கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

Spread the love

கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அகற்றும் செயற்பாடுகள் இராணுவ

அவசர உதவிக் குழு குண்டு செயலிழக்கும் பிரிவு ட்ரோன் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் சுமார் 300 படையினரின் பங்கு பற்றலுடன் நீர்கொழும்பு தொடக்கம் பொருதொட்ட வரையான 06

கிலோ மீற்றர் கடற்கரை பகுதியில் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கொழும்பு துரைமுகப்பகுதியில் தீபற்றி எரியும் சிப் எக்ஸபிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கியவை.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்புக்கு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

இந்நிலையில் கப்பலின் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு பயணத் தடை காலத்தில் மக்களின் அச்சங்களை தனிப்பதற்கும் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

வடமேற்கு கரையோர பகுதியில் இரசாயன நச்சுத் தன்மை கொண்ட கப்பல் கொள்கலன்களில் இருந்து மிதக்கும் பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதாக பொலிஸார்

உறுதிப்படுத்தியிருந்ததோடு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுமாறு இராணுவ தலைமையகத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் கப்பலின் எச்சங்களை சேகரிக்க கூடுவோரை

கலைக்கும் பணிகளில் பொலிஸாராருக்கு உதவிகளை வழங்குவதற்காக படையினர் குறித்த பகுதியில் அமர்த்தப்பட்டனர்.

அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு கொவிட்19 பயணத் தடை காலத்தில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிற்கு

ஒத்துழைப்பு வழங்குவதுடன் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்பு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

இந்நிலையில் கப்பல் பணியாளர்களில் இருவர் காயங்களுடனும் ஏனையவர்கள் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ

செனரத் யாப்பா 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

Author: நலன் விரும்பி

Leave a Reply