செயல்படுகள் மக்கள் முன் விரோதத்தைதையும் ,புலிகள் மீதான காழ் புணர்ச்சியையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது

நாம் கணித்தது போன்றே இப்பொழுது புதிய மறுப்பு ஒன்றை வெளியிட்டு மக்கள் மனதில் இந்த கருத்தை சரிதான் என்ற வகையில் விளக்கம் கொடுக்க முனைகின்றார் சுமந்திரன்

மேலும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கடுமையாக சாடியுள்ளார் ,அத்துடன் மக்கள் என குறிப்பிடுகின்றார்

நீ யாரை மக்கள் என்கிறாய் என தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ..

கொரனோ நோயினால் மக்கள் பாதிக்க பட்டு உண்ண உணவின்றி தவித்த பொழுது ஏசி ரூமில் இருந்த நீ என்ன செய்தாய் என தமிழ் மக்கள் ஆவேசமாக கேள்விகளை எழுப்புகின்றனர்

வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ,மக்கள் செய்கின்ற உதவிகள் கூட இந்த சுமந்திரனால் செய்திட முடியவில்லை

சிங்கள அரச சட்டத்தரணியாக உள்ள இவர், எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்று தரப்போகின்றார் …?

ஐக்கிய நாடுகள் சபையில சென்று அந்த போர்க் குற்ற ,இன அழிப்பு விடயத்தை நீர்த்து போக செய்தவர் இந்த சுமந்திரன் .

கதிர்காமர் மற்றும் தயாசிறி சோமசுந்தரம் ஆகியோரின் நெருங்கிய உறவினரான இந்த சுமந்திரன்

விடுதலை புலிகள் போராட்டத்த்தை காட்டி கொடுத்து வந்ததுடன் , சிறார் போராளிகளை ,புலிகள் படையில் இணைகின்றனர் என சந்திரிக்கா ஆட்சியில் பரப்புரை செய்தவர் ,

இந்த கதிர்காமர் ,இந்த விடயத்திற்கு திட்டம் போட்டு கொடுத்தது இந்த தயாசிறி சோமசுந்தரம் என்பவர்

அதன் பின்னர் மகிந்த ஆட்சியில் இந்த சுமந்திரன் தமிழர் தேசிய கூட்டமைப்பில் ,உறுப்பினர் ,முகியஸ்தர் என்ற வகையில் தமிழ்

மக்களின் விடுதலை போராட்த்தை அடகுவைத்து ,பின்கதவு வழியாக பரிமாறல்கள் ஊடாக காட்டி கொடுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்

இந்த தமிழ் தேசிய உணர்வு அற்ற சுமந்திரனை நம்பி வாக்களித்த மக்கள் இப்பொழுது வெட்க படுகின்றனர்

இவர் நிற்கும் தொகுதியில் இந்த சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் ,என்பதே தமிழர்கள் ஆவலாக உள்ளது ,

மாவை ,சம்பந்தன் ,மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனடியாக கூடி சுமந்திரனை கட்சி பதவியில்இருந்து அகற்ற வேண்டும் ,இல்லாது

விடின் இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு பலத்த தோல்வியைச சந்திக்கும் என்பதை அடித்து கூறலாம் .

மக்களின் வெறுப்பை சந்தித்துள்ள சுமந்திரன் தன்னை நல்லவராக காட்டிட இப்பொழுது பல விடயங்களை நகர்த்த முனைகின்றார் ,இந்த கயவனை ,இந்த கறுத்தாட்டை ஓட ஓட மக்களே விரட்டுங்கள்

செருப்பு அடி வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக உள்ளது .கூட்டமைப்பு விரைந்து இவரை இந்த கட்சியில் இருந்து மறு பேச்சின்றி விலத்திட வேண்டும் .

18 ஆசனங்களுடன் உள்ள கூட்டமைப்பு இந்த பாரளுமன்ற தேர்தலில் பத்துக்கு குறைவான ஆசனங்களுடன் பல்லு பிடுங்கிய பாம்பாக மாற போகிறது என்பதை அடித்து கூறலாம்

உடனடி இந்த மாற்றத்தினை செய்திட தவறினால் இவ்வாறான செயல் இழக்கும் நிலைக்கு கூட்டமைப்பு செல்லும் ,அந்த

வரலாற்றாது தவறினை கூட்டமைப்பு செய்திட முயன்றால் ,கட்சி மேலும் சில ஆண்டுகளில் உடைந்து காணாமல் போகும் புறநிலைகள் உருவாகும்

அது கட்சி உள்ளே மிக விரிசலாக வளர்ந்து வருகிறது

கூட்டமைப்பிற்கு பிடித்த சனியன் இந்த சுமந்திரன் .இதனை கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்

பல ஒட்டு குழுக்களின் ஒன்றியமாக விளங்கும் கூட்டமைப்பு ,ஒட்டு குழு போன்றே சிதைந்து போவதை தடுக்க முடியாது,தாம் ஒட்டு குழு

தான் என்ற வகையில் கூட்டமைப்பின் அங்கத்துவ தலைமை உறுப்பினர் சுமந்திரன் பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன

இப்போது பந்து உங்கள் காலில் .கொரனோ பீதி காரணமாக மக்கள் வாக்கு வாங்கி செயல் இழந்தே காணப்படும் ,கள்ள வாக்கே முன்னிலை பெறும்

சுமந்திரன் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பு கருத்தை கூறி விட்டனர் ,எனவே அவரை விரைந்து கட்சியில் இருந்து

விலக்க வேண்டும் ,என்பதே தமிழர்களின் எதிர்ப்பும் ,விருப்பமுமாக உள்ளது

  • வன்னி மைந்தன் –

Leave a Reply