கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு

Spread the love

கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது

எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

துறைநீலாவணையில் நேற்று முன்தினம் (29) சனிக்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

துறைநீலாவனை பொது மக்களும் துறையூர் முற்போக்கு தமிழர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவித்து,

பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவம் அழிக்கப்பட்டது. இதன்போது மேலும் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசிய

கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும், அதனால்

தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

கடந்த காலங்களில் சிலர் கூறியிருந்தார்கள் நான் வீட்டில் கேட்டதனால்தான் வெற்றிபெற்றிருந்தேன் என்று, அப்படியானால் இம்முறை நாம் எப்படி வெற்றிபெற்றோம், இவை அனைத்தும்

வீட்டிற்கு கிடைத்த வாக்குக்களா, எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை பொறுத்தவரை உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் இந்த

மாகாணத்தில் கட்டியெழுப்பவேண்டும். இந்த மாவட்டத்தில் 58.9 வீதமாகவிருந்த நாங்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். எமது இன, வள, பொருளாதாரம் போன்ற பல்வேறுபட்ட துறை

சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு அசமந்த போக்கில்தான் தமிழர்களை பொறுத்தவரையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலைமை

மாற்றியமைக்கப்படவேண்டும். இதனடிப்படியில் ஆரோக்கியமான ஒரு அரசியலை நாம் இந்த மாகாணத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த மாகாணத்திலே பல பிரச்சனைகளோடு, வேதனைகளோடு, சவால்களோடு இருக்கின்ற ஒரே ஒரு சமூகமென்றால் அது தமிழ் சமூகமாகத்தான் இருக்கும். இதை யாரும் மறுக்கவும் முடியாது

மறைக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு எமது மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்தைக் கொண்டு பிரதமர் அவர்களுடைய வழிகாட்டலில் பொதுஜன பெரமுன கட்சியின்

தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அவர்களது நெறிப்படுத்தலில் இந்த தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எமக்கு கிடைத்துள்ளது. இந்த

அமைச்சின் ஊடாக நாங்கள் எமது மக்களை பாதுகாப்பதுடன், எமது பணிகளை நாடு பூராகவும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்..

Leave a Reply