உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது

Spread the love

உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது

உலகளாவிய ரீதியில் மக்கள் அதிகம் உப்பை உணவில் சுவைக்காக சேர்த்து வருகின்றனர் .


இந்த உப்பை உணவில் அதிகம் சேர்ப்பதால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது .

இதுவே இதயத்தை பாதிக்கிறது .இதனால் உடல் நிலை கெட்டுப்போகிறது .

உணவில் அதிக உப்பை சேர்ப்பதால் வாயுக்கு சுவையாக உணவுகள் கிடைக்கலாம் .

ஆனால் நமது வாழ்வின் வாழும் ஆண்டு சுருங்கி விடுகிறது என்ற அபாயகர ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

ஐந்து லட்சம் மக்கள் மத்தியில் நடத்த பட்ட ஆய்வில் அதிகம் உப்பை உணவில் சேர்த்து கொள்ளும் ஆண் பெண்களில் பெண்கள் ஒன்றரை வருடம் ஆயுளை குறைத்து கொள்கின்றனர் .


அதுவே ஆண்கள் இரண்டரை வருட ஆயூளை குறைத்து கொள்ளும் நிலை கண்டு பிடிக்க பட்டுள்ளது.

மேலும் உப்பை அதிகம் உண்கின்ற மக்கள் அகால மரணத்தை அதிகம் சம்பாதித்து கொள்கின்றனர்.

இதயத்தின் அளவு அதிகம் வழமைக்கு மீறி துடித்து விடுகிறது .இதனால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இந்த உயிராபத்து உப்பால் இடம்பெறுகிறது.

இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவை மாரடைப்பை ஏற்படுத்தும் .ஆக உப்பை சுவைக்கு அதிகம் சேர்ப்பதால் உங்கள் உடல் நிலைக்கு நீங்களே கேடு விளைவித்து கொள்கின்றீர்கள் .

அதனால் உணவில் உப்பை குறைப்போம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பபோம் .

Error: View 6f7d65ec2l may not exist

Leave a Reply