கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்

Spread the love

கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்

கடந்த தினம் கிளிநொச்சி பாடாசலையில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி இருபத்தி ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,

இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளான மாணவர்களில் பதினொரு பேர் கிளிநொச்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலையில் குளவி கூடு ஒன்றை குரங்குகள் கலைக்க முற்பட்ட நிலையில் சிதறி பரவிய குளவிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதலை நடத்தியது

இந்த குளவிகள் வகுப்பறை எங்கும் பரவிய நிலையில் ,கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,அவ்வேளை மாணவர்கள் சிதறி ஓடிய நிலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது

சில நிமிடங்கள் அங்கு என்ன தான் இடம்பெறுகிறது என்பதை அறியாது மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர் ,மேலும் கிளிநொச்சி பாடசாலையின் பிரதான வாயிலை உரிய முறையில் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளது

அனர்த்தம் ஒன்று நிகழ்கின்ற பொழுது அவ்வேளை அங்கு காவலுக்கு உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற உரிய கொள்கை விளக்க விதிகள் வழங்கப்படாத நிலையை இங்கு அவதானிக்க முடிந்ததாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

பிரபலமாக விளங்கும் கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் படு காயம் அடைந்த இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


படுகாயமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பொழுது மருத்துவர்கள் உரிய முறையில் அணுகி சிகிச்சை அளித்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பாடசாலை வளாகத்தில் குளவிகள் நீண்ட நாளாக கூடு அமைத்திருந்த பொழுதும் மாணவர்கள் இல்லாத வேளை பார்த்து அந்த குளவி கூட்டினை அகற்றி இருந்தால்

கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் இவ்விதம் காயங்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என்ற கருத்து பெற்றோர்கள் வாயிலாக வெளியாகியுள்ளது

பாடசாலைக்கு பிள்ளைகளை கற்றால் நெறிக்கு அனுப்பி வைத்தோம் ஆனால் பாடசாலையின் அசமந்த போக்கின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சில பெற்றோர்கள் குமுறியுள்ளனர் .

  • வன்னி மைந்தன்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply