கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.
இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
நாளை நான்காம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்
- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

















