கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Spread the love

கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

விவகாரத்தில் கனேடிய அரசுக்கு அழுத்தம் கொடுகின்ற செயல்முனைப்பில்

கனேடிய தமிழ்சமூகம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்கான செயல்முனைப்பினை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தி முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவை மையப்படுத்தி புதிய தீர்மானமொன்று கூட்டுநாடுகளால்

ஐ.நாவில் கொண்டுவரப்படலாம் என்ற நிலையில், அக்கூட்டு நாடுகளில்

ஒன்றாக கனடா காணப்படுகின்ற நிலையில், சிறிலங்காவை சர்வதேச

குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துகின்ற வகையில் தீர்மானம் அமையவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தப்படுகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபையும்.. கனேடிய தமிழ்சமூகத்தின் வகிபாகமும்…

என்ற தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இணைவழி கருத்தாடல் நிகழ்வில் இதற்கான செயற்திட்டங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

கனேடிய அரசுக்கு அழுத்தங் கொடுக்கும் வகையில், இணைவழியிலான

https://ctcja.com/ கையெழுத்து வேட்டை கனடா தமிழ்அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பினால்

முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கனேடிய நேரம்

இரவு எட்டுமணிக்கு ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் திரு.லோகன்

கணபதிப்பிள்ளை அவர்களினால் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை

உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்

அறிக்கை சுட்டிக்காட்டி கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Leave a Reply