காலியில் பொலிஸ் மீது தாக்குதல்

Spread the love

காலியில் பொலிஸ் மீது தாக்குதல்

காலி ; காலியில் எரிபொருள் நிலையத்தில் நிரையில் நின்ற மக்களை முந்தி கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் எடுத்துவரப் பட்டு கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி சென்ற சம்பவம் கை கலப்பாக மாறியுள்ளது .

காலியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் மீது நடத்த பட்ட தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் இயல்பு வாழ்வு முடங்கியுள்ளதுடன் மக்கள் தொழிலும் பாதிக்க பட்டுள்ளது .


மீள நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனின் எரிபொருள் விநியோகம் சீராக கிடைக்க பெற்றால் மட்டுமே நாட்டின் நிலவும் நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும்.

ஆனால் ஆளும் கோத்தபாய அரசினால் இதனை கையாள முடியாத நிலையில் மேலும் நாட்டில் நிலை மோசமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது.

தமது அதிகாரங்களை தக்க வைத்து அதன் ஊடாக தமது குடும்ப வியாபாரத்தை கவனித்து வரும் ராஜ பக்சே குடும்பத்தினால் நாட்டு மக்கள் இன்னல்களை தீர்த்து வைக்க முடியாது .

அதனால் தான் தற்போது கோட்டபாய ராஜபக்சே அரசு திணறிய வண்ணம் உள்ளது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply